Home
How to

மெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி?

மெசன்ஜர் டே என அழைக்கப்பட்ட இந்த அம்சம் 2017 நவம்பரில் பெயர் மாற்றப்பட்டது.

By Meganathan S

ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சேவைகளில் ஸ்டோரி அம்சம் வழங்கப்படுகிறது. ஸ்னாப்சாட் தளத்தில் துவங்கிய இந்த அம்சம் தற்சமயம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதே அம்சம் மெசன்ஜர் செயலியில் மை டே என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி?

மெசன்ஜர் டே என அழைக்கப்பட்ட இந்த அம்சம் 2017 நவம்பரில் பெயர் மாற்றப்பட்டது. மற்ற சேவைகளை போன்று இல்லாமல், இந்த ஸ்டோரி 24 மணி நேரத்தில் தானாக அழிந்து போகாமல், நிரந்தரமாக இருக்கும். மெசன்ஜரில் போட்டோ, வீடியோ மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை சேர்க்க முடியும்.

ஸ்டோரியில் பயனர் விரும்பும் எவ்வித வீடியோ, புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவிட முடியும். ஃபேஸ்புக்கில் ஸ்டோரியை சேர்ப்பது மிகவும் எளிமையானது தான்.

- மெசன்ஜர் செயலியை திறக்கவும்.

- ஹோம் ஐகானை க்ளிக் செய்யவும்.

- செயலியின் மேல்புறம் இடதுபக்கமாக க்ளிக் செய்து Add பட்டன் காணப்படும்

- புகைப்படம், வீடியோ அல்லது டெக்ஸ்ட்-ஐ தயார் செய்ததும், கீழ்பக்கம் காணப்படும் அம்புகுறியை க்ளிக் செய்யவும்.

- இனி Your Story அருகில் உள்ள next ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது ஸ்டோரியில் சேர்க்க முடியும்.

- ஸ்டோரியை குறிப்பிட்ட சிலருக்கு குறுந்தகவலாக அனுப்பும் வசதியும் வழங்கப்படுகிறது.

மெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி?

ஸ்டோரியை அழிக்க வேண்டும் எனில் ஹோம் ஸ்கிரீனில் உள்ள உங்களது ஸ்டோரியை க்ளிக் செய்து, அருகில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து டெலீட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.


சமூக வலைத்தளங்களில் ஸ்டோரியை பதிவிடும் போது சில சமயங்களில் நீங்கள் தொடர்பில் இருக்க விரும்பாதவர்களுக்கும் அவை பகிர்ந்து கொள்ளப்படும். மெசன்ரின் மை டே அம்சம் புகைப்படம், வீடியோக்களை கடந்து பல்வேறு அம்சங்களுக்கு வழி செய்கிறது. நீங்கள் பதிவேற்றம் செய்த புகைப்படம் அல்லது வீடியோவை மை டே-ஆக ஸ்டோரியாக பகிர்ந்து கொள்ள வேண்டாமெனில் அதற்கான ஆப்ஷனை டிசேபிள் செய்யலாம்.

மெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி?

மெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்யலாம்

ஃபேஸ்புக்கில் ஸ்டோரிக்களை நேரடியாக மறைக்க எவ்வித ஆப்ஷனும் இல்லாத நிலையில், மெசன்ஜர் ஸ்டோரிக்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.


- மெசன்ஜரில் உள்ள ப்ரோஃபைலை க்ளிக் செய்ய வேண்டும்.

- கீழ்புறமாக ஸ்கிரால் செய்து ஸ்டோரி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி கஸ்டம் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து சேஞ்ச் (Change)

- மெசன்ஜரில் உங்களது கான்டாக்ட் லிஸ்ட் தெரியும்.

- இதில் எவ்வித கான்டாக்ட்-யும் தேர்வு செய்ய வேண்டாம்.

- பேக் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி 'Warning’ என்ற தலைப்பில் 'Nobody will be able to see your Day,’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதில் OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to hide Messenger Stories from everyone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X