கூகுளின் ஏ.ஆர் கோர் vs டாங்கோ: ஓர் ஒப்பீடு.!

கூகுள் டாங்கோ உருவாவதற்கான அடித்தளம் என்னவென்றால் மொபைல் போன்ற கருவிகள் மனிதர்களை போலவே உலகை அறித்து உலாவி வருவதுதான்.

|

ஆக்குமெண்டேட் ரியாலிட்டி என்பது உங்கள் சுற்றுபுறத்தை சற்றே மாற்றி, சுற்றியுள்ள பொருட்களின் தகவல்களை சேர்த்து உருவாக்கப்பட்டது ஆகும். கூகுளின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் திட்டக்குழுவின்ஒரு பகுதியாக இருந்த கூகுள் டாங்கோ பிராஜெக்ட் , 2015ன் முதல் காலாண்டில் அதை விட்டு வெளியேறியது. பிறகு டாங்கோ தனி கூகுள் குழுவாக உருவாக்கப்பட்டது.

கூகுளின் ஏ.ஆர் கோர் vs  டாங்கோ: ஓர் ஒப்பீடு.!

கூகுள் டாங்கோ உருவாவதற்கான அடித்தளம் என்னவென்றால் மொபைல் போன்ற கருவிகள் மனிதர்களை போலவே உலகை அறித்து உலாவி வருவதுதான். உண்மையானதை போலவே உருவாக்க அல்லது உண்மையை மனிதர்களுக்காக மாற்ற முதலில் செய்யவேண்டியது, மனிதர்கள் உலகில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அறிவது தான். எனவே கூகுளின் திட்டக்குழு இந்த அனைத்து தகவல்களையும் திரட்டுவதற்காக அனைத்து வித சென்சார்களையும் ஸ்மார்ட்போன் போன்ற பீனட்போனில் பொருத்தினர்.


ஏ.ஆர் கோரும் இதே போன்ற ஒரு ஐடியா தான் என்றாலும் , டாங்கோவிலிருந்து சில வழிகளில் வேறுபடுகிறது.


இந்த இரண்டு வித ப்ராஜெட்களிலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் பின்வருமாறு.


1) டாங்கோ

° மோசன் டிராக்கிங் டெக்னாலஜி

° டெப்த் பர்செப்சன்

°ஏரியா லேர்னிங்


2)ஏ.ஆர் கோர்

°மோசன் டிராக்கிங்

°என்விரான்மென்டல் அன்டர்ஸ்டேன்டிங்

°லைட் எஸ்டிமேசன்


அடிபடையிலிருந்து பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரியான திட்டங்களாக தோன்றினாலும், டாங்கோ மற்றும் ஏ.ஆர் கோர் பின்வரும் முக்கிய வித்தியாசங்களை கொண்டுள்ளன.


1) வன்பொருள் (Hardware)

டாங்கோ வன்பொருளை மிகவும் நம்பியிருக்கும் நிலையில், இந்த கருவியில் கூடுதலாக இரண்டு கேமராக்கள் உள்ளன. ஏ.ஆர்கோர்-ஐ பொறுத்தவரை ஆண்ராய்டு7.0 (நவ்கட்)அல்லது அதை விட மேம்படுத்தப்பட்ட கருவிகளில் செயல்படக்கூடியது.


2) இட அளவீடுகள் (Spatial measurement)

மற்றுமொரு முக்கிய வேறுபாடு என்னவெனில், ஏ.ஆர்கோர் அளவுகளை அதுவே கணக்கிட வேண்டும். அதே நேரம் டாங்கோ அதே அளவுகளை துல்லியமாக அளவிடும்.

3) செயல்படும் கருவிகள் (Supported device)

டாங்கோ செயல்படும் கருவிகள் பின்வருமாறு.

° பீனட் போன்

°யெல்லோ ஸ்டோன் டேப்லெட்

°லெனோவா பாப் 2 ப்ரோ

°ஆசுஸ் ஜென்போன் ஏ.ஆர்

இந்த நான்கில், லெனோவா பாப் 2 ப்ரோ

மற்றும் ஆசுஸ் ஜென்போன் ஏ.ஆர் மட்டுமே நுகர்வோர்களுக்கு கிடைக்கும். பீனட் போன் ஆராயச்சி நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும். இதில் இரண்டு போன்கள் நாசாவிற்கு தரப்பட்டுள்ளன.யெல்லோ ஸ்டோன் டேப்லெட், டாங்கோ ப்ராஜெக்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விற்கப்படுகிறது.


ஏ.ஆர்கோர்-ஐ பொறுத்தவரை ஆண்ராய்டு7.0 (நவ்கட்)அல்லது அதை விட மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்/ கருவிகளில் மட்டுமே செயல்படக்கூடியது. ஏ.ஆர்கோரினின் ப்ரிவியூ முடியும் முன்னர் 100 மில்லியன் கருவிகளில் செயல்பட வைக்கவேண்டும் என இலக்கு வைத்துள்ளது கூகுள்.

Best Mobiles in India

English summary
How is Google ARCore different from Tango; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X