மக்கர் பண்ணும் லேப்டாப் பேட்டரி; சர்வீஸ் கொடுக்க வேண்டாம்; இதை பண்ணுங்க.!
உங்கள் லேப்டாப்பில் இருக்கும் பவர் செட்டிங்ஸை மாற்றியமைக்க வேண்டும், குறிப்பாக பவர் தீரும் நிலையில் லேப்டாப் பேட்டரி பவர் சேவர் மோடு ஆன் செய்ய வேண்டும்.
இப்போது வரும் லேப்டாப் போன்ற சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது, ஆனாலும் சில லேப்டாப் மாடல்களில் அடிக்கடி சார்ஜ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது, இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இப்போது வரும் ஆப்பிள் லேப்டாப் போன்ற சாதனங்களில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் இவற்றை பயன்படுத்தவும் மிக எளிமையாக இருக்கும்.

குறிப்பாக லேப்டாப் சாதனங்களின் ஸ்கீரின் ஒளியை குறைத்துவைக்க வேண்டும் இதன் மூலம் சார்ஜ் தீர்ந்துவிடும் நிலைமை ஏற்படாது. மேலும் பேட்டரி ஆயுள் மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை பார்ப்போம்.

ஸ்கீரின்:
முதலில் உங்கள் லேப்டாப் பேட்டரி ஆயுள் மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது, ஸ்கீரின் ஒளியை குறைத்துவைக்க வேண்டும். இதன் மூலம் மிக எளிமையாக லேப்டாப் பேட்டரி ஆயுளை நீட்டிக்க முடியும். மேலும் கீபோர்டு பேக்லைட்டிங் ஆஃப் செய்ய வேண்டும்.

பவர் செட்டிங்ஸ்:
உங்கள் லேப்டாப்பில் இருக்கும் பவர் செட்டிங்ஸை மாற்றியமைக்க வேண்டும், குறிப்பாக பவர் தீரும் நிலையில் லேப்டாப் பேட்டரி பவர் சேவர் மோடு ஆன் செய்ய வேண்டும்.

வைஃபை & புளூடூத்:
குறிப்பாக வைஃபை மற்றும் புளூடூத் போன்றவற்றை அதிநேரம் ஆன் செய்து வைக்க கூடாது, குறிப்பிட்ட நேரம் மற்றும் உபயோம் செய்தல் வேண்டும்.

சார்ஜர்:
உங்கள் லேப்டாப் சாதனத்தை நீண்ட நேரம் சார்ஜரில் வைக்க கூடாது. குறிப்பாக சூடான இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மிக எளிமையாக பேட்டரி ஆயுளை மேம்படுத்த முடியும்.

யூஎஸ்பி:
லேப்டாப் சாதனங்களில் அதிக நேரம் அப்ளிகேஷன்களை பயன்படுத்தக்கூடது, குறிப்பாக யூஎஸ்பி, டிவிடி, யூஎஸ்பி வெப் கேம் போன்றவற்றை தவிர்பது மிகவும் நல்லது.

கூடுதல் பேட்டரி:
நீங்கள் லேப்டாப் சாதனங்களை அதிக நேரம் உபயோகம் செய்வீர்கள் என்றால், கூடுதல் பேட்டரியை வாங்கி உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது.

ட்யூன்
ட்யூன் சீரான இடைவெளியில் லாப்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் தேவையற்ற மொன்பொருள்களை அழித்து விடுவது நல்லது. மேலும் வெப் ப்ரவுஸர் கேச்சி மற்றும் பழைய ஃபைல்களையும் அழிக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங்:
குறிப்பாக உங்கள் லேப்டாப்பில் பேட்டரி குறைவாக இருக்கும் போது மல்டி டாஸ்கிங் செய்யக் கூடாது, மல்டி டாஸ்கிங் செய்தால் மிக எளிமையாக சார்ஜ் தீர்த்து விடும்.

கிராபிக்ஸ் சிப்செட்:
ஏம்டி அல்லது என்விடியா கிராபிக்ஸ் சிப்செட் இருந்தால் மிகவும் நல்லது,குறிப்பாக நம்பகத்தன்மையுள்ள கிராபிக்ஸ் சிப்செட் வசதியை
பயன்படுத்துவது மிகவும் நல்லது.


மெமரி:
முடிந்த வரை வை-பை, புளூடூத் ரேடியோ, கிராபிக்ஸ் பிராசஸர் போன்ற அம்சங்களை ஆஃப் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் சற்று நேரத்திற்கு அதிகரிக்கும். மேலும் உங்கள் லேப்டாப்பில் இருக்கும் தேவையில்லதா வீடியோ மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை டெலிட் செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக உங்களுடைய லேப்டாப் மெமரியை எளிமையா மெனேஜ் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








