கம்யூட்டரில் வைரஸ் இருப்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்?

பொதுவாக வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை, கம்ப்யூட்டர் மென்பொருளை ஆக்கிரமித்து, கம்ப்யூட்டர் சீராக இயங்குவதை தடுக்கும்.

|

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் அவற்றில் ஏற்படும் வைரஸ் மற்றும் மால்வேர் பாதிப்புகள் பற்றி நன்கு தெரிந்திருக்கும். சிலர் வைரஸ் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டு தங்களின் தரவுகளையும் இழந்திருப்பர்.

கம்யூட்டரில் வைரஸ் இருப்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்?

பொதுவாக வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை, கம்ப்யூட்டர் மென்பொருளை ஆக்கிரமித்து, கம்ப்யூட்டர் சீராக இயங்குவதை தடுக்கும். சில வகையான மால்வேர்கள் உங்களது மின்னஞ்சல் சேவையை இயக்கி, அதில் உள்ள அனைத்து கான்டாக்ட்களுக்கும் மால்வேர் குறியீடுகளை அனுப்பும். இத்துடன் சிலசமயங்களில் ஹேக்கர்கள் எழுதும் மால்வேர் குறியீடுகள் உங்களின் கம்ப்யூட்டரையே பயன்படுத்த முயற்சிக்கும். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எவருக்கும் இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருப்பதே பெரும் கவலையாக இருக்கும்.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவோர் சில முன்னெச்சரிக்கைகளை செய்து வந்தாலே, இது போன்ற பாதிப்புகளில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம். சில சமயங்களில் நீங்கள் பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் அப்டேட் செய்யப்பட்டிருந்தால், பெருமளவு பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

எனினும் எல்லா பாதுகாப்பு வளையங்களையும் வளைத்து, ஊடுறுவும் மால்வேர் மற்றும் வைரஸ்களும் இருக்கின்றன. இவை கணினிகளில் ஊடுறவ சில சமயங்களில் நீங்கள் தெரியாத்தனமாக க்ளிக் செய்த போலி லின்க் அல்லது பயன்படுத்திய வலைத்தளங்கள் போன்றவை காரணங்களாகி விடுகின்றன.

எப்படி கண்டறிவது

எப்படி கண்டறிவது

உங்களது கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கப்பட்டு இருப்பதை எதை வைத்து கண்டறிவது? உங்களது ஆன்டிவைரஸ் அப்டேட் செய்யப்பட்டிருப்பின், மால்வேர் அல்லது வைரஸ் தாக்குதல் குறித்த தகவல்களை பெற முடியும். ஒருவேளை மென்பொருள் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் எப்படி கண்டறிவது?

கம்ப்யூட்டர் வைரஸ் அறிகுறிகள்

கம்ப்யூட்டர் வைரஸ் அறிகுறிகள்

கம்ப்யூட்டர் திடீரென ஹேங் ஆவது, அதில் பிரச்சனை இருப்பதை சுட்டிக்காட்டும். சில மால்வேர்கள் உங்களின் கம்ப்யூட்டர் சீராக இயங்க தேவைப்படும் முக்கிய தரவுகளை பாதிக்கும். இதனால் உங்களது கம்ப்யூட்டர் ஹேங் ஆகும்.

குறிப்பிட்ட செயலி அல்லது ஃபைல் எதையும் ஓபன் செய்யும் போது கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், அந்த செயலி அல்லது ஃபைலில் கரப்ட் செய்யப்பட்ட தரவு இருப்பதை உணர்த்தும், பெரும்பாலும் இது மால்வேர் அல்லது வைரஸ் ஆக இருக்கலாம்.

வழக்கத்தை விட கம்ப்யூட்டர் வேகம் குறைவாக இருந்தாலும், அதில் மால்வேர் அல்லது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம். மிகப்பெரிய செயலி அல்லது மென்பொருள் பயன்படுத்தாத நிலையிலும், கம்ப்யூட்டர் வேகம் குறைவாக இருந்தால், அதில் வைரஸ் தாக்கப்பட்டு இருக்கலாம்.

கம்ப்யூட்டர்களில் சில டிரைவ்களை இயக்க முடியாமல் போவதற்கு விசித்திர தகவல்கள் திரையில் தோன்றினால், கம்ப்யூட்டரில் ஏதே தவறு நடக்கிறது என்றே அர்த்தம். இதேபோன்று சில செயலிகளிலும் தகவல் தெரிந்தாலும் வைரஸ் இருப்பதை உறுதி செய்யலாம்.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அறிகுறிகள் கம்ப்யூட்டரில் வைரஸ் அல்லது மால்வேர் இருப்பதை 100 சதவிகிதம் உறுதி செய்யாது என்றாலும், இவை கம்ப்யூட்டரில் ஏதோ பிழை ஏற்பட்டு இருப்பதையே உணர்த்தும்.

போலி தகவல்கள்

போலி தகவல்கள்

இணையத்தில் சர்ஃபிங் செய்யும் போது, சில வலைத்தளங்களில் இருந்து போலி தகவல்கள் திரையில் தோன்றி உங்களின் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி, உங்களை சில பட்டன்களை க்ளிக் செய்யக் கோரும். இதுபோன்ற தகவல்களை நம்பி க்ளிக் செய்ய வேண்டும். இவை உங்களது தகவல்களை அபகரிக்கும் நோக்கில் பரப்பப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
How to Know if Your Computer is Infected with a Virus: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X