ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா வேகத்தை அதிகரிக்க இதை செய்தால் போதும்.!

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் போட்டி நிறுவனங்களையும் விலை குறைக்க செய்துள்ள நிலையில், ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

|

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் போட்டி நிறுவனங்களையும் விலை குறைக்க செய்துள்ள நிலையில், ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஜியோ 4ஜி டேட்டா வேகத்தை அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்.!

மார்ச் 2018 மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் சுமார் 94 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதே காலகட்டத்தில் ஐடியா செல்லுலார் நிறுவனம் 91 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ கட்டண சேவைகள் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கும் நிலையிலும், ஜியோ 4ஜி டேட்டா வேகம் துவக்கத்தில் இருந்த அளவு தற்சமயம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

நீங்களும் இதே நிலையை அனுபவித்தால், இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி டேட்டா வேகத்தை அதிகரிக்க ஐந்து சூப்பர் தந்திரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கேச்சி

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கேச்சி

ஸ்மார்ட்போனின் டேட்டா வேகம் குறைந்தால் உடனடியாக ஸ்மார்ட்போனின் கேச்சி மெமரியை அழிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மொபைல் டேட்டா வேகம் முன்பு இருந்ததை விட அதிகமாகி இருப்பதை உணர முடியும். ஆன்ட்ராய்டு போனின் கேச்சி மெமரி முழுமையாக இருந்தால் டேட்டா வேகம் மட்டுமின்றி மொபைல் போனின் வேகமும் தானாகவே குறைந்து விடும்.

பயனற்ற செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்

பயனற்ற செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்

ஸ்மார்ட்போனில் அதிகப்படியான செயலிகளை இன்ஸ்டால் செய்திருந்தால் ஸ்டோரேஜ் நிரம்புவது மட்டுமின்றி ஸ்மார்ட்போனின் வேகமும் குறைந்து விடும். இதன் காரணமாகவே டேட்டா வேகமும் குறையும். இதனால் மொபைல் டேட்டா வேகம் குறைந்தால் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்திருக்கும் பயன்படுத்தாத செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யலாம்.

பிரவுசர் டெக்ஸ்ட் மோட்

பிரவுசர் டெக்ஸ்ட் மோட்

பிரவுசிங் செய்யும் போது புகைப்படங்கள் வேண்டாம் எனில், டெக்ஸ்ட் மட்டும் தெரியும் படி செய்ய முடியும். இதை செய்ய பிரவுசரின் டெக்ஸ்ட் மோட் ஆன் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படங்கள் டிசேபிள் செய்யப்படும் என்பதால் மொபைல் டேட்டா வேகம் அதிகரித்து இருப்பதை அனுபவிக்க முடியும்.

ஸ்பீடு பூஸ்டர் செயலிகள்

ஸ்பீடு பூஸ்டர் செயலிகள்

கூகுள் பிளே ஸ்டோரில் 4ஜி டேட்டா வேகத்தை அதிகப்படுத்தும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. இவற்றில் சிறப்பான செயலியை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

பேக்கிரவுன்டு ஆப்ஸ்

பேக்கிரவுன்டு ஆப்ஸ்

ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் பெரும்பாலான செயலிகள் பின்னணியில் உங்களது மொபைல் டேட்டாவை சத்தமில்லாமல் சாப்பிட்டு கொண்டிருக்கும். இவ்வாறு நடக்கும் போது டேட்டா வேகமும் குறையும். இதனால் பின்னணியில் இயங்கும் செயலிகளை முடக்கினால் டேட்டா வேகம் அதிகரிக்கும். இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
How to Increase Reliance Jio 4G Data Speed on Your Phone 5 Quick Tricks ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X