ஜியோ யூஸ் பண்றீங்களா.? அப்போது இந்த புதிய வசதியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

By Prakash
|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் வாடிக்கையாளர்களுக்க தகுந்தபடி புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திவருகிறது, மேலும் இந்த ஆண்டு ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் ஜியோ நிறுவனம் அதன் ஃபீச்சர்போனில் ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்தும் வசதி இடம்பெற்றுள்ளது.

ஜியோ : புதிய வசதியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

ஜியோ ஃபீச்சர்போன் பொறுத்தவரை ஜியோ டிவி, ஜியோ மியூசிக் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, இதர ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி இடம்பெற்றுள்ளது, அந்தவரிசையில் தற்சமயம் ஃபேஸ்புக் செயலியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை 1

வழிமுறை 1

முதலில் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் உங்கள் ஜியோபோனில் உள்ள ஜியோ ஸ்டோர்-ஐ தேர்வுசெய்து உள்நுழையவேண்டும். ஜியோ ஸ்டோரில் உள்ள Social channel-ஐ தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை 2

வழிமுறை 2

அடுத்துSocial channel-இருக்கும் பேஸ்புக் செயலியை பதிறக்கம் செய்து, இன்ஸ்டால் செயய வேண்டும். பின்பு எளிமையாக பேஸ்புக் செயலியைப் பயன்படுத்த முடியும்.

பயனுள்ள வகையில்

பயனுள்ள வகையில்

மேலும் மைஜியோ செயலியில் புதிய அப்டேட் வந்துள்ளது, இந்த அப்டேட் என்னவென்றால் (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இவை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்கும் கேள்விக்கு

கேட்கும் கேள்விக்கு

மைஜியோ செயலியில் இருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொறுத்தவரை, நீங்கள் கேட்கும் கேள்விக்கு வாய்ஸ் மூலம் பதில்வரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பம் உங்கள் செயலியில் இல்லையென்றால், அப்டேட் செய்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.

உதவியாய் இருக்கும்

உதவியாய் இருக்கும்

இந்த புதிய வசதி உங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டங்கள், சலுகைகள், மற்றம் உங்களின் கோரிக்கைகள் போன்ற அனைத்திற்கும் உதவியாய் இருக்கும். மேலும் இதுபோன்ற பல டெக் டிப்ஸ்களுக்கு, தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

இது நல்லதற்கு அல்ல: பிரபல பிஎஸ்என்எல் திட்டங்கள் வாபஸ்.!

இது நல்லதற்கு அல்ல: பிரபல பிஎஸ்என்எல் திட்டங்கள் வாபஸ்.!

இந்தியாவின் ஐந்தாவது பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) மொத்தம் 107 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஆனால் மிக விரைவில் இந்த எண்ணிக்கை குறையுமென்றே தோன்றுகிறது.

நீங்கள் நினைப்பது போல வாடிக்கையாளர் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்கு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நெருக்கடிகள் காரணமாக இருக்காது. அதற்கு முழு காரணமாகவும் பிஎஸ்என்எல்-ன் கண்மூடித்தனமான நடவடிக்கையாகத் தான் இருக்கும். அப்படியானதொரு நடவடிக்கையைடன் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

அனைத்து வட்டாரங்களில் வாபஸ்

அனைத்து வட்டாரங்களில் வாபஸ்

அதாவது, சமீபத்தில் திருத்தப்பட்ட ப்ரீபெய்ட் தரவுத் திட்டமான எஸ்டிவி 821 உட்பட நிறுவனத்தின் ஏழு ப்ரீபெய்ட் திட்டங்களை அனைத்து வட்டாரங்களில் இருந்தும் திரும்பப் பெறுவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. மேலும் இது லீக்ஸ் தகவல் அல்ல, அதிகாரப்பூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்பிப் பெறப்பட்ட திட்டங்களின் பட்டியல்

திரும்பிப் பெறப்பட்ட திட்டங்களின் பட்டியல்

இந்த திரும்பிப்பெறப்படும் பட்டியலில் வரம்பற்ற தரவு திட்டமான எஸ்டிவி ரூ.398, ரூ.629, ரூ.2,399, ரூ.821 மற்றும் ரூ.1,949/- திட்டமும் மற்றும் ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களான எஸ்டிவி ரூ.3,099 மற்றும் ரூ.1402/- ஆகிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ரூ.821/- ப்ரீபெய்ட்

ரூ.821/- ப்ரீபெய்ட்

மேற்கூறப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அன்றே திரும்பப் பெறப்பட்டதென்றும், பயனர்கள் இனி இந்தத் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய முடியாதென்பதையும் பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையில் மோசமான விடயம் என்னவென்றால் பிஎஸ்என்எல் மூலம் திரும்பி பெறப்பட்ட இந்த அனைத்து திட்டங்களுமே பிரபலமாக உள்ளன, குறிப்பாக, ரூ.821/- ப்ரீபெய்ட் பிளான்.!

