உங்கள் வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்டை பாதுகாப்பாக வைக்கும் முறைகள்

  ஹேக்கர்கள் மூலம் வைஃபை இணைப்பு, கம்ப்யூட்டர் சிஸ்டம்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் ஆகியவை ஹேக் செய்யப்படுவதாக பல சம்பவங்களை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் ஐஓடி பாதுகாப்பு நிறுவனமான பாஸ்ட்டில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வயல்லெஸ் கீபோர்டுகள் மற்றும் மவுஸ் கூட தாக்குதலுக்கு உள்ளவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மவுஸ் ஜெக்கிங் என்று அழைக்கின்றனர்.

  உங்கள் வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்டை பாதுகாப்பாக வைக்கும் முறைகள்

  இதன்மூலம் பக்கத்தில் உள்ள ஒரு ஆண்டினாவின் உதவியோடு ஆதாய நோக்குடன் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் வார்த்தைகள் வரை, மவுஸ் அசைவுகள் அல்லது கீபோர்டுகளில் செய்யப்படும் டைப்பிங் ஆகியவற்றை பயன்படுத்தி செய்ய முடியும், சாதனம் மறையாக்கம் செய்யப்பட்ட நிலையிலும் இது சாத்தியமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

  உங்கள் சிஸ்டத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, ஹேக்கர்களுக்கு சுமார் 15 வரிகளைக் கொண்ட கமெண்டுகள் போதுமானது. கேட்கும் போதே பயத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? இந்நிலையில் வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்டு இணைக்கப்பட்டுள்ள உங்கள் கம்ப்யூட்டர், ஹேக் செய்யப்படுமா என்ற பயம் உங்களுக்கு இருந்தால், அந்தக் கவலையே வேண்டாம். ஏனெனில் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் வகையில் ஒரு சில படிகளை நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  சாதனத்தின் பாதுகாப்பு

  சில தயாரிப்பு நிறுவனங்கள் தகுந்த பாதுகாப்பு தன்மைகளை அளிக்க தவறுவதால், நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தைப் பாதிப்படைய செய்யும் வகையிலான தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதா என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும்.

  ஏனெனில் சில நிறுவனங்கள் தகுந்த பாதுகாப்பு தன்மைகளை அளித்தாலும், எல்லா நிறுவனங்களும் அளிக்கின்றன என்று உறுதியாக கூற முடியாது. எனவே எப்போதும் பிரபலமான பிராண்டுகளை வாங்குவது சிறந்தது. இதற்கு உங்களுக்கு உதவும் இணைப்பு இதோ

  நிலைபொருள் புதுப்பிப்புகள்

  உங்கள் சாதனம் பாதிப்பிற்குள்ளாகிவிட்டது என்று வைத்து கொள்வோம். அதை குறித்து நீங்கள் அடுத்ததாக என்ன செய்யலாம்? இந்தப் பாதிப்பைத் தடுக்கக்கூடிய ஏதாவது நிலைபொருள் புதுப்பிப்புகள் இருக்கிறதா என்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் பாருங்கள். புதுப்பிப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்யும் முன், இது மேற்கண்ட பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

  ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!

  வயர் மார்க்கத்தை விரும்புதல்

  மேற்கண்ட ஹேக்கிங் மற்றும் மால்வேர் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, வயர் மூலம் இணைக்கப்படுவது ஒரு சிறந்த பாதுகாப்பான மார்க்கம் எனலாம். வயர் இணைப்பை காற்றில் வந்து குறுக்கிட்டு, கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியாது. இதை, உங்கள் கம்ப்யூட்டரின் சிறந்த பாதுகாப்பிற்கான உறுதியான மற்றும் முக்கியமான தீர்வாக கூறலாம்.

  கம்ப்யூட்டரை லாக் செய்தல்

  உங்கள் கம்ப்யூட்டர் பகிர்ந்தளிப்பிற்குள் இருப்பதாக நீங்கள் கருதினால், கம்ப்யூட்டர் மற்றும் அட்மின் வட்டத்தில் லாக் செய்து விடுங்கள். ஆனாலும், கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைப் பெறுவதில் இருந்து கீலாக்கர்களைத் தடுக்க முடியாது.

  How To Increase the Speed of your Laptop (TAMIL)
  டேட்டா மறையாக்கம்

  டேட்டா மறையாக்கம்

  உங்கள் கம்ப்யூட்டரில் உள்ல தகவல்களைப் பாதுகாக்கக் கூடிய மிக சிறப்பான வழி என்றால், முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு கோப்புகளையும் பாஸ்வேர்டுகளின் மூலம் மறையாக்கம் செய்துவிட வேண்டும். ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இந்த முறை தீர்வாக அமையாது. ஆனால் எதிர்காலத்தில் இது போன்ற தொந்தரவுகளைத் தவிர்க்க, இந்த முறையை நீங்கள் பயன்படுத்தலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  We have seen a lot of cases, where hackers hack the Wi-Fi connection, computer systems, and smartphones. According to a report from IoT security firm Bastille, the wireless keyboards and mouse are vulnerable to an exploit and it is called as Mouse Jacking.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more