கூகுள் குரோமை வேகமாக இயக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Written By:
    X

    கூகுள் குரோம் பிரெளசர் என்பது உலகின் மிகச்சிறந்த பிரெளசர்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. உலகில் இண்டர்நெட் உபயோகிப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிபேர் இந்த பிரெளசரைத்தான் பயன்படுத்துகின்றனர். டெக்ஸ்டாப், லேப்டாப், ஐபோன், ஆண்ட்ராய்டு போன் என அனைத்திலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளது.

    கூகுள் குரோமை வேகமாக இயக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

    மேலும் இதில் உள்ள வசதிகள், ஆன்லைன் செல்ல உதவும் எளிமை, புதியவர்களுக்கு புரியும்படியாக உள்ளது தான் இதன் சிறப்பு

    உலகின் மிகச்சிறந்த பிரெளசராக கருதப்பட்ட போதிலும் சில சமயம் இந்த பிரெளசர் மெதுவாக செயல்படுவதாக கூறப்படுவதுண்டு. அதிக டேப்கள் ஓபன் செய்து வைத்திருப்பது, தேவையில்லாத எக்ஸ்டென்ஷன்கள், போன்ற ஒருசில் காரணங்களால் இந்த பிரெளசர் மெதுவாக செயல்படும். இந்நிலையில் கூகுள் குரோம் பிரெளசரை வேகமாக இயங்க வைக்க என்னென்ன செய்யலாம் என்பதை தற்போது பார்ப்போம்

    கூகுள் குரோமை வேகமாக இயக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

    டெஸ்க்டாப் பயன்படுத்துபவர்களுக்கு:


    1. லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்யுங்கள்

    கூகுள் குரோம் அவ்வப்போது அப்டேட் வெர்ஷனை அறிமுகம் செய்யும், அந்த் நேரத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்தால் வேகமாக இயங்கும்

    2. பயன்படுத்தாத டேப்களை குளோஸ் செய்யுங்கள்:

    ஒருசிலர் தேவையில்லாமல் பல டேப்களை ஓப்பன் செய்து வைத்திருப்பார்கள். இதனால் பிரெளசர் மெதுவாக செயல்பட காரணமாகிறது. தேவையில்லாத பிரெளசரை பயன்படுத்தியவுடன் குளோஸ் செய்துவிட்டால் இந்த பிரச்சனை வராது.

    பொதுவாக ஒரு டேப்பை குளோஸை க்ளிக் செய்தாலே போதும்

    விண்டோஸ், லீனக்ஸ், மற்றும் கூகுள் ஓஎஸ் கம்ப்யூட்டர்களில் Ctrl+w அழுத்தியும் குளோஸ் செய்யலாம்

    மேக் ஒஎஸ் கம்ப்யூட்டரில் ⌘ + w என்ற ஷார்ட்கட்டை பயன்படுத்த வேண்டும்

    இரகசியமான ஆன்லைன் உரையாடல்களில் ஈடுபடுபவர் நீங்கள்.? உஷார்.!

    3. தேவையில்லாத எக்ஸ்டென்ஷன்களை நீக்கிவிடுங்கள்

    கூகுள் குரோமில் உள்ள எக்ஸ்டென்ஷன்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்துவிட்டால் அதை நீக்கிவிடுங்கள் அல்லது டர்ன் ஆஃப் செய்துவிடுங்கள். இதை செய்தால் கூகுள் குரோம் வழக்கமானதை விட அதிக வேகத்தில் இயங்கும்

    இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?


    *கூகுள் குரோமை ஓப்பன் செய்ய வேண்டும்

    *வலது ஓரத்தில் உள்ள டூல்ஸ் எக்ஸ்டென்ஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்

    *அதில் தேவையில்லாத எக்ஸ்டென்ஷன்களை டர்ன் ஆஃப் செய்ய வேண்டும்

    *எக்ஸ்டென்ஷன்களை டெலிட் செய்ய ரிமூவ் என்பதை அழுத்தினால் போதும்


    4. தேவையில்லாத பிளக்-இன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதா?

