ஃபேஸ்புக்கில் பிளாக் செய்யப்பட்டீர்களா? தெரிந்து கொள்வது எப்படி?

இவ்வாறு எவரேனும் உங்களை பிளாக் செய்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கின்றீர்களா என தெரிந்து கொள்ளலாம்.

|

ஃபேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் அதில் உள்ள பிளாக் செய்யும் அம்சம் பற்றி தெரிந்திருக்கும். ஃபேஸ்புக்கில் யாரையாவது நீங்கள் பிளாக் செய்தால், அவர்களால் உங்களது டைம்லைனில் எவ்வித போஸ்ட்களிலும் உங்களை டேக் செய்ய முடியாது. மேலும் அவர்களால் உங்களை நிகழ்வுகள் அல்லது க்ரூப் அல்லது உரையாடலை துவங்குவதற்கும் அழைப்பு விடுக்க முடியாது.

ஃபேஸ்புக்கில் பிளாக் செய்யப்பட்டீர்களா? தெரிந்து கொள்வது எப்படி?

பொதுவாக இதன் மூலம் ஃபேஸ்புக்கில் முற்றிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். பயனர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், உங்களையும் எவரேனும் பிளாக் செய்திருக்கலாம்.

இவ்வாறு எவரேனும் உங்களை பிளாக் செய்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கின்றீர்களா என தெரிந்து கொள்ளலாம்.

அவர்களது ப்ரோஃபைலை தேடவும்:

அவர்களது ப்ரோஃபைலை தேடவும்:

ஃபேஸ்புக்கில் நீங்கள் சந்தேகிக்கும் நபரின் பெயரை கொண்டு அவரது ப்ரோஃபைலை தேடும் போது உங்களுக்கு அவரது ப்ரோஃபைல் கிடைக்காமல், மற்றவர்களுக்கு இதே பெயரில் அவரது ப்ரோஃபைல் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டு இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


சில சமயங்களில் நீங்கள் தேடிய நபர் தனது பிரைவசி செட்டிங்கில் அனைத்து ஃபேஸ்புக் பயனர்களையும் தேடுவதில் இருந்து நிராகரித்து இருக்கலாம். எனினும், பல்வேறு இLர வழிமுறைகள் உள்ளன.

மியூச்சுவல் நண்பர்கள் பட்டியல்:

மியூச்சுவல் நண்பர்கள் பட்டியல்:

நீங்கள் சந்தேகிக்கும் நபரின் நண்பர் உங்களுக்கும் ஃபேஸ்புக்கில் நண்பர் எனில், அவரது நண்பர்கள் பட்டியலை முழுமையாக தேட வேண்டும். இந்த பக்கத்தில் இருக்கும் சர்ச் பாக்ஸ்-இல் நீங்கள் சந்தேகிக்கும் நபரின் பெயரை தேடவும், அங்கு அந்த நபரின் பெயர் தெரியாத பட்சத்தில் நீங்கள் பிளாக் செய்யப்படவில்லை எனலாம். ஒருவேளை தெரியாத பட்சத்தில், நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். எனினும், இந்த வழிமுறையை உறுதி செய்ய, மியூச்சுவல் நண்பர் தனது நண்பர்கள் பட்டியலை பப்ளிக் மோடில் செட் செய்திருந்தால் மட்டுமே வேலை செய்யும்.

பழைய உரையாடல்:

பழைய உரையாடல்:

நீங்கள் சந்தேகிக்கும் நபருடன் நீங்கள் ஏற்கனவே சாட் செய்திருந்தால், மீண்டும் அந்த சாட் பாக்ஸ்-ஐ திறக்கவும். இங்கு ப்ரோஃபைல் படத்திற்கு பதில் ஃபேஸ்புக்கின் ப்ரோஃபைல் போட்டோ இடம்பெற்றிருந்து, உங்களால் அந்த பெயரை க்ளிக் செய்ய முடியாமல் போனால் அவர்கள் உங்களை பிளாக் செய்திருக்கலாம்.

மற்றவரின் அக்கவுன்ட்-இல் தேடவும்:

மற்றவரின் அக்கவுன்ட்-இல் தேடவும்:

மேலே உள்ள வழிமுறைகளை கடந்திருந்தால், நீங்கள் சந்தேகிக்கும் நபர் தனது ப்ரோஃபைலை டீ-ஆக்டிவேட் செய்திருக்கலாம். நீங்கள் சந்தேகிக்கும் நபரை மற்றவரின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்-இல் இருந்து தேடவும். அவரது ப்ரோஃபைல் சர்ச் பதிலில் தெரிந்தால், நீங்கள் நிச்சயம் பிளாக் செய்யப்படிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to know if you have been blocked on Facebook: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X