120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி

120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி

எஸ்டிவி 821 ஆனது மொத்தம் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்கியது. மறுகையில் உள்ள ரூ.398/- மற்றும் ரூ.629/- ஆகிய கட்டண திட்டங்களானது, முறையே நாள் ஒன்றிற்கு 2 ஜிபி தரவு மற்றும் 3 ஜிபி தரவுகளை மொத்தம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கியது.

ஏற்கனேவே ரீசார்ஜ் செய்த பயனர்களுக்கு செல்லுபடியாகும்

ஏற்கனேவே ரீசார்ஜ் செய்த பயனர்களுக்கு செல்லுபடியாகும்

300 நாட்களுக்கு செல்லுபடியகவும் ரூ.1,949/- திட்டத்தை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு வரம்புக்குட்பட்ட 1 ஜிபி அளவிலான தரவையும், வரம்பு முடிந்த பின்னர் 40 கேபிபிஎஸ் வேகத்திலான வரம்பற்ற டேட்டாவையும் வழங்கியது. இருப்பினும், இந்த திட்டங்களை ஏற்கனேவே ரீசார்ஜ் செய்த பயனர்களுக்கு செல்லுபடியாகும் காலம் வரை நன்மைகளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று ஆறுதலான விடயம்

சற்று ஆறுதலான விடயம்

நிறுவனத்தின் பிராதான திட்டங்கள் திரும்பப் பெறபட்ட போதிலும், பிஎஸ்என்எல் அதன் ரூ.99 மற்றும் ரூ.319/- ஆகிய இரண்டு புதிய வரம்பற்ற குரல் அழைப்புகளை முறையே 26 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு எந்த வரம்புகளும் இல்லாமல் வழங்கி வருவது சற்று ஆறுதலளிக்கிறது.

ரூ.99 மற்றும் ரூ.319

ரூ.99 மற்றும் ரூ.319

அறிமுகமான பிஎஸ்என்எல் ரூ.99/- மற்றும் ரூ.319/- ஆனது முறையே 26 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்குசெல்லுபடியாகும் மற்றும் இவைகள் வரம்பற்ற குரல் அழைப்புகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இந்த புதிய வாய்ஸ் எஸ்டிவி-க்கள் ஆனது நிறுவனத்தின் தரவு சேவைகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது.

ஜியோவின் ரூ.98

ஜியோவின் ரூ.98

மேலும், அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ரூ.99/- ஆனது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் விலை அளவில் போட்டியிடுகிறது. ஜியோவின் ரூ.98/- ஆனது குரல் அழைப்பு மட்டுமின்றி மற்றும் தரவு சேவைகளையும் வழங்குகின்றது. உடன் பிஎஸ்என்எல் இந்த திட்டங்களுடன் எஸ்எம்எஸ் நன்மைகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இவைகள் முழுமையான வாய்ஸ் திட்டங்களாக இருக்கலாம்.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

ரூ.99/- என்கிற வாய்ஸ் எஸ்.டி.வி மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசுகையில், வீட்டு வட்டத்தில் உள்ள எந்தவொரு நெட்வர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மற்றும் , இது மும்பை மற்றும் தில்லி தவிர இதர அனைத்து வட்டத்திலும் தேசிய ரோமிங் அழைப்புகளையும் வழங்குகிறது.

பான்-இந்தியா அடிப்படையில்

பான்-இந்தியா அடிப்படையில்

மறுகையில் உள்ள ரூ.319/- ஆனது ரூ.99/0 வழங்கும் அதே சலுகைகளை அளிக்கிறது. ஆனால் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். பான்-இந்தியா அடிப்படையில் இந்த திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வதற்காக பிஎஸ்என்எல்-ன் வலைத்தளத்தை அணுகவும்.

28 நாட்கள் கூட இல்லை

28 நாட்கள் கூட இல்லை

துரதிருஷ்டவசமாக, ரூ.99/- திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் 26 நாட்கள் மட்டுமே, பிற ப்ரீபெய்டு எஸ்டிவிக்களை போன்று 28 நாட்கள் கூட இல்லை. எனவே, ஒரு வருடத்திற்கு, இதே திட்டத்தை 1பயன்படுத்த மொத்தம் 14 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தால் 13 முறை ரீசார்ஜ் செய்தால் போதும்.

குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான்

குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான்

மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- ஆனது 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளையும், 2 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. ஆக இந்த பிஎஸ்என்எல் ரூ.99/- திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு ஜிபி அளவிலான தரவாவது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறுவனம் தெளிவாக, இவைகளை குரல் அழைப்பு பயனர்களுக்கு மட்டும்தான் என்று கூறியுள்ளது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கும் தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
How to install Facebook app on JioPhone ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X