ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாய்ஸ் கால் தரத்தை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ்.!

பெரும்பாலும் அழைப்புகளின் போது இதுபோன்ற பிரச்சனை ஏற்பட ஸ்பீக்கர், மைக்ரோபோன் அல்லது இயர்பீஸ் உள்ளிட்டவற்றை மறைக்கப்படுவதே முக்கிய காரணியாக கூற முடியும்.

|

ஸ்மார்ட்போன்களில் வாய்ஸ் கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை கடந்து பல்வேறு ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆன்ட்ராய்டு மொபைலில் உடல்நலத்தை டிராக் செய்யும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், பலரும் மொபைல் போன்களின் அடிப்படை தேவை அழைப்புகளை மேற்கொள்வது என்பதையே மறந்து விடுகின்றனர்.

ஆன்ட்ராய்டு மொபைலில் வாய்ஸ் கால் தரத்தை மேம்படுத்த டிப்ஸ்.!

பல்வேறு வித்தியாச அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில், தற்போதைய ஆன்ட்ராய்டு மொபைல் போன்களின் வாய்ஸ் கால் தரம் வாடிக்கையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்றே கூறலாம்.

அந்த வகையில் ஆன்ட்ராய்டு மொபைலில் வாய்ஸ் கால் தரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

மொபைலில் மைக்ரோபோன், இயர்போன் மற்றும் ஸ்பீக்கர்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும்:

மொபைலில் மைக்ரோபோன், இயர்போன் மற்றும் ஸ்பீக்கர்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும்:

- பெரும்பாலும் அழைப்புகளின் போது இதுபோன்ற பிரச்சனை ஏற்பட ஸ்பீக்கர், மைக்ரோபோன் அல்லது இயர்பீஸ் உள்ளிட்டவற்றை மறைக்கப்படுவதே முக்கிய காரணியாக கூற முடியும். உங்களுக்கு வரும் வாய்ஸ் கால் அழைப்பு தரம் குறைவாக இருக்க காரணம் உங்களது கைகளாகவும் இருக்கலாம்.

- மொபைலினை கைகளில் வித்தியாசமாக வைத்து பேசினாலே சில சமயங்களில் பிரச்சனை தீர்ந்துவிடும்.

- வாய்ஸ் கால் தரம் குறைய முக்கிய காரணங்களில் ஒன்றாக சிலரின் மொபைல் போன் கேஸ்களையும் கூற முடியும். சில மொபைல் கேஸ்கள் உங்களது மொபைலின் ஸ்பீக்கரை மறைத்து இருக்கலாம். இதன் காரணமாக அழைப்புகளின் தரம் குறைவாக இருப்பதாக உங்களுக்கு தோன்றலாம்.

- மென்மையான முடிகளை கொண்ட பல்துளக்கும் பிரஷ் கொண்டு ஸ்பீக்கர் பகுதிகளை மென்மையாக சுத்தம் செய்யலாம், இவ்வாறு செய்யும் போது வாய்ஸ் கால் தரம் அதிகரிக்கலாம்.

- கீபோர்டுகளை சுத்தம் செய்யும் உபகரணங்களை கொண்டு தூசிகளை சுத்தம் செய்யலாம்.

வை-பை காலிங்:

வை-பை காலிங்:

மொபைல் போனில் நெட்வொர்க் குறைவாக இருக்கும் பகுதிகளில் சீரான வைபை இணைப்பு கிடைக்கும் பட்சத்தில் வைபை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

இதற்கான ஆப்ஷன் வெவ்வேறு நிறுவன சாதனங்களுக்கு ஏற்ப மாறுபடும். எனினும் நெட்வொர்க் செட்டிங்ஸ் -- வைபை செட்டிங்ஸ் -- போன் டையலர் செட்டிங்ஸ் பகுதியில் வைபை கால்ஸ் ஆப்ஷனை பார்க்க முடியும்.

இன்டர்நெட் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம்:

இன்டர்நெட் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம்:

உங்களது ஸ்மார்ட்போனில் வைபை காலிங் வேலை செய்யவில்லை என்றால், இதற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் செயலிகளை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதுபோன்று கிடைக்கும் பெரும்பாலான செயலிகளை இலவசமாக டவுன்லோடு செய்ய முடியும். ஸ்கைப், வாட்ஸ்அப், கூகுள் டுயோ போன்ற செயலிகள் இன்டர்நெட் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
How to improve call quality on Android phones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X