ஆண்ட்ராய்டு போன்களை கூகுள் பிக்சல் போன்கள் போன்று மாற்ற எளிய வழிகள்.!
நாம் தற்போது உபயோகித்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை,கூகுள் பிக்சல் போன்கள் போன்று மாற்றி பயன்படுத்திட எளிய வழிகள்.
சில காலத்திற்கு முன்னால் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலோனரைக் கவர்ந்தது.அதற்கான காரணம் கூகுள் பிக்சல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட அம்சங்களைக் கூகுள் பிக்செல் ஸ்மார்ட்போன் கொண்டிருப்பதனால் தான்.
இத்தகைய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்திட வேண்டுமென்ற ஆர்வமும்,ஆசையும் நமக்கு இருந்தாலும் அதற்கு இடையூறாக பொருளாதார தடைகள் ஏதேனும் இருப்பின் நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்ககூடிய ஸ்மார்ட்போனையே சில எளிய வழிகளைப் பின்பற்றி கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்தலாம்.
அதற்கான எளிய வழிகள் கீழே..

பிக்சல் லான்ச்சர்:
இந்த பிக்சல் லான்ச்சர் ஆனது கூகுள் பிக்சல் கருவிகளுக்காகவே பிரத்தயேகமாக துவங்கப்பட்டதாகும்.இது கூகுள் பிக்சல் கருவிகளுக்கேற்ற சில செயலிகளையும்,அதற்கான ஐகான்களையும் கொண்டுள்ளது.ஆகையால்,இதனை ஏபிகேமிரர் என்ற தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்துகொண்டு,அதனை உங்கள் டீபால்ட் லான்ச்சராக அமைத்துக்கொள்ளுங்கள்.

லைவ் வால்பேப்பர்ஸ்:
கூகுள் பிக்சல் போன் ஆனது பயன்படுத்திடுவதற்கு ஆர்வமூட்டக்கூடிய வகையிலான லைவ் வால்பேப்பர்களைக் கொண்டுள்ளது.பிக்சல் ஸ்மார்ட்போன்களின் தரத்தினை உயர்த்திடுவதற்கு இதுவும் கூட ஓர் வகையில் பயன்படுகிறது.ஆகவே,கூகுள் பிளே ஸ்டோரில் இத்தகைய லைவ் வால்பேப்பர்களை இன்ஸ்டால் செய்துகொண்டு அவற்றை உங்களது வால்பேப்பர்களாக அமைத்துக்கொள்வதின் மூலம் பிக்சல் போன்களை போன்றே உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தோற்றமளிக்கும்.

நைட் மோட்:
கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் நைட் மோட் வசதியினைக் டீபால்ட் அம்சமாகக் கொண்டுள்ளது.இத்தகைய வசதியானது இரவு நேரங்களில் மற்றும் நமக்கு அதிகப்படியான ஸ்மார்ட்போன்களின் திரையின் ஒளி தேவைப்படாத தருணங்களில் பெரும் உதவிகரமானதாக இருக்கும்.இதனை,ட்விலைட் எனும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் செய்து கொண்டு பயன்படுத்தலாம்.இதுவும்,கூகுள் பிக்சல் போன்கள் போன்று நமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் செயல்பட உதவும்.

நேவிகேஷன் பார்:
உங்களது ஆன்ட்ராய்டு போனை முழுமையாக பிக்சல் போன்கள் போன்று மாற்றி பயன்படுத்திட வேண்டுமெனில்,நீங்கள் அதற்கு கூகுளின் புதிய நேவிகேஷன் பாரினை பெற்றிருக்க வேண்டும்.அதற்கு பிக்ஸ்பார் எனும் செயலியினை இன்ஸ்டால் செய்து உங்களது தேவைக்கு ஏற்ப பிக்சல் ஸ்மார்ட்போன்களில் உள்ளது போன்றே நேவிகேஷன் பார்களை அமைத்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க
வீட்டு உபயோக பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்வது எப்படி.??


Click it and Unblock the Notifications
