ஜியோவின் இன்டர்நெட் வேகத்தை எகிறவைக்க 3 சீக்ரெட் செட்டிங்ஸ்.!

ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது.

|

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது,அதன்படி புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளன. மேலும் டிராய் (Telecom Regulatory Authority of India - Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

கடந்த 2017 நவம்பர் மாதத்தில், ஜியோவின் மொபைல் தரவு வேகம் (பதிவிறக்கம்) ஆனது 25.6 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது 2017 ஆண்டு காலண்டரில் அதிகபட்ச வேகமாகும் என்பதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது. மேலும் சில ஸ்மார்ட்போன்களில் ஜியோ இணையவேகம் சற்று குறைவாகவே இருக்கும்,இதனை மாற்றவும் ஜியோ இணைய வேகத்தை அதிகரிக்கவும் சில வழிமுறைகள் உள்ளன.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் ஜியோ-சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் அமைப்புக்குள் நுழைய வேண்டும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின்பு செட்டிங்ஸ் அமைப்புக்குள் இருக்கும் mobile networks தேர்வுசெய்து access point names-கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

மேலும் அவற்றில் இண்டர்நெட் (ஜியோநெட்) என காண்பிக்கும், அதனை தேர்வுசெய்து உள்நுழைய வேண்டும். பின்பு அவற்றில் server-கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து நீங்கள் கிளிக் செய்த server-பகுதியில் JIO NETCONNET-என்று டைப் செய்ய வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

அதன்பின்பு அந்த செட்டிங்ஸ் பகுதியில் bearer தேர்வுசெய்து, LTE-ஐ கிளிக் செய்ய வேண்டு

வழிமுறை-6:

வழிமுறை-6:

அடுத்து bearer-க்கு கீழே MVNOtype-எனும் விருப்பத்தை தேர்வுசெய்து IMSI-கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-7:

வழிமுறை-7:

மேலும் அந்த செட்டிங்ஸ் பகுதியில் உள்ள authentication type-தேர்வுசெய்து PAP or CHAP--கிளிக் செய்யவேண்டும்,அதன்பின்பு உங்கள் ஸ்மார்ட்போனை reboot-செய்துவிட்டு பயன்படுத்தினால் இணையவேகம் சற்று அதிகரிக்கும்.

வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.!

வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.!

வாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி இப்போது வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும், அதுவே டைப் செய்யும் வசதியைக் கொண்டுவந்துள்ளது. மேலும் விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் செயலிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் வியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி முக்கிய அம்சம் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் உங்கள் வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று language & input-எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து language & input-வழியே current keyboard-கிளிக் செய்தால் gboard-எனும் விருப்பத் தேர்வுசெய்து உள் நுழைய வேண்டும்

How To Increase the Speed of your Laptop (TAMIL)
வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின்பு gboard- அமைப்பில் இருக்கும் languages-கிளிக் செய்து தமிழ் இந்தியா ஏபிசி எனும் விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

மேலும் gboard-அமைப்பில் இருக்கும் வாய்ஸ் டைப்பிங்-ஐ கிளிக் செய்து தமிழ் (இந்தியா) விருப்பத்தை தேர்ந்தேடுத்தால் மிக எளிமையாக வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.

உங்கள் மொபைல் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த இந்த 1 ஆப் போதும்.!

உங்கள் மொபைல் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த இந்த 1 ஆப் போதும்.!

ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் அதிகமாவதற்கு முக்கிய காரணம் அவற்றில் பயன்படுத்தப்படும் அதிகளவு அப்ளிகேஷன் தான், நாம் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் பல்வேறு அப்ளிகேஷன் பொறுத்தவரை சில சமயம் ஸ்மார்ட்போன்களில் அதிக பிரச்சனைகளை கொண்டுவரும். இதனை தவிர்க்கவும் அனைத்து அப்ளிகேஷன்களையும் 1 ஆப் வசதியில் கொண்டுவர சில வசதிகள் உள்ளது.

உதரணமாக நாம் தினசரி பயன்படுத்தும் ஷாப்பிங் ஆப், சமூக ஊடகம், பியூட்டி ஆப், இ-மெயில், செய்தித்தாள், பொழுதுபோக்கு உள்ளடக்கிய அனைத்து ஆப் வசதிகளையும் ஃபாஸ்ட்டோ என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் மிக எளிமையாக பயன்படுத்த முடியும்

வழிமுறை 1:

வழிமுறை 1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோர் வழியே இந்த ஃபாஸ்ட்டோ அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்த இந்த ஃபாஸ்ட்டோ அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அடுத்து இந்த ஆப் பயன்பாட்டில் ஷாப்பிங் வசதிக்கு அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல், போன்ற பல்வேறு ஆன்லைன் தளங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது இவற்றை மிக அருமையாக பயன்படுத்த முடியும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

டோமினோஸ் பீஸ்ஸா, கேஎப்சி போன்ற நிறைய உணவு வகை சார்ந்த ஆப் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேடிஎம், ஜியோ, ஏர்டெல்,வோடபோன், ஐடியா போன்ற நிறைய ஆன்லைன் ரீசார்ஜ் இந்த ஃபாஸ்ட்டோ செயலியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-5:

வழிமுறை-5:

மேலும் இந்த ஃபாஸ்ட்டோ செயலியில் பயணம் மற்றும் ஹோட்டல், திரைப்படம், மருத்துவம், ஒஎல்எக்ஸ், குவிக்கர், போன்ற பல ஆன்லைன் சார்ந்த பல்வேறு பயன்பாடுகளை உபயோகப்படுத்த முடியும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், இ-மெயில் போன்ற 25 சமூக வலைதளங்களை இந்த ஃபாஸ்ட்டோ-ல் பயன்படுத்த முடியும், அதன்பின்பு செய்தித்தாள், பொழுதுபோக்கு உள்ளடக்கிய அனைத்து ஆப் வசதிகளையும் இவற்றில் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
How To Increase Jio 4G Net Speed ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X