14546 என்கிற TOLL-FREE நம்பரில் ஆதார்-மொபைல் எண்ணை இணைப்பது எப்படி.?

இந்த செய்முறையின்கீழ், 14546 என்கிற டோல்-ப்ரீ எண்ணெய் கொண்டு உங்களின் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பது எப்படி என்கிற வழிமுறைகளை காண்போம்.

|

ஆதார் மற்றும் உங்களின் மொபைல் நம்பரையும் இணைப்பது தற்போது மிகவும் எளிமையான முறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழிமுறையானது எளிமையானது மட்டுமின்றி மிகவும் வசதியானதாகவும் உள்ளது.

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற பெரிய தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் தங்களது பயனர்களை, ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க அனுமதிக்கின்றனர்.

14546 என்கிற டோல்-ப்ரீ எண்

14546 என்கிற டோல்-ப்ரீ எண்

ஐவிஆர்எஸ் (IVRS) எனப்படும் இந்த செய்முறையின்கீழ், 14546 என்கிற டோல்-ப்ரீ எண்ணை கொண்டு உங்களின் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பது எப்படி என்கிற வழிமுறைகளை காண்போம்.

வழிமுறை 01:

வழிமுறை 01:

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 14546 என்கிற எண்ணுக்கு அழைப்பு விடுக்கவும். அழைப்பில் நீங்கள் ஒரு இந்தியரா அல்லது என்ஆர்ஐ-ஆ என்ற கேள்வியை ஒரு கணினிக் குரல் கேட்கும்.

வழிமுறை 02:

வழிமுறை 02:

அந்த கேள்விக்கு உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யவும். பின்னர் ஐவிஆர் செயல்முறையானது, உங்கள் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான உங்களின் சம்மதத்தை கேட்கும்.

வழிமுறை 03:

வழிமுறை 03:

அந்த கேள்விக்கு கொடுக்கப்பட்ட விருப்பத்தை அழுத்தவும். இப்போது நீங்கள் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை வழங்க வேண்டும் மற்றும் அதை உறுதிப்படுத்த விரும்பிய எண்ணை அழுத்தவும்.

வழிமுறை 04:

வழிமுறை 04:

நீங்கள் எண்ணை உறுதிப்படுத்தியவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசிக்கு ஒரு ஒருமுறை கடவுச்சொல் (OTP) அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஐவிஆர் செயல்முறைக்காக உங்கள் மொபைல் எண் கேட்கப்படும்.

வழிமுறை 05:

வழிமுறை 05:

இந்த வழிமுறையில் யூஐடிஎஐ (UIDAI) பதிவிலிருந்து உங்கள் பெயர், புகைப்படம், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை எடுக்க உங்கள் மொபைல் ஆபரேட்டருக்கு நீங்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

வழிமுறை 06:

வழிமுறை 06:

மேலே குறிப்பிட்டபடி நீங்கள் ஒப்புக் கொண்டபின் உங்கள் ஆதர் அட்டை எண்ணை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் உங்கள் மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை ஐவிஆர் வாசிக்கும்.

வழிமுறை 07:

வழிமுறை 07:

உங்களின் விவரங்களுடன் ஐவிஆர் நிகழ்த்தும் மறு-உறுதிப்படுத்தல் பொருந்துகிறது என்றால், எஸ்எம்எஸ் மூலம் நீங்கள்ரு பெற்ற முறை கடவுச்சொல்லை (OTP) வழங்க வேண்டும்.

வழிமுறை 08:

வழிமுறை 08:

ஒடிபி-ஐ நுழைந்த பிறகு, நீங்கள் இந்த செயலாக்கத்தை முடிக்க எண் 1-ஐ அழுத்த வேண்டும். இந்த வழிமுறைகளை வெற்றிகரமான செய்துமுடிக்க ஐவிஆர் வழிமுறையின் கீழ் உங்களின் மொபைல் எண் ஆனது ஆதார் உடன் இணைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
How to link Aadhaar with mobile number using IVR: Here's a step-by-step guide. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X