Home
How to

கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை உடனே பெறுவது எப்படி?

அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது.

By Meganathan S

கூகுள் நிறுவனத்தின் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும்.

கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெற டிப்ஸ்.!


அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. இது இயந்திர குரலினை மனித குரல் போன்று மிகவும் நுட்பமாக ஒலிக்க செய்யும் திறன் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக ஜான் லெஜன்ட் குரல் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் மற்றவர்களின் குரல்களும் சேர்க்கப்பட இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைலில் உள்ள கூகுள் அசிஸ்டண்ட் சேவையிலும் இயங்கும்.

கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெற டிப்ஸ்.!


கூகுள் அசிஸ்டண்ட் குரல் தேர்வு

வழக்கமான கூகுள் குரலினை கேட்டு சலித்து விட்டதா? இனி இவ்வாறு தோன்றும் போதெல்லாம் கூகுள் அசிஸ்டண்ட் குரலினை மாற்ற முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் அசிஸ்டண்ட் செயலியை ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தின் ஓபன் செய்ய வேண்டும். இனி திரையின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து செட்டிங்ஸ் -- ப்ரிஃபரன்சஸ் -- அசிஸ்டண்ட் வாய்ஸ் ( Settings > Preferences > Assistant Voice) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இங்கு காணப்படும் எட்டு குரல்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இதேபோன்று ஒவ்வொரு குரலையும் பிரீவியூ செய்யவும் முடியும். பிரீவியூ செய்ய குரலின் அருகில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெற டிப்ஸ்.!


இந்த ஆப்ஷனில் நீங்கள் தேர்வு செய்யும் குரலில் கூகுள் அசிஸ்டண்ட் உங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும். ஒவ்வொரு பயனரும் வெவ்வேறு குரல்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் வீட்டில் உள்ள ஸ்பீக்கரில் வெவ்வேறு குரல்களை ஒலிக்க செய்யலாம்.

புதிய குரல்கள் முதற்கட்டமாக ஐபோன் X, கேலக்ஸி எஸ்8 பிளஸ், பிக்சல் 2 XL உள்ளிட்ட சாதனங்களில் வேலை செய்கிறது. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் புதிய அப்டேட் இல்லாத பட்சத்தில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்து பின் முயற்சிக்கலாம்.

கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெற டிப்ஸ்.!
How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

இத்துடன் ஜானி லெஜன்ட் குரல் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதற்கான அப்டேட் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது லேங்குவேஜ் செட்டிங்ஸ்-க்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தும் சில சாதனங்களில் சில குரல்கள் வழங்கப்படாமல் இருக்கலாம்.
Best Mobiles in India

English summary
How to get all of Google Assistant’s new voices right now; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X