ஆண்ட்ராய்டு சாதனத்தை டிவியில் கொண்டு வருவது எப்படி?
உங்கள் கிரோம்காஸ்ட் (டெல் ஹோமில் $35.00) சாதனம் இணைந்துள்ள அதே வைஃபை நெட்வர்க்கில் நீங்களும் இணைந்துள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.
உங்களிடம் ஒரு கிரோம்காஸ்ட் திறன் கொண்ட ஃபோன் இருந்தால், அதன் திரையை ஒரு டிவி திரையில் எளிதாக கொண்டு வர முடியும்.

உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் டிஸ்ப்ளேயை, டிவி திரைக்கு கொண்டு வருவதன் மூலம் சமீபகாலத்தில் நீங்கள் சென்ற ஒரு சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்களைக் காட்ட, ஒரு கேம் விளையாட அல்லது விளக்கத்தை அளிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் மூலம் எந்தொரு டிவிக்கும், உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனின் திரையைப் பிரதியிட வைக்க முடியும்.
இதற்கு உங்களிடம் ஆண்ட்ராய்டு 4.4.2 மற்றும் அதற்கு மேல் உள்ள பதிப்புகளில் செயல்படும் ஒரு ஃபோன் அல்லது டேப்லெட் தேவைப்படுவதோடு, அதில் கிரோம்காஸ்ட்டும் இருக்க வேண்டும். அல்லது கிரோம்காஸ்ட்டிற்கு ஒத்த சாதனம் தேவைப்படுகிறது.

இது தவிர, கீழ்க்காணும் வழிமுறைகளின் மூலம் ஒரு ரோகு-வை பயன்படுத்தி, உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை டிவியில் பிரதிபலிக்க செய்யலாம். $20, £15 அல்லது AU$40 என்ற குறைந்த விலையில் ஒரு கிரோம்காஸ்ட்டை வாங்கிவிட்டால், வெறுமனே ஃபோனை பிரதிபலிப்பதோடு நில்லாமல், அதற்கும் மேலாக காரியங்களைச் செய்ய முடியும்.
கூகுள் நோட்ஸின் ஆதரவு பக்கத்தில், ஆண்ட்ராய்டு 4.2.2 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்பில் செயல்படும் எந்தொரு சாதனத்தின் திரையையும், ஒரு டிவியில் பிரதியிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற பணிக்கு என சிறப்பாக பொருந்தும் சில சாதனங்களும் உண்டு. இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இதற்கு ஏற்ற சாதனங்களின் ஒரு பட்டியலை, இங்கே காணலாம்.

இந்தச் சாதனங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பட்டியலிடப்படாத சாதனங்களை நான் சோதித்து பார்த்த போது, செயல்பாட்டில் ஒரு பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் காண முடியவில்லை. ஆனால் நீங்கள் செய்யும் சோதனைகளின் முடிவுகள் வேறுபட வாய்ப்புள்ளது.
ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தின் திரையை, டிவிக்கு பிரதியெடுப்பது மிகவும் எளிய காரியமாகும்.
உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் ஹோம் (டெல் ஹோமில் $99.00) அப்ளிகேஷனை நிறுவ வேண்டும். ப்ளே ஸ்டோரில் இருந்து அதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்கள் கிரோம்காஸ்ட் (டெல் ஹோமில் $35.00) சாதனம் இணைந்துள்ள அதே வைஃபை நெட்வர்க்கில் நீங்களும் இணைந்துள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.
கூகுள் ஹோம் அப்ளிகேஷனைத் திறந்த பிறகு, மெனுவை நகர்த்தி, அதில் திரை/ஆடியோவை செயல்படுத்து என்பதை தேர்ந்தெடுக்கவும்.
நீலநிறத்திலான பொத்தானை தட்டிய பிறகு, நீங்கள் விரும்பும் சாதனத்துடன் இணைக்க முடியும்.
சில சாதனங்களில் மற்றொரு முறை காணப்படுகிறது. உங்கள் சாதனத்தின் திரையை மேலிருந்து கீழ்நோக்கி இழுப்பதன் மூலம் விரைவு அமைப்புகள் பேனை காணலாம். அங்கு ஒரு செயல்படுத்து அல்லது செயல்படுத்தும் திரை பொத்தான் இருக்கும் பட்சத்தில், அதை நீங்கள் தேர்ந்தெடுத்து, விரும்பும் சாதனத்தில் உங்கள் திரையை பகிர முடியும்.

அங்கு செயல்படுத்து தேர்வு இல்லாத பட்சத்தில், அதை மறுசீரமைப்பு அல்லது விரைவு அமைப்பு பேனில் டைல்ஸை திருத்தம் செய்ய பெரும்பாலான சாதனங்களின் தயாரிப்பாளர்கள் அனுமதி அளிக்கிறார்கள். அதில் ஒரு அமைப்புகள் ஐகான் அல்லது செயல்படுத்து ஐகானை இணைக்கும் வகையிலான ஒரு திருத்தம் செய்யும் ஐகான் இருக்கிறதா என்று பார்க்கவும்.
உங்கள் திரையை விரும்பிய சாதனத்தில் செயல்படுத்த அல்லது பிரதியிட ஆரம்பித்த உடன், உங்கள் அறிவிப்புகள் பகுதியில் ஒரு அறிவிப்பு காட்டப்படும். இதைத் தட்டுவதன் மூலம் பிரதியிடுவதை நிறுத்த முடியும்.


Click it and Unblock the Notifications