விண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி?

By: Meganathan S

கம்ப்யூட்டர்களை லாக் மற்றும் அன்லாக் செய்ய பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆன்லைனில் இதற்கென பல்வேறு அம்சங்கள் கிடைக்கும் நிலையில், பென் டிரைவ் கொண்டு கம்ப்யூட்டர்களை லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும். அந்த வகையில் பென் டிரைவ் கொண்டு கம்ப்யூட்டரை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

விண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது

இதை செயல்படுத்த பிரீடேட்டர் எனும் இலவச விண்டோஸ் சேவையை பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் உங்களது யு.எஸ்.பி.

டிரைவினை கம்ப்யூட்டரில் இருந்து எடுத்தவுடன் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டு விடும்.

வழிமுறை 1: முதலில் பிரீடேட்டர் (Predator) டூலினை டவுன்லோடு செய்ய வேண்டும்.

வழிமுறை 2: இனி பிரீடேட்டர் செயலவியை இயக்கி, பிளாஷ் டிரைவினை கம்ப்யூட்டரில் பொருத்த வேண்டும்.

வழிமுறை 3: பிளாஷ் டிரைவினை பொருத்தியதும், அன்லாக் செய்ய பாஸ்வேர்டு செட் செய்ய கோரும் டையலாக் பாக்ஸ் திரையில் திறக்கும்.

வழிமுறை 4: அடுத்து பிரீஃபரன்ஸ் (Preference) ஆப்ஷன் சென்று புதிய பாஸ்வேர்டு (New Password) செட் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்யலாம்.

வழிமுறை 5: நீங்கள் Always Required ஆப்ஷன் மூலமாகவும் பாஸ்வேர்டினை செட் செய்ய முடியம். பின் இந்த பாஸ்வேர்டு கொண்டு கம்ப்யூட்டரை அன்லாக் செய்ய முடியும்.

வழிமுறை 6: மேலும் பாஸ்வேர்டு செட் செய்யும் முன் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பிளாஷ் டிரைவ் சரியானதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இதை செயல்படுத்தியதும் Create Key மற்றும் OK என்ற ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

வாய்பிளக்க வைக்கும் டிஸ்பிளே அளவுடன் ரெட்மீ நோட் 5.!?English summary
Do you know that you can lock/unlock your PC with a key for better security? In this, we are going to use an app called Predator,that turns your USB drive
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot