Home
How to

உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை ஆன்லைனில் லாக் செய்வது எப்படி.?

உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவுகளை ஆன்லைனில் லாக் செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

நீங்கள் ஒரு ஆதார் அட்டை பெற அரசாங்கத்திடம் உங்கள் கைரேகை மற்றும் விழித்திரைக்குரிய ஸ்கேன் தரவு கொடுக்க வேண்டும். இவைகள் பயோமெட்ரிக் தரவு என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு சிம் அட்டை பெற அடையாள சான்றாக ஆதார் அட்டையை அளிக்கும் போது, குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனம் உங்கள் அடையாளத்தை அணுக அனுமதிக்கும் வண்ணம் உங்கள் கைரேகை பயன்படுத்த முடியும். இப்படி செய்வதின் மூலம் அடையாளம் (ID) மற்றும் கேவ்வைசி (KYC) சார்ந்த சரிபார்ப்புகளை வேகமாக அங்கீகரிக்க முடியும்.

எனினும், ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் தவறாக பயன்படுத்தபப்படுவதாக ஒரு சில நேரங்களில் புகார்கள் எழுந்த எழுந்த வண்ணம் உள்ளன.

வெளிப்படையான ஆபத்து

வெளிப்படையான ஆபத்து

இதுவரை தங்கள் ஆதார் அட்டை பயன்படுத்தாத மக்களுக்கு கூட அவர்களின் தரவு பயோமெட்ரிக் அங்கீகாரம் வழியாக அணுகப்பட்டது என்று கூறி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI) இருந்து மின்னஞ்சல் கிடைத்துள்ளது. இது வெளிப்படையாக மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது.

லாக் மற்றும் அன்லாக்

லாக் மற்றும் அன்லாக்

இந்திய தனித்துவ அடையாள ஆணைய சேவையகங்களில் சேமிக்கப்படும் உங்கள் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்தால் இதுபோன்ற அனைத்து விடயங்களையும் நீங்கள் தவிர்க்க முடியும். அதாவது இந்த பயோமெட்ரிக் தரவுகளை வேறொருவரால் அணுக முடியாது, உங்களுக்கு தேவையான நேரத்தில் அன்லாக் செய்து அணுகல் முடிந்த பின்னர் மீண்டும் லாக் செய்து விடலாம் என்று அர்த்தம்.

லாக் செய்வது எப்படி.?

லாக் செய்வது எப்படி.?

சரி உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவுகளை ஆன்லைனில் லாக் செய்வது எப்படி என்பதை பின்வரும் எளிமையான வழிமுறைகளை கொண்டு தெரிந்துக்கொள்ளவும். வழிமுறை #01 : இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும் - அதனுள் நுழைய இங்கே கிளிக் செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

அங்கு உங்கள் 12 இலக்க ஐக்கிய ஆதார் எண்ணை பதிவிடவும். பின்னர் உங்கள் ஆதார் எண் பதிவிடும் இடத்திற்கு கீழே வலைத்தளத்தில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை கேட்கப்படும் இடத்தில நுழைக்கவும். பின்னர் ஒடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் கேட்டு ஜெனரேட் ஒடிபி கிளிக் செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

உங்களுக்கான ஒருமுறை கடவுச்சொல் நீங்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும். அதை வலைதள பக்கத்தில் உள்ளிடவும். பின்னர் 'வெரிப்பை' பட்டனை கிளிக் செய்யவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

இப்போது எனேபிள் பயோமெட்ரிக் லாக்கிங் என்பதை சோதிக்கவும், பின்னர் பயோமெட்ரிக் லாக்கிங்கை எனேபிள் செய்யவும், அவ்வளவுதான். ஒருவேளை நீங்கள் உங்கள் லாக்கை அன்லாக் செய்ய வேண்டுமென்றால் எனேபிள் பயோமெட்ரிக் லாக்கிங்கை அன்செக் செய்து பின்னர் டிடிசேபிள் கிளிக் செய்யவும்.

ஒடிபி வழியாக மட்டுமே

ஒடிபி வழியாக மட்டுமே

பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் ஆதார் பரிமாற்றங்களை உங்கள் கை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் நிகழ்த்ததாமல், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் ஒடிபி வழியாக மட்டுமே தகவல்கள் சார்ந்த கோரிக்கைகளை அங்கீகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி என்பது பற்றிய டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

Best Mobiles in India

English summary
How to Lock Aadhaar Biometric Data Online. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X