உங்க டி.வி.யின் ஆடியோ தரத்தை மேம்படுத்துவது எப்படி?

சில மாற்றங்கள் மற்றும் அப்கிரேடுகளை செய்தால், உங்களது டி.வி.யின் ஆடியோ தரத்தை சிறப்பானதாக மேம்படுத்த முடியும்.

|

தொலைகாட்சி தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது டிவி மாடல்களின் காட்சி திறனை மேம்படுத்துவதில் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றன. இதே போன்று ஆடியோ சார்ந்த அம்சங்களும் அதிகளவு மேம்படுத்தப்படுகின்றன, எனினும் ஆடியோ தரம் மட்டும் பலருக்கும் உகந்ததாக இருப்பதில்லை.

உங்க டி.வி.யின் ஆடியோ தரத்தை மேம்படுத்துவது எப்படி?

சில மாற்றங்கள் மற்றும் அப்கிரேடுகளை செய்தால், உங்களது டி.வி.யின் ஆடியோ தரத்தை சிறப்பானதாக மேம்படுத்த முடியும். அந்த வகையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை 1: டி.வி.யின் ஆடியோ செட்டிங்கை மாற்றலாம்
டி.வி.யின் ஆடியோ தரத்தை மேம்படுத்தும் போது செய்ய வேண்டிய முதல் கடமை டி.வி.யின் செட்டிங்கை மாற்றுவது தான். நீங்கள் வாங்கிய டி.வி.யின் கஸ்டம் ஆடியோ செட்டிங் எப்போதும் சிறப்பானதாக இருக்காது, இதனால் சில அம்சங்களை மாற்றியமைத்து சிறப்பான அனுபவத்தை பெற முடியும்.

உங்களது டி.வி.யில் அதிக ஆடியோ மோட்கள்: மூவி, மியூசிக், கேம், வாய்ஸ், கஸ்டம் போன்றவை இருப்பின், ஒவ்வொரு மோடாக மாற்ற உங்களுக்கு ஏற்ற மோடினை தேர்வு செய்யலாம். எந்த மோடும் எனக்கு பிடிக்கவில்லை எனில் கஸ்டம் மோட் செட் செய்து, ஈக்வலைசர் (equalizer) மேனுவலாக மாற்றலாம்.

- பேஸ் செட்டிங்கை மாற்றும் போது ஸ்லைடர் அளவுகளை 20Hz இல் 250Hz வரை தேர்வு செய்யலாம்.

- டிரெபிள் செட்டிங்கின் ஸ்லைடர் அளவுகளை 4KHz இல் 20KHz வரை தேர்வு செய்யலாம்.

உங்க டி.வி.யின் ஆடியோ தரத்தை மேம்படுத்துவது எப்படி?

வழிமுறை 2: டி.வி.யை மவுன்ட் ஸ்டான்டில் பயன்படுத்தலாம்

ஒரு வேலை டி.வி.யின் ஸ்பீக்கர்கள் கீழ்பக்கமாக பொருத்தப்பட்டிருந்தால், அதனை டேபிள் ஸ்டான்டில் வைத்து பயன்படுத்தலாம். இதனால் ஆடியோ தரம் உயர அதிக வாய்ப்புகள் உள்ளன. டேபிள் பரப்பளழு டி.வி.யில் இருந்து வரும் ஆடியோ தரத்தை மேம்படுத்தி விர்ச்சுவல் சவுன்ட் எஃபெக்ட்-ஐ உருவாக்கும்.

உங்க டி.வி.யின் ஆடியோ தரத்தை மேம்படுத்துவது எப்படி?

வழிமுறை 3: டி.வி.யுடன் தனி ஸ்பீக்கரை பயன்படுத்தலாம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியும் ஆடியோ தரத்தில் திருப்தி கொள்ளவில்லை எனில், டி.வி.யுடன் தனி ஸ்பீக்கரை பயன்படுத்தலாம். எனினும் புதிய ஸ்பீக்கரை வாங்கும் முன் உங்களது டி.வி.யின் கனெக்டிவிட்டி அம்சத்தை சரிபார்ப்பது நல்லது.
Best Mobiles in India

English summary
How to improve the audio quality of your TV: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X