எப்படி வருவாய் ஈட்டுகிறது இன்ஸ்டாகிராம்?

|

ஏப்ரல் 2012ல் பேஸ்புக் நிறுவனம் மொபைல் புகைப்பட பகிரல் செயலியான இன்ஸ்டாகிராம்-ஐ $ 1 பில்லியன் டாலர் பணம் மற்றும் பங்குகளுக்கு வாங்கியபோது, அது தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆன, வருவாய் ஏதுமில்லா நிறுவனமாக இருந்தது.

எப்படி வருவாய் ஈட்டுகிறது இன்ஸ்டாகிராம்?

இந்த ஒப்பந்தம் பரவலாக சந்தேகத்திற்கு இடமளித்தது என்றாலும், டிசம்பர் 2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமின் மதிப்பு $ 35 பில்லியன் டாலர் மதிப்புள்ளது என சிட்டி குரூப் ஆய்வாளர்கள் கூறினர். வெறும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது $ 100 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக , அதாவது பேஸ்புக் வாங்கிய தொகையை விட 10 மடங்கு அதிக மதிப்புடையது என கணிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் CEO மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக் CEO மார்க் ஜுக்கர்பெர்க்

செப்டம்பர் 25, 2018 அன்று, இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீஜர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர் மற்றும் இந்த முடிவை பேஸ்புக் CEO மார்க் ஜுக்கர்பெர்க் எடுத்ததாக தெரிவித்தன.

 மாற்றத்தை ஏற்படுத்தியதா?

மாற்றத்தை ஏற்படுத்தியதா?

இந்த மாற்றம் இன்ஸ்டாகிராம்-ன் விரிவான வளர்ச்சி பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? அது ஆராயப்படவேண்டியது. இந்நிறுவனம் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது மற்றும் ஆறு ஆண்டுகளுக்குள் பேஸ்புக்-ன் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் பிரிவுகளில் ஒன்றாக உருவானது எப்படி என இங்கே காணலாம்.

இன்ஸ்டாகிராமில் விளம்பரம்

இன்ஸ்டாகிராமில் விளம்பரம்

பேஸ்புக்-ஐ போன்றே இன்ஸ்டாகிராமும் விளம்பரத்திலிருந்து தான் அதன் வருவாயை பெறுகிறது. பேஸ்புக் இன்ஸ்டாகிராமின் வருவாயை தனியாக பிரித்து காண்பிக்கவில்லை எனிலும், 2017ல் 98% பேஸ்புக் வருவாய் விளம்பரத்தில் இருந்தே கிடைத்து.இது 2016 ஆம் ஆண்டில் 97% ஆகவும், முந்தைய ஆண்டு 95% ஆகவும் இருந்தது என்கிறது அந் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்.

 பேஸ்புக் விட அதிகமாக உள்ளது

பேஸ்புக் விட அதிகமாக உள்ளது

இந்த வருவாயில் ஒரு பகுதி நிச்சயமாக இன்ஸ்டாகிராமில் இருந்து வந்திருக்கும். 2013 ஆம் ஆண்டு அந்நிறுவனம் கட்டண விளம்பர சேவையை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் விளம்பரதாரர்கள் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்ய திரண்டனர்.

இன்ஸ்டாகிராமின் விளம்பர வளர்ச்சி உண்மையில் அதன் தலைமை நிறுவனமான பேஸ்புக் விட அதிகமாக உள்ளது என சில சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன, 2018 இன் இரண்டாவது காலாண்டில், ஆண்டிற்கு விளம்பரதாரர்கள் செலவளிக்கும் தொகை 177% உயர்ந்த நிலையில், பேஸ்புக்கில் 40% வளர்ச்சியே இருந்தது. அதே காலாண்டில் இன்ஸ்டாகிராமின் தாக்கம் 209% சதவீதம் உயர்ந்த நிலையில், பேஸ்புக் 17% வீழ்ச்சியை சந்தித்தது.

வேறலெவல் வசதியுடன் கலக்கவரும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி.! ஆண்ட்ராய்டு பயனர்கள் மகிழ்ச்சி.!வேறலெவல் வசதியுடன் கலக்கவரும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி.! ஆண்ட்ராய்டு பயனர்கள் மகிழ்ச்சி.!

மொபைல் போனின் தவிர்க்க முடியாத வளர்ச்சி

மொபைல் போனின் தவிர்க்க முடியாத வளர்ச்சி

இன்ஸ்டாகிராமின் வலிமை மற்றும் அதை பேஸ்புக் வாங்கியதற்கான - முக்கிய காரணம் அதன் அர்ப்பணிப்பு மற்றும் வளர்ந்து வரும் மொபைல் பயனர் தளம். ஜூன் 2018ல், சமூக வலைதளம் 1 பில்லியன் பயனர்கள் என்ற மைல்கல்லை எட்டியது.

இந்தியா: சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!இந்தியா: சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!

இன்ஸ்டாகிராமை பேஸ்புக் வாங்கியபோது

இன்ஸ்டாகிராமை பேஸ்புக் வாங்கியபோது

, மொபைல் போன்கள் சிறிய அளவில் பயன்பாட்டில் இருப்பதை வைத்து ஆய்வாளர்கள் பேஸ்புக்-ஐ விமர்சித்தனர். ஆனால் பேஸ்புக் விளம்பரத்தில் மொபைல் பிரிவு, 2016 இல் 83% மற்றும் 2017 இல் 88% விளம்பர வருவாயை ஈட்டுகொடுத்துள்ளது.

சில நிறுவனங்களை தவிர்த்துவிட்டது

சில நிறுவனங்களை தவிர்த்துவிட்டது

இன்ஸ்டாகிராமில் விளம்பரம் என்பது அதிநவீனமாகி வருகிறது வருகிறது.அந்த அம்சங்கள் ஒன்றில், விளம்பரதாரர்கள் ஸ்லைடுஷோ மூலம் விளம்பரபடுத்தவும் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்திற்கு வெளியே உள்ள இணையதளங்களுக்கு இணைப்பை பெறவும் அனுமதிக்கிறது. அந்த பிராண்ட் விளம்பரம் இதுவரை பேஸ்புக்கின் மிகப்பெரிய இணைய போட்டியாளர்களாக இருந்த சில நிறுவனங்களை தவிர்த்துவிட்டது.

Best Mobiles in India

English summary
How Instagram Makes Money via Advertisement : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X