இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸை குறிப்பிட்டவர்களிடம் இருந்து மறைக்கும் வழிமுறைகள்

|

பல்வேறு அம்சங்களைத் தவிர, "ஸ்டோரீஸ்" போன்ற ஸ்னாப்சாட்டை ஒத்த நவீன மற்றும் பிரபல அம்சங்களைக் கொண்டு தனது அப்ளிகேஷனைப் புதுப்பிக்கும் பணியில் இன்ஸ்டாகிராம் ஈடுபட்டுள்ளது. இது, நாள் முழுவதும் நடக்கும் காரியங்களை பயனர் வீடியோக்களாக எடுத்து, அதை பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு புதிய அம்சமாகும். 24 மணிநேரத்திற்கு பிறகு இது தானாக அகற்றப்படும். அதன்பிறகு உங்கள் சுயவிவரத்தில் கிரிட் அல்லது ஃபீடில் கூட இருக்காது.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸை குறிப்பிட்டவர்களிடம் இருந்து மறைக்கும் வழிமுறை

இந்த ஸ்டோரீஸ் அம்சத்தை பயன்படுத்த, அன்றாட வாழ்க்கையில் பயனர் எப்படி செயல்படுகிறார் என்பதை விளக்கும் வகையிலான படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தக் கட்டுரையில், குறிப்பிட்ட சில பின்பற்றுபவர்களிடம் இருந்து உங்கள் ஸ்டோரீஸை எப்படி மறைக்கலாம் என்பதற்கான வழிமுறைகளைக் காணலாம். மறைப்பது என்பதை தடுப்பது (பிளாக்கிங்) என்று பொருள் கொள்ளக் கூடாது. நம் ஸ்டோரீஸை மறைத்தாலும், மறைக்கப்பட்டவர்களால் உங்கள் சுயவிவரத்தையும் இடுகைகளையும் காண முடியும்.

படி 1: இப்போது கீழே வலது முனையில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டி, உங்கள் சுயவிவரத்திற்குச் செல்லவும்.

படி 2: நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருக்கும்பட்சத்தில் மேலே வலது முனையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும். நீங்கள் ஒரு ஐஓஎஸ் பயனராக இருக்கும் பட்சத்தில் அமைப்புகளுக்குச் செல்லவும்.

படி 3: அதன்பிறகு, கணக்கிற்கு கீழே உள்ள ஸ்டோரீ அமைப்பைத் தட்டவும்.

படி 4: இப்போது பின்வரும் நபரிடம் இருந்து ஸ்டோரீயை மறைக்கவும் என்ற விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: யாரிடம் இருந்தெல்லாம் உங்கள் ஸ்டோரீயை மறைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவர்களின் சுயவிவரங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, முடிந்தது என்பதை அழுத்தவும். உங்கள் ஸ்டோரீகளை யாரிடமிருந்தும் மறைக்க வேண்டிய தேவையில்லை எனில், சுயவிவரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம்.

24 மணிநேரத்திற்கு பிறகும் உங்கள் ஸ்டோரீஸ் அகற்றப்பட வேண்டாம் என்றால், உங்கள் ஸ்டோரீஸை காப்பகத்தில் (ஆர்ச்சீவ்) செய்து தனிப்பட்ட முறையில் பார்க்கலாம் அல்லது ஒரு ஹைலைட்டை உருவாக்குவதன் மூலம் பயனரின் சுயவிவரத்தில் அவர் விரும்பும் வரை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்து கொண்டு பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் "டைப் மோடு" என்ற மற்றொரு புதிய அம்சம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் எந்தப் படத்தையும் சேர்க்காமல், பயனருக்கு விருப்பமான காரியங்களை ஸ்டோரீஸில் டைப் செய்ய முடியும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

மற்ற ஸ்டோரீஸைப் போலவே, இதுவும் 24 மணிநேரத்தில் தானாக மறைந்துவிடும். இந்த அம்சமானது, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் உள்ளது. மேலும், கிஃப்பி உடன் கைக்கோர்த்துள்ள இன்ஸ்டாகிராம், ஆயிரக்கணக்கான கிஃப்பி ஸ்டிக்கர்களை அணுகும் வகையில் ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதை ஸ்டோரீஸில் உள்ள ஏதாவது ஒரு படம் அல்லது வீடியோ உடன் சேர்க்கவும் முடியும். இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தற்போது அதிக பிரபலமான ஸ்டிக்கர்களை பிரவுஸ் செய்யலாம் அல்லது ஜிஐஎப்-களை கீவேர்டு மூலம் தேடலாம்.

விண்டோஸ் 10-ல் பரிந்துரைக்கப்பட்ட அப்ஸை நிறுத்தும் வழிமுறைகள்விண்டோஸ் 10-ல் பரிந்துரைக்கப்பட்ட அப்ஸை நிறுத்தும் வழிமுறைகள்

Best Mobiles in India

English summary
Instagram has started revamping its app with lots of features and the latest and famous one to tag along is the Snapchat-like "Stories".

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X