ஒன் ப்ளஸ் 3 மாடலின் பிரச்சனையை தீர்க்கும் ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 சாப்ட்வேர்

By Lekhaka
|

இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போன்.

ஒன் ப்ளஸ் 3 மாடலின் பிரச்சனையை தீர்க்கும் ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 சாப்ட்வே

இருப்பினும் இந்த மாடலில் அதிக வெப்பமாவது, நோட்டிபிகேஷன் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை இதன் பயனாளிகள் சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது.

ஆப்பிள் ஐபோனில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை கையாள்வது எப்படி?

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண விரும்பிய ஒன்ப்ளஸ் நிறுவனம், சமீபத்தில் ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 (OxyenOS 3.2.3) என்ற வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த ஒரே ஒரு சாப்ட்வேர் இந்த மாடலின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட நிலையில் இந்த வெர்ஷனை எப்படி அப்டேட் செய்வது என்பது குறித்த பயனுள்ள தகவலை தற்போது பார்ப்போம்.

ஒன்ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போனில் முதலில் என்ன செய்ய வேண்டும்?

ஒன்ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போனில் முதலில் என்ன செய்ய வேண்டும்?

ஒன் ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் முதலில் போனை சுவிட்ச் ஆன் செய்துவிட்டு பின்னர் மெனு சென்று அதில் உள்ள செட்டிங்ஸ் பகுதியை ஓப்பன் செய்ய வேண்டும்

டிவைஸ் ஆப்சன் செல்ல வேண்டும்

டிவைஸ் ஆப்சன் செல்ல வேண்டும்

மெனுவில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றவுடன் பின்னர் அதில் உள்ள ஆப்சன்களில் சிஸ்டம் ஆப்சனில் உள்ள டிவைஸ் ஆப்சன் வரும் வரை ஸ்குரோல் செய்ய வேண்டும். பொதுவாக இந்த ஆப்சன் கடைசியில்தான் இருக்கும் என்பது இந்த மாடலை ரெகுலராக பயன்படுத்தி வருபவர்களுக்கு தெரியும்

டவுன்லோடு அப்டேட் செய்ய வேண்டும்

டவுன்லோடு அப்டேட் செய்ய வேண்டும்

மூன்றாவதாக ஒன் ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போன் பயனாளிகள் செய்ய வேண்டியது டவுண்லோடு அப்டேட்ஸ் ஆப்சனை தேர்வு செய்து அதை ஓகே செய்ய வேண்டும். நீங்கள் ஓகே செய்தவுடன் ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 சாப்ட்வேர் அப்டேட் செய்ய அனுமதிக்கப்படும்

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்

சாப்ட்வேர் அப்டேட் நிறைவு பெற ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற குறிப்பு உங்களுக்கு தோன்றும். நீங்கள் ரீஸ்டார்ட் செய்ய ஓகே அழுத்தியவுடன் போன் ரீஸ்டார்ட் ஆகும். இதன் பின்னர் ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 சாப்ட்வேர் அப்டேட் ஆகியிருக்கும்.

ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 குறித்து இதையும் தெரிந்து கொள்வோம்.

ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 குறித்து இதையும் தெரிந்து கொள்வோம்.

ஆக்சிஜன் ஓஎஸ் 3.2.3 சாப்ட்வேர் 40 MB அளவு திறனுடையது. இந்த ஒரே சாப்ட்வேர் மூலம் இந்த மாடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்வு செய்யும் வகையில் உள்ளதால் இதன் பயனாளிகள் தவறாது அப்டேட் செய்து இனிமையான அனுபவங்களை உணருங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Follow these 4 simple steps to get OxygenOS 3.2.6 update on your OnePlus 3 phone manually and fix all the bugs.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X