ஆதார் சேர்க்கை மையத்தை ஆன்லைனில் தேடும் வழிமுறைகள்

|

பெரும்பாலும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து காரியங்களுக்கும் ஆதார் அட்டையின் பயன்பாடு என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொரு இந்தியனும் தனது வங்கி கணக்குகள், பேன் கார்டு, மொபைல் நம்பர்கள் உள்ளிட்ட பலவற்றையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்திய அரசால் அளிக்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட குறியீட்டை தான் ஆதார் என்று அழைக்கிறோம் என்பது யாரும் அறிந்ததே.

ஆதார் சேர்க்கை மையத்தை ஆன்லைனில் தேடும் வழிமுறைகள்

ஆதார் சேர்க்கை மையத்திற்கு செல்வதற்கு உங்களுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கும். முதலாவது, யாராவது ஒருவரை ஆதார் திட்டத்தில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும். இரண்டாவது, ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கலாம். எனவே உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள ஆதார் சேர்க்கை மையத்தை குறித்த தகவலை ஆன்லைனில் எப்படி தேடுவது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

ஆதார் சேர்க்கை மையம் என்று பார்த்தால், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் உட்பட நாடு முழுவதும் ஏறக்குறைய 25 ஆயிரம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் யூஐடிஏஐ இணையதளத்திற்கு (https://uidai.gov.in/) சென்று, பதிவு மற்றும் மேம்பாட்டு மையங்களைக் கண்டறி என்பதை கிளிக் செய்வதன் மூலம் மையங்களை கண்டறியலாம். மூன்று வகையில் தேடலை மேற்கொள்ளலாம்.

1. மாநிலத்தை கொண்டு தேடல்

2. அஞ்சல் குறியீடு மூலம் தேடல்

3. தேடல் பெட்டியை பயன்படுத்துதல்

தேடல் வகை - மாநிலம்

தேடல் வகை - மாநிலம்

மாநிலத்தைக் கொண்டு தேடலை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அதில் கீழ்நோக்கி விழும் ஒரு மெனு பட்டியலைக் காணலாம். அதில் உங்கள் மாநிலம், மாவட்டம், துணை-மாவட்டம் மற்றும் விடிசி (கிராமப்புற நகரம்) ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். நிரந்தரமான மையங்களைத் தேடுவதாக இருந்தால், செக்பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். அதை செய்த பிறகு, சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு, தேடல் என்பதன் மீது கிளிக் செய்யவும்.

தேடல் வகை - அஞ்சல் குறியீடு

தேடல் வகை - அஞ்சல் குறியீடு

இது, உங்கள் பகுதியின் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுவதன் மூலம் மையத்தைக் கண்டறியக் கூடிய ஒரு எளிய வழியாகும். அதை செய்த பிறகு, சரிப்பார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு, தேடல் என்பதன் மீது கிளிக் செய்யவும்.

நிரந்தரமான மையங்களைத் தேடுவதாக இருந்தால், செக்பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். தேடலை கிளிக் செய்த பிறகு, நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர், ஃபோன் நம்பர் மற்றும் முகவரி ஆகியவற்றுடன் ஜிமேப்ஸில் இருந்து இருப்பிடமும் கிடைக்கப்பெறும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
தேடல் வகை - தேடல் பெட்டி

தேடல் வகை - தேடல் பெட்டி

மேலே குறிப்பிட்டுள்ள எந்தொரு தகவல்களும் உங்களுக்கு சரியாகத் தெரியாத பட்சத்தில், நேரடியாக தேடல் பாக்ஸிற்குச் சென்று, தேடும் நகரத்தின் பெயர் அல்லது இருப்பிடத்தின் பெயரை குறிப்பிடவும். இதைச் செய்த பிறகு, சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு, தேடல் என்பதன் மீது கிளிக் செய்யவும். நிரந்தரமான மையங்களைத் தேடுவதாக இருந்தால், செக்பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.

ஒரே நேரத்தில் நோக்கியா 1 & நோக்கியா 7 ப்ளஸ் அறிமுகம்; சாம்சங் உடன் நேரடி மோதல்.!ஒரே நேரத்தில் நோக்கியா 1 & நோக்கியா 7 ப்ளஸ் அறிமுகம்; சாம்சங் உடன் நேரடி மோதல்.!

Best Mobiles in India

English summary
As Aadhar is becoming mandatory now carrying a various number of tasks in India. According to the government of India, every Indian citizen should link their Aadhar number bank accounts, PAN card, mobile numbers and others.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X