உலகத்திலேயே ஜிமெயில் தான் அதிகம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. அனைவருக்கும் இன்றியமையாத மற்றும் மிகவும் பயனுள்ள ஒன்றான இதில் பெரும்பாலானோர் எதிரகொள்ளும் ஒரே பிரச்சனை - சேமிப்புதிறனை (Storage) மேலாண்மை செய்வது. நமக்கு ஒதுக்கப்பட்ட 15ஜிபி சேமிப்பு திறன் எப்போது முடியும் என கண்காணித்து கொண்டே இருக்க முடியாது மற்றும் அதிக சேமிப்பு திறன் வேண்டுமெனில் கூகுளுக்கு நாம் பணம் செலுத்த நேரிடும். அப்படி பணம் செலுத்த தயாராகிவிட்டீர்களா? அதற்கு முன் இந்த கட்டுரை படித்துவிட்டு உங்கள் ஜிமெயில் கணக்கிற்கான சேமிப்பு திறனை எப்படி திறமையாக மேலாண்மை செய்வது என தெரிந்துகொண்டு முடிவெடுங்கள்.

படி #1
ஜிமெயில் கணக்கில் உள்நுழையுங்கள்
படி #2
அடிபக்கத்திற்கு ஸ்க்ரோல் செய்தால், நீங்கள் சேமிப்பு ந
திறனை பயன்படுத்தியுள்ளீர் என தெரியும் . அதற்கு கீழேயுள்ள 'Manage' ஐ தேர்வு செய்யவும்.
படி #3
அதை கிளிக் செய்தவுடன் ' Manage Drive' எனும் பக்கத்திற்கு செல்லும். அங்கு நீங்கள் எவ்வளவு சேமிப்பு திறனை பயன்படுத்தியுள்ளீர் என்பதை வட்ட விளக்கப்படம் (pie chart)மூலம் பார்க்கமுடியும் மற்றும் அதிக சேமிப்பு திறனை பெறும் பல்வேறு திட்ட விவரங்கள் இருக்கும்.

படி #4
வட்ட விளக்கப்படத்திற்கு (Pie chart) கீழே உள்ள 'view details' என்பதை கிளிக் செய்யவும்.
படி #5
இதன் மூலம் எவ்வளவு சேமிப்பு திறனை ஜிமெயில்,கூகுள் டிரைவ், போட்டோஸ் பயன்படுத்தியுள்ளது என்பதை துல்லியமாக காண முடியும்.
படி #6
பின்னர் 'Learn more' என்பதை தேர்வு செய்யவும்.

படி #7
அது கூகுள் டிரைவ் பக்கத்திற்கு அழைத்து செல்லும். அங்கு சேமிப்பை எப்படி மேலாண்மை செய்வது என்ற அறிவுறுத்தல்களை காண முடியும்.
படி #8
'Trash' ல் மிக அதிக மெயில்கள் இருந்தால் drive.google.com என்ற முகவரிக்கு செல்லவும். Trash ல் எந்த முக்கிய/தேவையான பைல்களும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு 'Empty Trash' என்பதை கிளிக் செய்யவும்.
படி #9
கூகுள் டிரைவில் 'Option 1: Clear Space' என்ற பகுதிக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து, எந்த பைல் அதிக இடத்தை அடைத்து கொள்கிறது என்பதை காணலாம். இதன் மூலம் எந்த பைல் தேவையில்லையோ அதை டிலிட் செய்யலாம்.

படி #10
உங்கள் புகைப்படங்கள் அதிக சேமிப்பை திறனை எடுத்துக்கொண்டால், கூகுள் டிரைவ் பக்கத்தில் உள்ள 'Learn more about photo storage' பக்கத்திற்கு செல்லவும். புதிய பக்கத்தில் புகைப்படங்களின் தரத்தை குறைத்துக்கொள்ளலாம்.

படி #11
ஜிமெயிலின் Spam, trash போல்டர்களும் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால், அவற்றை முற்றிலும் அழித்துவிடவும். பின்னர் அடிக்கடி தேவையில்லா ஈமெயில்-களை நீக்கி வரவும்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.