வாட்ஸ்அப்-ஐ டெலீட் செய்யாமல் மாயமாவது எப்படி?

எனினும் இவ்வாறு செய்ய பெரும்பாலான செயலிகள் உங்களது ஸ்மார்ட்போனினை ரூட் செய்யக் கோரும்.

|

ஃபேஸ்புக், ட்விட்டர் அல்லது ஸ்னாப்சாட் செயலிகளில் இருந்து லாக்-அவுட் பட்டனை தட்டினால் மிக எளிமையாக மாயமாகிவிடலாம். ஆனால் வாட்ஸ்அப் செயலி ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் வரை அதன் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து மாயமாக முடியாது. மேலும் அடிக்கடி வாட்ஸ்அப்-ஐ டெலீட் செய்து குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் மாயமாகவும் முடியாது.

வாட்ஸ்அப்-ஐ டெலீட் செய்யாமல் மாயமாவது எப்படி?

ப்ளூ டிக் ரிசீப்ட்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தாலும், உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பியவர் நிச்சயம் நீங்கள் குறுந்தகவலை படித்தீர்களா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்கு முக்கிய காரணம் நீங்கள் வாட்ஸ்அப்-ஐ திறந்ததும், உங்களின் கான்டாக்ட்களுக்கு நீங்கள் ஆன்லைனில் இருப்பது தெரிந்து விடும். தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் இருந்து மாயமாக அதிகாரப்பூர்வமாக ஒரு வழி இருக்கிறது, எனினும் இது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வேலை செய்யும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

இந்த தொகுப்பில் எவ்வித கூடுதல் செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல், இன்டர்நெட் இணைப்பை துண்டிக்காமல் அல்லது மொபைல் போனினை சைலன்ட் மோடில் வைக்காமல் வாட்ஸ்அப்-இல் இருந்து மாயமாகும் வழிமுறையை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வாட்ஸ்அப் செயலியில் இருந்து மாயமாகி உங்களின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஃபயர்வால் செயலிகளான மொபிவொல் (Mobiwol) அல்லது நோரூட் ஃபயர்வால் (NoRoot Firewall) உள்ளிட்டவற்றை இன்ஸ்டால் செய்யலாம். இவ்வகை செயலிக்கள் ஸ்மார்ட்போனில் உள்ள குறிப்பிட்ட செயலிகளுக்கு மட்டும் இணைய இணைப்பை துண்டிக்கும். இவ்வாறான செயலிகளை கொண்டு மின்னஞ்சல்களை பெற்றுக் கொண்டு வாட்ஸ்அப் செயலிக்கு இணைய இணைப்பை துண்டிக்க முடியும்.

 மூன்று வழிமுறைகள்

மூன்று வழிமுறைகள்

எனினும் இவ்வாறு செய்ய பெரும்பாலான செயலிகள் உங்களது ஸ்மார்ட்போனினை ரூட் செய்யக் கோரும். கவலை வேண்டாம், மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மொபிவொல் அல்லது நோ ரூட் ஃபயர்வால் போன்றவை ஸ்மார்ட்போன் ரூட் செய்யப்படாத நிலையிலும் வேலை செய்யும். இருந்தாலும் இதுபோன்ற சேவைகளுக்கு மூன்றாம் தரப்பு செயலிகளை நாங்கள் பரிந்துரை செய்ய மாட்டோம், இவை உங்களின் தகவல்களுக்கு பாதகமாய் அமையலாம்.


இனி சில செட்டிங்களை மட்டும் மாற்றியமைத்து, வாட்ஸ்அப் இருந்து மாயமாவது எப்படி என்பதை பார்ப்போம். இதற்கு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன. முதலில், ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் டோனை மட்டும் சைலன்ட்-இல் வைக்கலாம். இரண்டாவது, புதிய மெசேஜ்களுக்கான வாட்ஸஅப் ஐகான் அல்லது டாட் நோட்டிஃபிகேஷன்களை நோட்டிஃபிகேஷன் பாரில் இருந்து ஆஃப் செய்யலாம். மூன்றாவதாக வாட்ஸ்அப் செயலிக்கு நோட்டிஃபிகேஷன் லைட்-ஐ டிசேபிள் செய்யலாம். இறுதியாக வாட்ஸ்அப் ஷார்ட்கட் ஐகானை ஹோம் ஸ்கிரீனில் இருந்து நீக்கிவிடலாம்.