    அனிமேஷன் அல்லது PDF போன்றவற்றை பயன்படுத்த கண்டிப்பாக நாம் ஒருசில பிளக்-இன் களை பயன்படுத்தியிருப்போம். அந்த பிளக் இன்கள் இப்போதைக்கு தேவையில்லை என்றால் அதை டர்ன் ஆஃப செய்துவிடலாம். இதை செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

    *கம்ப்யூட்டரில் கூகுள் குரோமை ஓப்பன் செய்யுங்கள்

    *அட்ரஸ் பாரில்//plugins/ and press Enter என்று டைப் செய்யுங்கள்

    *பிளக் இன்களை டர்ன் ஆஃப் செய்ய அவற்றை டிஸேபிள் செய்யுங்கள்

    கூகுள் குரோமை வேகமாக இயக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

    குரோமில் prefetch உள்ளதா? என்பதை செக் செய்ய வேண்டும்

    கூகுள் குரோம் பிரெளசர் உங்கள் கம்ப்யூட்டரில் வேகமாக இயங்க வேண்டும் என்றால் prefetch ஆன் செய்யப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்ய வேண்டும். இதனை சோதனை செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா

    *உங்கள் கம்ப்யூட்டரில் கூகுள் குரோமை ஓப்பன் செய்யுங்கள்

    *வலது மேல்புறத்தில் உள்ள செட்டிங்கை க்ளிக் செய்யுங்கள்

    அதில் how advanced settings என்று கடைசியாக இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்

    *பின்னர் அதில் உள்ள பிரைவேசி ஆப்சனுக்கு சென்று how advanced settings என்று இருப்பதை டிக் செய்யுங்கள்

    ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனாளிகளுக்கு:


    1. அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள்:

    டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர் பயனாளிகளுக்கு கூறியதை போலவே அவ்வப்போது வரும் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்யுங்கள்

    2. பயன்படுத்தாத டேப்களை குளோஸ் செய்யுங்கள்:

    பயன்படுத்தாமல் ஓப்பன் செய்து வைத்திருக்கும் டேப்களால் பிரெளசர் மெதுவாக செயல்ப்டும். எனவே. தேவையில்லாத பிரெளசரை பயன்படுத்தியவுடன் குளோஸ் செய்துவிடுங்கள். இதற்கு

    *குரோமை ஓப்பன் செய்யுங்கள்

    *வலது மேல் புறத்தில் உள்ள டேப் சுவிட்சை டேப் செய்தால் அனைத்து டேப்களையும் பார்க்கலாம்

    *வலது மேல்புறத்தில் குளோஸ் செய்ய வேண்டிய டேப்களை குளோஸ் செய்யலாம்

    ஸ்வைப் செய்தும் டேப்பை குளோஸ் செய்யலாம்

    3. கண்டிப்பாக prefetchஐ செக் செய்யுங்கள்

    கூகுள் குரோம் பிரெளசர் உங்கள் கம்ப்யூட்டரில் வேகமாக இயங்க வேண்டும் என்றால் prefetch ஆன் செய்யப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்ய வேண்டும். இதனை சோதனை செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்

    *ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் குரோமை ஓப்பன் செய்யுங்கள்

    * More SettingS என்று உள்ளதை டேப் செய்யுங்கள்

    *அதில் ஆண்ட்ராய்டு போனில் Advance என்று இருப்பதையும் iOS போனில் Bandwidh என்று இருப்பதை டேப் செய்யுங்கள்

    *ஆண்ட்ராய்ட் போனில் "Use a prediction service to load pages more quickly" என்பதை டேப் செய்யுங்கள்

    *iOS போனில் Preload Web Pages என்பதை டேப் செய்யுங்கள்

    *பின்னர் அதில் உள்ள ப்ரிலோட் என்பதை செலக்ட் செய்யுங்கள்

    *அதன் பின்னர் Done ஐ டேப் செய்யுங்கள்

    புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    English summary
    Tips and tricks to speed up Google Chrome.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more