ஆண்ட்ராய்டு போனை கூகுள் பிக்சல் போன் போல மாற்ற வேண்டுமா?

Written By:

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் போன் மிக உயர்வகை கேமிராவை கொண்டுள்ளது மட்டுமின்றி நீண்ட நேர பேட்டரியை தக்க வைத்து கொள்ளும் தன்மையும் கொண்டது. மேலும் இந்த போன் தான் கூகுள் அசிஸ்டெண்ட் அம்சத்தை முதன்முதலாக கொண்டு வந்த போன். ஆனால் அதே நேரத்தில் இந்த போன் பலருக்கு கனவாக இருக்க இதன் விலையும் ஒரு காரணமாக அமைகிறது.

ஆண்ட்ராய்டு போனை கூகுள் பிக்சல் போன் போல மாற்ற வேண்டுமா?

ஆனால் கவலை வேண்டாம். கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஒருசில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்தால் உங்கள் ஆண்ட்ராய்டு போன்,ம் கூகுள் பிக்சல் போன் போலவே கிட்டத்தட்ட மாறும் வாய்ப்பு உள்ளது.

கூகுள் பிக்சல் போனின் சிறப்பு அம்சங்கள் என்று கூறப்படும் பிக்சல் லாஞ்சர்ஸ், நைட் மோட்,மற்றும் ஒருசில அம்சங்கள் ஆண்ட்ராய்ட் போனில் வரவழைப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிக்சல் லாஞ்சர்

பிக்சல் லாஞ்சர்

கூகுள் பிக்சல் போனில் மட்டுமே இருக்கும் ஒரு சிறப்பான அம்சம் தான் பிக்சல் லாஞ்சர். கூகுள் ஆப்ஸ்கள் மற்றும் ஐகான்களை செயல்படுத்துவதில் இதில் முக்கிய பங்கு உண்டு. இந்த பிக்சல் லாஞ்சர் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு வேண்டும் என்றால் APK Mirror இல் இருந்து பிக்சல் லாஞ்சரை டவுண்ட்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்

ஒருமுறை இன்ஸ்டால் செய்துவிட்டு அதன் ஹோம் பட்டனை டேப் செய்தால் இந்த லாஞ்சர் ஆப்ஸ் உங்கள் மொபைலின் டீபால்ட் ஆப்ஸ் ஆக மாறிவிடும்

லைவ் வால்பேப்பர்:

லைவ் வால்பேப்பர்:

பிக்சல் போனில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் அதில் இருக்கும் லைவ் வால்பேப்பர் அம்சம்தான். இந்த லைவ் வால்பேப்பர் மூலம் ஆச்சரியமான, அதிசயிக்க வைக்கும் படங்களை லைவ்-இல் பயன்படுத்தலாம்.

இந்த லைவ் வால்பேப்பர் உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் வேண்டும் என்றால் பிளே ஸ்டோரில் இருந்து லைவ் வால்பேப்பர் ஆப்ஸை டவுன்லோடு செய்து கொள்ளலம். பின்னர் பிக்சல் லாஞ்சரை ஓப்பன் செய்து அதில் இருக்கும் வால்பேப்பரை செலக்ட் செய்தால் நீங்கள் இப்போது உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் லைவ் வால்பேப்பரை உபயோகிக்கலாம்

நைட் மோட்:

நைட் மோட்:

கூகுள் பிக்சல் போனில் டீபால்ட்டாக நைட் மோட் இருப்பதால் நீங்கள் இரவில் இருக்கும்போது அந்த போன் ஆட்டோமெட்டிக்காக நைட் மோடுக்கு மாறி உங்களுக்கு உபயோகப்படும் அளவிற்கு மாறிவிடும்.

இந்த நைட் மோட்-ஐ நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் பெற வேண்டுமா? கவலை வேண்டாம். உடனே பிளே ஸ்டோருக்கு செல்லுங்கள் அங்குள்ள டுவைலடி (Twlight) என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். பின்னர் அதில் உள்ள நைட்மோட்-ஐ செட்டிங்ஸ் மூலம் அட்ஜெஸ்ட் செய்யுங்கள். அவ்வளவுதான் இப்போது உங்கள் ஆண்ட்ராய்டு போனும் ஒரு நைட் போன் தான்

கிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்ப 2% கட்டணம்: பேடிஎம் அறிவிப்பு ஏன்?

நேவிகேஷன் பார்:

நேவிகேஷன் பார்:

உங்கள் ஆண்ட்ராய்ட் போன் ஒரு முழு கூகுள் பிக்சல் போனாக மாற வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலை உங்கள் போனில் நேவிகேஷனை டவுன்லோடு செய்வதுதான்.

இதற்கு நீங்கள் பிக்ஸ்பார் (Pixbar) என்ற ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதுதான். நேவிகேஷன் பார் பட்டனை பின்னர் உங்கள் வசதிக்கு தகுந்தவாறு மாற்றி கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
With the highest rated smartphone camera and a long-lasting battery, Google Pixel has attracted many smartphone lovers.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot