பேஸ்புக்கில் உங்களது மொபைல் நம்பரை மறைத்து வைப்பது எப்படி?

கேம்ப்ரிட்ஜ் அனாலடிகா விவகாரத்தை தொடர்ந்து ஃபேஸ்புக் சந்திக்கும் பிரச்சனைகள் உலகம் அறிந்த ஒன்றே. பயனர் விவரங்களை அனுமதியின்றி வழங்கிய விவகாரம்

By Gizbot Bureau
|

கேம்ப்ரிட்ஜ் அனாலடிகா விவகாரத்தை தொடர்ந்து ஃபேஸ்புக் சந்திக்கும் பிரச்சனைகள் உலகம் அறிந்த ஒன்றே. பயனர் விவரங்களை அனுமதியின்றி வழங்கிய விவகாரம், ஃபேஸ்புக் அத்தனை காலத்தில் சம்பாதித்த நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துவிட்டது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது பாதுகாப்பு அவசியம் என்பதே பலரது கவலையாக இருக்கிறது. சமூக வலைதளத்தின் பாதுகாப்பு கருதி ஃபேஸ்புக் தனது வலைதளத்தில் பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கிறது. அதன் ஒரு அங்கமாக டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் இருக்கிறது. இந்த அம்சத்தை இயக்க நீங்கள் வழங்கும் மொபைல் நம்பர் பாதுகாப்பாக இல்லை. லாக் இன் செய்யும் முன் உங்களது அக்கவுண்ட்டை உறுதிப்படுத்த உங்களின் மொபைல் நம்பருக்கு குறுந்தகவல் அனுப்புகிறோம் என ஃபேஸ்புக் சார்பில் உங்களது மொபைல் நம்பர் கேட்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் மொபைல் நம்பரை வழங்கியதும், மற்றவர்கள் மொபைல் நம்பரை கொண்டே உங்களை தேட முடியும். உங்களது ப்ரோஃபைலில் நம்பரை மறைத்து வைத்திருந்தாலும் இது சிறப்பாக வேலை செய்யும் என்பது கூடுதல் தகவல்.

பேஸ்புக்கிற்கு ஆப் அடித்த டிவிட்டர் பதிவு

பேஸ்புக்கிற்கு ஆப் அடித்த டிவிட்டர் பதிவு

இந்த விவகாரத்தை முதலில் வெளிப்படுத்தியது ஜெர்மி பர்ஜ் என்பவர் ஆகும். இவர் இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டார், இவரை தொடர்ந்து பலர் இதே குற்றச்சாட்டை பதிவிட துவங்கினர். பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட மொபைல் நம்பர், பயனரின் அனுமதியின்றி மற்ற விவகாரங்களுக்கு பயன்படுத்தப்படுவது பயனர்களை அதிர்ச்சியடைய செய்தது. "ஃபேஸ்புக்கிடம் பாதுகாப்பிற்காக வழங்திய மொபைல் நம்பரை இனியும் என்னால் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ள இயலாது". என பாதுகாப்பு வல்லுநரான சேநெப் டஃபுக்கி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

உங்களது மொபைல் நம்பரை

உங்களது மொபைல் நம்பரை

உங்களது மொபைல் நம்பரை மற்ற விவகாரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற வகையில் ஃபேஸ்புக்கிற்கு எவ்வித தடையும் இல்லை. இதனால் உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களும் உங்களின் மொபைல் நம்பரை கண்டறிந்து கொள்ள முடியும்.

டீஃபால்ட் செட்டிங்

டீஃபால்ட் செட்டிங்

ஃபேஸ்புக்கில் இருக்கும் டீஃபால்ட் செட்டிங், யாரை வேண்டுமானாலும் உங்களை கண்டறியவும் நிலமையை மேலும் மோசமாக்கவும் முடியும். மிகவும் பாதுகாப்பான செட்டிங்கும் தற்சமயம் நண்பர்களுக்காக திறந்தே இருக்கிறது. உங்களின் மொபைல் நம்பர் கொண்டு ஃபேஸ்புக் உங்களுக்கான தனிப்பட்ட விளம்பரங்களை அனுப்பியது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது.

உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்

உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்

உங்களை பாதுகாத்துக் கொள்ளவும், உங்களது மொபைலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் உங்களிடம் இருக்கும் ஆப்ஷன் மிகவும் குறைவே. ஃபேஸ்புக் உங்களது விவரங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றுக்கு பகிர்ந்து கொள்வதாக பர்ஜ் தெரிவித்தார். எவரேனும் தங்களது செயலிகளில் லாக் இன் செய்து காண்டாக்ட்களை இயக்குவதற்கான வசதியை வழங்கினால், அதை கொண்டே அவர்கள் உங்களை கண்டறிந்து விடுவார்கள்.

பேஸ்புக்கில் நம்பர்

பேஸ்புக்கில் நம்பர்

இதுதவிர, பயனர் தனது மொபைல் நம்பரை இன்ஸ்டாகிராமில் வழங்காமல் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் நம்பரே கொடுத்த சில நாட்களில் இன்ஸ்டாகிராமில் இருந்து மொபைல் நம்பரை உறுதிப்படுத்த கோரியதாக தெரிவித்திருக்கிறார். இதனை அவர் தனது ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டிருக்கிறார்.

செட்டிங்ஸ் -- பிரைவசி -- ஆப்ஷன்களை

செட்டிங்ஸ் -- பிரைவசி -- ஆப்ஷன்களை

இவை போதுமானதாக இல்லையெனில் உங்களை பாதுகாக்க மேலும் சில வழிகள் இருக்கின்றன. செட்டிங்ஸ் -- பிரைவசி -- ஆப்ஷன்களை தேர்வு செய்தால் எப்படி மற்றவர்கள் உங்களை கண்டறிந்து தொடர்பு கொள்ளலாம் என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதேபோன்று 'Who can look you up using the phone number you provided' ஆப்ஷனில் 'Friends' என தேர்வு செய்யலாம்.

டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன்

டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன்

மொபைல் நம்பர் பிரச்சனையே வேண்டாம் என்போர், டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷனில் மொபைல் நம்பருக்கு மாற்றாக மின்னஞ்சல் முகவரியை கொடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to keep your mobile number private on Facebook : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X