ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி?

இவ்வாறான சூழலில் கேமரா ஆப் அழைப்புகளை மேற்கொள்ளவும், பேங்கிங் ஆப் கேமராவை இயக்க அனுமதி கேட்கும் போது கோபம் அதிகரிக்கும்.

|

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செயலிகளை பயன்படுத்துவோர் கடந்து வந்த பிரச்சனைகளில் இது முதன்மையானது எனலாம். ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் போனின் அம்சங்களை பயன்படுத்த அனுமதி கேட்பது பலருக்கு எரிச்சலாகவும், சிலருக்கு தொந்தரவாகவும் இருந்திருக்கும்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி?

இவ்வாறான சூழலில் கேமரா ஆப் அழைப்புகளை மேற்கொள்ளவும், பேங்கிங் ஆப் கேமராவை இயக்க அனுமதி கேட்கும் போது கோபம் அதிகரிக்கும். அடிப்படை பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செயலியை கட்டுப்படுத்த பலர் நினைத்திருந்தாலும், செயலியை பயன்படுத்த இவற்றை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது.

குறிப்பாக ஆன்ட்ராய்டு லாலிபாப் மற்றும் அதற்கும் பழைய இயங்குதளங்களில் இந்த பிரச்சனை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வந்தது. எனினும், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட அப்டேட்களில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி?

சமீபத்திய ஆன்ட்ராய்டு தளங்களில் ஒவ்வொரு செயலியிலும் பயனர் விரும்பும் அனுமதிகளை வழங்கி, தேவையற்றதை நிராகரித்து தொடர்ந்து செயலியை பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உங்களது நோட்டிஃபிகேஷன்களை இயக்க இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று அனைத்து அனுமதிகளையும் பார்த்து அவற்றை பயன்படுத்தும் செயலிகளை தெரிந்து கொள்வது மற்றொன்று ஒவ்வொரு செயலியும் பயன்படுத்தும் அனுமதிகளை தெரிந்து கொள்வது.

இங்கு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளுக்கான அனுமதியை (ஆப் பெர்மிஷன்களை) இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி?

1 - அனுமதிக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயலிகளை கட்டுபடுத்துவது எப்படி?

- ஸ்மார்ட்போனின் லான்ச்சர்-ஐ திறந்து செட்டிங்ஸ் மெனு செல்லவும்.

- ஆப்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன் (Apps and Notification) செட்டிங்ஸ் செல்லவும்.

- ஆப் பெர்மிஷன் (App permission) ஆப்ஷனை க்ளிக் செய்து அனைத்து வித அனுமதிகளையும் பார்த்து அவற்றை மாற்றலாம்.

- ஒவ்வொரு அனுமதியையும் க்ளிக் செய்து, அதனை எத்தனை செயலிகள் பயன்படுத்துகின்றன என்பதை பார்க்க முடியும்.

- உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் செட்டிங்களை டிசேபிள் செய்யலாம்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி?

2 - செயலிகளின் அடிப்படையில் அனுமதியை இயக்குவது எப்படி?

- ஸ்மார்ட்போனின் லான்ச்சர்-ஐ திறந்து செட்டிங்ஸ் மெனு செல்லவும்.

- ஆப்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன் (Apps and Notification) செட்டிங்ஸ் செல்லவும்.

- ஆப்ஸ் பட்டியலை முழுமையாக பார்க்க சீ ஆல் ஆப்ஸ் (See all apps) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

- இனி செயலியை தேர்வு செய்து அனுமதியை (Permissions) இயக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to manage specific permission for your apps on an Android phone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X