வாட்ஸ்அப் டியூன் டிசேபிள்:

வாட்ஸ்அப் டியூன் டிசேபிள்:

வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் அழைப்புகளுக்கு மட்டும் நோ ரிங்டோன் (No Ringtone) ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இயல்பாக நீங்கள் ஏதேனும் ரிங்டோனை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். சைலன்ட் மோடில் வைக்க உங்களின் ஸ்மார்ட்போனை சைலன்ட் மோடில் வைப்பதை தவிர வேறு ஆப்ஷன்களே கிடையாது.

இங்கு மிக எளிமையான வழிமுறையாக இருப்பது சொந்தமாக சைலன்ட் ரிங்டோனை செட் செய்வது மட்டும் தான். மொபைலில் உள்ள ரெக்கார்டர் செயலியில் இரண்டு நொடிகளுக்கு அமைதியை பதிவு செய்து அதனை ரிங்டோனாக வைக்கலாம். வாட்ஸ்அப் -- செட்டிங்ஸ் -- நோட்டிஃபிகேஷன்ஸ் ஆப்ஷனில் நீங்கள் பதிவு செய்த சத்தமில்லாத ஆடியோவினை நோட்டிஃபிகேஷன் டோன் மற்றும் அழைப்புக்கான ரிங்டோனாக வைக்க முடியும்.

டிசேபிள் நோட்டிஃபிகேஷன்:

டிசேபிள் நோட்டிஃபிகேஷன்:

வாட்ஸ்அப் ஐகான் அல்லது டாட்களின் வழியே வரும் நோட்டிஃபிகேஷன்களை டிசேபிள் செயய்லாம். இதற்கு மொபைல் போன் செட்டிங்ஸ் ஆப்ஸ் -- பட்டியலில் உள்ள செயலிகளை திறக்கவும் -- வாட்ஸ்அப்-ஐ தேர்வு செய்ய வேண்டும் -- நோட்டிஃபிகேஷனை க்ளிக் செய்து வாட்ஸ்அப் செயலிக்கான அனைத்து நோட்டிஃபிகேஷன்களை டிசேபிள் செய்ய வேண்டும்.

வைப்ரேஷன் மற்றும் பாப்-அப்களையும் டிசேபிள் செய்ய வேண்டும். இனி நீங்கள் தேவைக்காக வாட்ஸ்அப் செயலியை திறக்கும் வரை உங்களுக்கு எவ்வித மெசேஜ்களுக்கான நோட்டிஃபிகேஷன்களும் வராது.

நோட்டிஃபிகேஷன் லைட்:

நோட்டிஃபிகேஷன் லைட்:

இனி நோட்டிஃபிகேஷன் லைட்-ஐ டிசேபிள் செய்ய வேண்டும். இதற்கு வாட்ஸ்அப் -- செட்டிங்ஸ் -- நோட்டிஃபிகேஷன்ஸ் -- லைட் ஆப்ஷனில் None ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இதன்பின் வாட்ஸ்அப் ஷார்ட்கட் ஐகானை மொபைல் ஹோம் ஸ்கிரீனில் இருந்து எடுத்து விட வேண்டும். இவ்வாறு செய்ததும், உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்கள் தொடர்ந்து வரும் ஆனால், அவை உங்களுக்கு தெரியாது. இனி உங்களுக்கு வாட்ஸ்அப் டோன் அல்லது நோட்டிஃபிகேஷன்களின் தொல்லை இருக்காது. உங்களுக்கு ஏதேனும் மெசேஜ் வந்திருப்பதை தெரிந்து கொள்ள, நீங்களாகவே செயலியை திறந்து பார்த்தால் தான் உண்டு.

வாட்ஸ்அப் உங்களின் மொபைல் டேட்டா பயன்படுத்துவதை நிறுத்த போனின் செட்டிங்ஸ் -- ஆப்ஸ் -- செயலிகளை திறந்து -- வாட்ஸ்அப்-ஐ க்ளிக் செய்து, ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி பேக்கிரவுன்டு டேட்டாவை டிசேபிள் செய்து, இறுதியில் வாட்ஸ்அப் செயலிக்கான அனைத்து அனுமதிகளையும் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு செய்துவிட்டால் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்யாமலேயே அழித்து விடும். எனினும் உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்கள் தொடர்ந்து வரும், உங்களுக்கு வாட்ஸ்அப் மெசஜை பார்க்க வேண்டும் என்றால், வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்தாலே போதும்.


ப்ரோ டிப்: உங்களுக்கு குறுந்தகவல் அனுப்புவோர், எப்போதும் டபுள் டிக் பெறக்கூடாது எனில், மொபைல் போன் செட்டிங்களில் ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) ஆப்ஷனை செயல்படுத்தியதும் வாட்ஸ்அப்-ஐ திறக்காமல் இருந்தாலே போதும்.

Best Mobiles in India

English summary
How to go 'invisible' on WhatsApp without deleting app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X