Home
How to

சாம்சங் போனுடன் இலவச ஜியோ சிம் பெறுவது எப்படி?

By Meganathan

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அன்லிமிட்டட் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை முதல் 90 நாட்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் இந்தச் சேவையை இலவசமாக பெற்றிருக்கின்றனர். ரிலையன்ஸ் ஜியோ சலுகையை ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகளைத் தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

போன்

போன்

முதலில் இந்தச் சலுகையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை அறிந்து கொள்ளுங்கள். சாம்சங் கேலக்ஸி எஸ்7, எஸ்7 எட்ஜ், எஸ்6, எஸ்6 எட்ஜ், எஸ்6 எட்ஜ் பிளஸ், நோட் 5, நோட் 5 டூயல் சிம், நோட் 4, ஏ7 2016, ஏ7 2015, ஏ8, ஏ5 2016 மற்றும் ஏ5 2015.

ஆப்

ஆப்

அடுத்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மை ஜியோ (My Jio) ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும். டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

மை ஜியோ ஆப் இன்ஸ்டால் செய்து உங்களது இலவச சிம் கார்டு பெறக் குறியீடு ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின் உங்களது அடையாள சான்றுகளுடன் இரண்டு புகைப்படங்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் எடுத்துச் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இலவச சிம்

இலவச சிம்

பின் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இலவச டேட்டா, மற்றும் அழைப்புகளை வழங்கும் இலவச சிம் கார்டு பெற்று கொள்ள முடியும். பின் ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டினை பயன்படுத்தலாம்.

உறுதி

உறுதி

உங்களது நம்பர் ஆக்டிவேட் செய்யப்பட்டதை உறுதி செய்யும் குறுந்தகவல் உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். இதற்கு விண்ணப்பத்தில் சரியான மொபைல் நம்பரை வழங்குதல் அவசியம் ஆகும்.

சிக்னல்

சிக்னல்

சிம் கார்டு நம்பர் மொபைல் வெரிஃபிகேஷன் செய்யத் தயாரானதும், உங்களது மொபைல் திரையில் சிக்னல் இருப்பதைப் பார்க்க முடியும். மேலும் உங்களது கருவியில் 4ஜி/எல்டிஇ ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்க வேண்டும்.

ஆக்டிவேட்

ஆக்டிவேட்

பின் உங்களது ஜியோ சிம் கார்டு மூலம் 1977 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்து சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஒரு வேலை இதர காரணங்களால் உங்களால் அழைப்பை மேற்கொள்ள இயலாத பட்சத்தில் வேறு சிம் கார்டு பயன்படுத்தி 1800-890-1977 என்ற எண்ணிற்கு அழைப்பு செய்ய வேண்டும்.

சான்று

சான்று

அழைப்பு விடுக்கும் போது உங்களது மொழியைத் தேர்வு செய்து நீங்கள் வழங்கிய அடையாள சான்றில் இருக்கும் நான்கு இலக்கு எண் கூற வேண்டும். இவ்வாறு கூறும் போது உங்களது ஜியோ சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

சிம் கார்டு ஆக்டிவேட் ஆனதும் ஜியோ பிளே, ஜியோ ஆன் டிமான்டு, ஜியோ மனி போன்ற ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டும்.

சலுகை

சலுகை

அடுத்து மை ஜியோ ஆப் டவுன்லோடு செய்து சலுகையைப் பெற செய்யும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது மொபைலில் 4ஜி/எல்டிஇ ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஜியோ அன்-லிமிட்டட் சலுகையை உறுதி செய்யும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

Best Mobiles in India

English summary
How to get Reliance Jio SIM card for Samsung phone with unlimited data Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X