உங்களை ஐபோன் இல் மீமோஜி உருவாக்குவது எப்படி? வாங்க பார்ப்போம்.!

ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்று அனைத்துப் பிரிவினரும் இன்று செல்ஃபி எடுக்கும் பழக்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம்.

|

ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்று அனைத்துப் பிரிவினரும் இன்று செல்ஃபி எடுக்கும் பழக்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம்.

பல விதமான முக பாவனைகளை நாம் தினந்தோறும் இறக்குமதி செய்த வண்ணம் இருக்கிறோம். ஐபோன் பயனர்களுக்கு மட்டும் இது எனா விதிவிலக்கா, அவர்களையும் சொல்லவே வேண்டாம். ஐபோன் தயாரிப்புகளில் பற்பல வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

IOS 12

IOS 12

அதிலும் ஐபோனில் புகைப்படம் எடுப்பதற்காகவே அதனை வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். நம் முகபாவங்களை மிருகங்கள் செய்வது போல் மற்றும் "அனிமோஜி" வசதி ஐபோன் பயனர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதன் அடுத்த கட்டமாக ஐபோன் IOS 12 இல் மீமொஜி என்ற புது வசதி ஒன்றைக் களமிறங்கியுள்ளது ஐபோன் நிறுவனம்.

அனிமோஜி

அனிமோஜி

அனிமோஜியில் பாண்டா, யுனிகார்ன் போன்ற மிருகங்களின் இமோஜிகளில் எப்படி நமது பாவனைகளை செயல்படுத்த முடியுமோ, அதே போல் இந்த மீமொஜியிலும் நமது பாவங்களை கிப் வடிவமாக நண்பர்களுக்கு அனுப்ப முடியும். நம் விருப்பத்திற்கேற்ப மனித முகத்தை உருவாக்கி அதில் நமது பாவனைகளுக்கு ஏற்றவாறு ரெகார்ட் செய்து அதை நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.

மீமோஜி உருவாக்கம்

மீமோஜி உருவாக்கம்

முகத்தலின் வடிவம், கண், மூக்கு, உதடு மற்றும் தலை முடி என அனைத்தையும் நம் முகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி நம்மைப் போல ஒரு மீமோஜியை உருவாக்கி அதற்கு உணர்வு கொடுக்கலாம். தொப்பி, கண்ணாடி போன்ற ஆடை அலங்காரங்களையும் நம்மால் இதில் செயல்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

புதிய ஐபோன்

புதிய ஐபோன்

ஆனால் இந்த புதிய மீமொஜி வசதி ட்ரு-டெப்த் கேமரா சிஸ்டம் கொண்ட மாடல்களான புதிய ஐபோன் X மற்றும் இனி வரவிருக்கும் XS, XS Max, XR இல் மட்டுமே செயல்படும். பழைய ஐபோன் மாடல்களில் இது செயல்படாது. ஆனால் வீடியோ அல்லது கிப் பார்மட் இல் பயனர்கள் பார்க்க முடியும்.

செயல்முறை

செயல்முறை

மெசேஜ் செயலியில் இந்த மீமொஜி சேவையை எப்படிச் செயல்படுத்துவது என்று பார்க்கலாம்.

- ஸ்டேப் 1: உங்கள் ஐபோனில் மெசேஜ் செயலியை ஓபன் செய்யவேண்டும்.
- ஸ்டேப் 2: ஆப் ட்ராவர் இல் இருக்கும் அனிமோஜி ஐகானை செலக்ட் செய்ய வேண்டும்.
- ஸ்டேப் 3: அதில் இடது கடைசி வரை ஸ்க்ரோல் செய்து அங்கு இருக்கும் பிளஸ்(+) சிம்பலை செலக்ட் செய்யவேண்டும்.
- ஸ்டேப் 4: பின்னர் அதில் உங்களுக்கு பிடித்தமான அல்லது உங்களைப் போல ஒரு மீமோஜியை உருவாக்க வேண்டும்.
- ஸ்டேப் 5: உங்களுக்குத் திருப்தியான மீமோஜியை உருவகம் செய்த பிறகு திரையின் வலது மேல் ஓரத்தில் இருக்கும் டன்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

 எடிட் மீமோஜி

எடிட் மீமோஜி

நீங்கள் உருவாக்கம் செய்த மீமோஜியில் ஏதேனும் மாறுதல் செய்ய விரும்பினால் எடிட் கிளிக் செய்து, உங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். இப்போது உங்கள் எண்ணம் போல் பாவனைகளைக் காட்டி, நீங்கள் உருவாக்கிய மீமொஜிக்கு உயிர் கொடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to Make Your Own "Memoji": The Coolest New Feature of iOS 12 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X