கூகுள் நம் தகவல்களை எப்படி சேகரித்து பயன்படுத்துகிறது தெரியுமா?
அனேகமாக கூகுளை உபயோகிக்காதவர்களே இருக்க முடியாது என்ற நிலை தான் தற்போது உள்ளது. கூகுள் மேப், ஜிமெயில், கூகுள் சியர்ச் உள்பட பல சேவைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.

அதேசமயம் இந்த சேவையை பயன்படுத்தும் முன்னர் நாம் நம்முடைய சில தகவல்களை கூகுளுக்கு அளிக்க வேண்டும். இது நமது தேடுதல்கள் சரியாக கிடைக்கவும், நமக்கு பொருத்தமான விளம்பரங்களை பதிவு செய்யவும் கூகுளுக்கு உதவுகிறது.

கூகுள் கேட்கும் தகவல்கள் என்ன?
கூகுளுக்கு நாம் என்னென்ன தகவல்கள் கொடுக்கின்றோம் என்பது தெரியுமா? உதாரணமாக நாம் கூகுளின் சேவையை பயன்படுத்தும்போது நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், பெயர், இமெயில் முகவரி, தொலைபேசி எண், கிரெடிட் அட்டை எண் உள்பட பல தகவல்களை கூகுளுக்கு தரவேண்டிய நிலை வரும்

கூகுள் நம் தகவல்களை என்ன செய்கிறது?
நாம் கூகுளின் சேவைகளை பயன்படுத்தும்போது, உதாரணமாக யூடியூப் வீடியோ பார்க்கும்போதோ, இணையதளங்களுக்கு செல்லும்போது, நம்முடைய தனிப்பட்ட தகவல்களுக்கு பொருந்தும் வகையில் விளம்பரங்களை நமக்கு அளிக்க முன்வருகிறது.

எங்கெங்கெல்லாம் நம்முடைய தகவல்கள் திரட்டப்படுகிறது
கூகுள் சேவையை நாம் பயன்படுத்தும்போது கொடுக்கும் தகவல்கள் மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், அதில் உள்ள ஹார்ட்வேர், மாடல், ஆபரேட்டிங் சிஸ்டம், மொபைல் நெட்வொர்க், போன் நம்பர் ஆகியவற்றையும் கூகுள் நம்முடைய தகவல்களை சேகரிக்கின்றது.
அதுமட்டுமின்றி நாம் கூகுள் சேவையை பயன்படுத்தும்போது நாம் பார்க்கும் தகவல்கள், இடம் குறித்த தகவல், தனிப்பட்ட பயன்பாட்டு எண்கள், உள்ளூர் சேமிப்பு, குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் மூலமும் தகவல்கள் திரட்டப்படுகின்றன

நம் தகவல்களை கூகுள் எப்படி பயன்படுத்துகிறது?
பல்வேறு கூகுள் சேவைகளிலிருந்து தகவல் சேகரிக்க முக்கிய காரணம் என்னவெனில் தங்களுடைய சேவையை பராமரிக்க, பாதுகாக்க மற்றும் மேம்படுத்த மற்றும் புதியவற்றை உருவாக்க பயன்படுத்துகிறது. அதுமட்டுமின்றி கூகுள் பயனர்களான நமக்கு உங்களுக்கு மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகளையும் விளம்பரங்களையும் வழங்க இந்த தகவல்கள் பயன்படுத்தப்படுகிறது
மேலும் நமக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதில் இருந்து நாம் விடுபடவும் இந்த தகவல்களை கூகுள் பயன்படுத்துகிறது. மேலும் இந்நிறுவனம், மாற்றங்கள் அல்லது மேம்படுத்தல்கள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் சேவைகள் குறித்து தெரிவிக்க பயனர்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி கம்ப்யூட்டர்களில் உள்ள குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள், பிக்சல் குறிச்சொற்கள் போன்றவை, பயனர் அனுபவத்தையும் சேவைகளின் ஒட்டுமொத்த தரத்தையும் மேம்படுத்தவும் இந்த தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றான.
மேலும், அவர்கள் தனிப்பட்ட முறையில் பொருத்தமான தயாரிப்பு வழங்க உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, தங்கள் தானியங்கி அமைப்புகள் மூலம் கூகுள் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தனிப்பட்ட தகவலை செயல்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications