இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது எப்படி.??

By Meganathan
|

நம்மவர்களுக்கு இலசம் மீது அதிக ஈர்ப்பு இருப்பதை அறியாதோர் இருக்க முடியாது. அழைப்புக் கட்டணங்கள் முன்பை போல் இல்லாமல் குறைந்த வரும் நிலையிலும் இலவசம் என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள். உள்ளூர் மக்களுடன் அழைப்புகளை மேற்கொள்ளக் கட்டணம் குறைவதைப் போல் வெளிநாட்டு அழைப்புகளுக்கும் கட்டணம் குறைந்து வருகின்றது. எனினும் வெளிநாட்டு அழைப்புகளுக்கு அதிகப் பணம் செலவாகும் என்பதே உண்மை.

இங்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு எப்பவும் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளச் சில எளிய வழிமுறைகளைத் தான் தொகுத்துள்ளோம்..

01

01

முதலில் கூகுள் நம்பர் பெற பதிவு செய்திட வேண்டும். இதற்கு உங்களது கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்தி கூகுள் வாய்ஸ் சேவையைப் பதிவு செய்யலாம்.

02

02

கூகுள் நம்பர் பெற்றவுடன் ஹேங்அவுட் சேவையை ஆக்டிவேட் செய்திட வேண்டும். ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்தச் செயலி ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும், ஆனால் ஐஓஎஸ் பயன்படுத்துவோர் செயலியை பதிவிறக்கம் செய்திட வேண்டும்.

03

03

அவ்வாறு ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்ய வேண்டும்.

04

04

செயலியை இன்ஸ்டால் செய்தவுடன் நீங்கள் அழைக்க வேண்டிய நம்பரை செயலியில் என்டர் செய்து அழைப்புகளை துவங்கலாம். அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்வது இலவசம் என்பதோடு இதற்கு 3 மணி நேர அவகாசம் உள்ளது.

05

05

ஆண்ட்ராய்டு கருவிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருப்பதால் ஹேங்அவுட் எவ்வித பிரச்சனையும் இன்றி வேலை செய்யும். மற்ற நாடுகளுக்கு அழைப்புகளை குறைந்த விலையில் மேற்கொள்ள கிரெடிட்களை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
How to Make FREE calls Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X