உங்களின் புது ஸ்மார்ட்போனில் மால்வேர் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்வது எப்படி?

அவ்வாறு வாங்கும் புது ஸ்மார்ட்போன்களில் பெரிய திரை, சிறப்பான கேமரா, அதிக செயல்திறன் மற்றும் முந்தைய சாதனத்தை விட பெருமளவு வித்தியாசமான வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்றே விரும்புவர்.

|

ஸ்மார்ட்போன்கள் நாம் அனைவரும் பயன்படுத்தும் அத்தியாவசிய மற்றும் அவசிய சாதனமாகி இருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரும் அவ்வப்போது புது அப்டேட் பெற்றிருக்கும் சாதனங்களை மாற்றிக் கொள்ளவே நினைப்பர்.

மால்வேர் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்வது எப்படி?

அவ்வாறு வாங்கும் புது ஸ்மார்ட்போன்களில் பெரிய திரை, சிறப்பான கேமரா, அதிக செயல்திறன் மற்றும் முந்தைய சாதனத்தை விட பெருமளவு வித்தியாசமான வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்றே விரும்புவர்.

எனினும், புது ஸ்மார்ட்போன் வாங்கும் முன் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன், கூடுதலாக அதில் கிடைக்கும் அம்சங்களை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தேர்வு செய்வது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எனில், உங்களின் புது சாதனம் உங்களுக்கு தீங்கு விளைவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நீங்கள் வாங்கும் சாதனத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில பாதிப்புக்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

நுகர்வோர் மின்னணு விநியோகம்:
உலகமயமாக்கல் காரணமாக மூலப்பொருட்கள் முதல் உற்பத்தியாகி விற்பனைக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களுக்கும் உலகம் முழுக்க சந்தைப்படுத்தப்படுகிறது. இதே நிலை மின்சாதனங்களுக்கும் நிலவுகிறது. நுகர்வோர் மின்சாதனங்களுக்கு அத்தியாவசிய மூலப்பொருட்களில் ஒன்றாக இருக்கும் சிலிகானை சீனா அதிகளவு உற்பத்தி செய்கிறது. இதனால் நவீன உற்பத்தி விநியோகம் அதிகளவு குழப்பமான சூழ்நிலையை சந்தித்து இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட மொபைல் போனில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் உற்பத்தி சார்ந்த உபகரணங்களை கண்டறிவது சிரமமாகி இருக்கிறது. இதனால் உங்களது மொபைல் போனில் மால்வேர் நுழைய போதுமான காரணமாகி விடுகிறது.

மால்வேர் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்வது எப்படி?

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தி:
ஆன்ட்ராய்டு இயங்குதளம் ஓபன்-சோர்ஸ் முறையில் அனைவருக்குமான ஒன்றாக இருப்பதால், கூகுள் நிறுவனம் உற்பத்தியாளர்கள் இயங்குதளத்தில் மேற்கொள்ளும் மாற்றங்கள் அனைத்தையும் கவனிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் வியாபார யுக்தி சந்தையை ஆக்கிரமிக்க எந்தளவு உதிவியிருக்கிறதோ அதே அளவு அந்நிறுவன சாதனங்களில் ஏற்படும் ஏற்படும் சிறு சிறு கோளாறுகளுக்கும் காரணமாகி இருக்கிறது.

ஒவ்வொரு மொபைல் போன் உற்பத்தியாளர் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்டளவு வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களை மாற்ரம் செய்ய முடியும். இதன் காரணமாக சந்தையில் ஏராளமான ஆன்ட்ராய்டு சாதனங்கள் நிறைந்து இருக்கின்றன.

பாதுகாப்பற்ற சூழல்:
ஆன்ட்ராய்டு இயங்குதளம் அதிகளவு திறந்தநிலை மென்பொருளாக இருப்பதால், இயங்குதளத்தின் பாதுகாப்பை மேம்படுத்த கூகுள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விட, மால்வேர் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இதற்கு போதுமான நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு குழப்பமான விநியோக முறை உள்ளிட்டவை காரணமாக இருக்கிறது.

மால்வேர்:
சியோமி ரெட்மியில் கிடைக்கும் வைபை சேவையை செக் பாயின்ட் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்தது. ஆய்வில் அது வைபை சேவைகளை வழங்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் இது வைபை சேவைகளுக்கு சற்றும் தொடர்பில்லாத ஆன்ட்ராய்டு அனுமதிகளை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அதுகோரிய அனுமதிகளில் ஒன்று, நோட்டிஃபிகேஷன் இல்லாமல் டவுன்லோடு செய்வது. கமான்ட் மற்றும் கன்ட்ரோல் (C&C) மூலம் தீங்கு விளைவிக்கும் மென்பொருள் டவுன்லோடு செய்யப்பட்டு இருக்கிறது. ரோட்டன்சிஸ் (RottenSys) என அழைக்கப்படும் மால்வேர் இயங்குதளத்தில் மறைந்திருந்து, தொடர்ந்து இயங்கும்.

ஷாங்காய் ஆட்அப்ஸ் தொழில்நுட்பம்:
க்ரிப்டோவயர் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் 2016ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கும் தகவல்களை சேகரித்து சீன சர்வெர்களுக்கு அனுப்பும் தீங்கு விளைவிக்கும் மால்வேர் கண்டறியப்பட்டது. இந்த மால்வேர் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவு ஆன்ட்ராய்டு சாதனங்களில் இடம்பெற்று இருந்ததோடு, ஆன்ட்ராய்டு அனுமதி இன்றி பயனர்களின் தகவல்களை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மால்வேர் சேகரித்து அனுப்பிய தகவல்களில் குறுந்தகவல்கள், கான்டாக்ட் லிஸ்ட்கள், தொலைப்பேசி எண்கள் அடங்கிய அழைப்பு வரலாறு, சர்வதேச மொபைல் சந்தாததாரர் முகவரி (International Mobile Subscriber Identity - IMSI) உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தது. அனைத்து தகவல்களும் ஷாங்காய் ஆட்அப்ஸ் தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டது.

துவக்கத்தில் இந்த நிறுவனம் தவறாக துவங்கப்பட்டது என்றும், இது ஃபர்ம்வேர்களை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதே நிறுவனம் பெரும்பாலான உபகரணங்களை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

மால்வேர் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்வது எப்படி?

யாரை நம்புவது?
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹூவாய் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், புதிதாக மொபைல் போன் வாங்குவோர் தங்களது விவரங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அதிக கவனமாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகியிருக்கிறது.
Best Mobiles in India

English summary
How to know if there is pre-installed malware on your new smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X