ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி?

|

எபிக் கேம்ஸ் நிறுவனம் தனது பிரபல கேமான ஃபோர்ட்னைட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சாம்சங் அன்பேக்டு விழாவில் அறிவித்தது. அறிவிப்பின் போது ஃபோர்ட்னைட் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்குவதாக அறிவித்தது.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி?

எனினும், தற்சமயம் கூகுள் பிக்சல் 2 XL மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் வழங்கப்படுகிறது. ஐ.ஓ.எஸ். வெர்ஷன் போன்று இல்லாமல், ஃபோர்ட்னைட் கேம் வினியோகம் தேர்வு அந்நிறுவனத்தின் சொந்த விதிமுறைகளின் கீழ் நடைபெறுகிறது. இதனால் கேம் கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.

சாம்சங் ஸ்மார்ட்பஓன்களில், ஃபோர்ட்னைட் இன்ஸ்டாலர் சாம்சங் ஆப் ஸ்டோர் மூலம் கிடைக்கிறது. மற்றவர்கள் ஃபோர்ட்னைட் இன்ஸ்டாலர் அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று பதிவு செய்ய வேண்டும். கடின வழிமுறைகளில் சிக்கித் திணறாமல் இருக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆன்ட்ராய்டில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்யலாம்.

வழிமுறைகளை துவங்கும் முன், நினைவில் கொள்ள வேண்டியவை:

இந்த கேம் கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை, அந்நிறுவனம் ஃபோர்ட்னைட் கேமை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் ஃபோர்டனைட் என்ற பெயர் கொண்ட கேம்களை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி?

கேம் இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை பொருத்த வரை, முதலில் உங்களது ஸ்மார்ட்போனிற்கு ஃபோர்ட்னைட் விளையாடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு 'https://www.epicgames.com/fortnite/en-US/mobile/android/sign-up' வலைதளம் செல்ல வேண்டும். பின் ' https://www.epicgames.com/fortnite/en-US/mobile/android/sign-up' பக்கத்தை கணினி அல்லது ஸ்மார்ட்போனில் திறக்க வேண்டும்.

இனி 'Sign up for email invite' பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மற்றொரு வலைதளம் திறக்கும். இதில் எபிக் கேம்ஸ் லாக்-இன் போர்டல் என்றிருக்கு்ம. இங்கு, நீங்கள் ஏற்கனவே எபிக் அக்கவுன்ட் வைத்திருந்தால், அதை கொண்டு லாக்-இன் செய்யலாம். இதற்கு பிளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், நின்டென்டோ, ஃபேஸ்புக் அல்லது கூகுள் லாக்-இன் விவரங்களை கொண்டு உருவாக்கலாம்.

இவ்வாறு செய்ததும், உங்களது சாதனத்தை பட்டியலில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்

இனி காத்திருப்போர் பட்டியலில் இருப்பீர்கள், இதற்கு மின்னஞ்சலில் அழைப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி?

இன்ஸ்டாலர் மற்றும் கேமினை டவுன்லோடு செய்ய வேண்டும்

அழைப்பிதழை பெற்றதும், ஸ்மார்ட்போனில் இரண்டு செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டும்- அதாவது ஃபோர்ட்னைட் இன்ஸ்டாலர் மற்றும் கேம் ஆகியவை அடங்கும். மின்னஞ்சல் அழைப்பிதழில் இருந்து இன்ஸ்டாலர் ஏ.பி.கே. மூலம் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இன்ஸ்டாலரை இன்ஸ்டால் செய்ய உங்களது போனில் 'Unknown sources' ஆன் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி?

இனி, இன்ஸ்டாலரை திறந்தால் கேம் தானாக டவுன்லோடு ஆகிவிடும். இனி, உங்களது ஸ்மார்ட்போனில் கேமை லான்ச் செய்து விளையாட துவங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to install Fortnite on Android smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X