Home
How to

புதிய ஜியோ சிம், ஹேப்பி நியூ இயர் ஆபருடன் பெறுவது எப்படி.?

31 மார்ச், 2017-ஆம் ஆண்டு வரை தரவு பயன்பாடு, குரல் அழைப்புகள், ஆப்ஸ் சேவைகள் உட்பட ஜியோவின் புதிய ஹேப்பி நியூ இயர் ஆபரை புதிய சிம் கார்ட் மூலம் பெறுவது எப்படி.?

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ வழங்கிய வெல்கம் ஆஃபர் ஆனது ஹேப்பி நியூ இயர் ஆபர் என்ற பெயரின் கீழ் மார்ச் 31, 2017 வரை நீட்டிக்கப்படுவதை அறிவித்த உடனேயே மக்கள் மனதிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் பிற ஆன்லைன் தளங்களிலும் எழுந்த ஒரு பொதுவான கேள்வி - இந்த புதிய வாய்ப்பை பெறுவது எப்படி.?

ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி அவரது அறிவிப்பின் போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த நீட்டிப்பு சலுகையை ஏற்கனவே உள்ள பயனர்கள் மற்றும் புதிய பயனர்கள் ஆகிய இருவருக்கும் கிடைக்கப்பெறும் என்று தெளிவாக குறிப்பிட்டுருந்தார். உடன் டிசம்பர் 4-ல் இருந்த்து ஒரு புதிய ரிலையன்ஸ் ஜியோ சிம் வேண்டுவோர் அனைவருக்குமே புதிய சிம் கார்டு இணைந்து ஹேப்பி நியூ இயர் ஆபரும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுருந்தார்.

எனினும், தற்போதைய பயனர்களுக்கு, வெல்கம் ஆஃபர் டிசம்பர் 31 வரை தொடரும் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆபர் ஆனது அதே பழைய சிம் அட்டையில் ஜனவரி 2017 முதல் துவங்கும். மற்றும் பயனர்கள் மேலும் ஒரு புதிய சிம் வாங்க விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி, அது ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு புதிய ஜியோ சிம் வாங்கி புதிய ஹேப்பி நியூ இயர் ஆபரை பெறுவது எப்படி.?

மைஜியோ ஆப்

மைஜியோ ஆப்

ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் படி, புதிய நீட்டிப்பு சலுகையாக ஹேப்பி நியூ இயர் சலுகையை அனுபவிக்க விரும்பும் பயனர் அவர் ஸ்மார்ட்போன் 4ஜி செயல்படுத்தப்பட்டது என்பதை முதலில் உறுதி செய்துவிட்டு, பின்னர் மைஜியோ ஆப்தனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

"கெட் சிம்" விருப்பம்

மைஜியோ ஆப்தனை வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்த பிறகு, பயனர் இப்போது வெறுமனே பயன்பாட்டை அவர்களது 4ஜி ஸ்மார்ட்போனில் துவக்கவும், பின்னர் "கெட் சிம்" விருப்பத்தை கிளிக் செய்யவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்)

ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்)

கிளிக் செய்யவும் ஒரு பக்கம் தோன்றும், அதில் பயனர் குறிப்பிட்ட இடத்தில் பெயர், தொடர்பு எண் உட்பட தனிப்பட்ட விவரங்களை நுழைக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு ஒரு ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) அனுப்பி வைக்கப்படும். அதை குறிப்பிட்ட இடத்தில நுழைத்து பதிவு செய்ய வேண்டும்.

பார்கோடு உருவாக்கப்படும்

பார்கோடு உருவாக்கப்படும்

ஒடிபி ன் நுழைக்கப்பட்டு கிளிக் செய்த உடனேயே உங்களுக்கான பார்கோடு உருவாக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தல் கடைசி நாள் மற்றும் தேவையான ஆவணங்கள் என்ன என்ற விவரங்கள் உங்களுக்கு அளிக்கப்படும். ஆதார் அட்டை ஆதாரம் ஆனது நீங்கள் புதிய ஜியோ சிம் பெறும் செயல்முறை வேகமாக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். அடுத்ததாக, பயனர் அவருக்கான சிம் கார்டு பெற அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் கடையை கண்டுபிடிக்க வேண்டும்.

டெலிவெரிஃபிகேஷன்

டெலிவெரிஃபிகேஷன்

அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோருக்கு பிரதியெடுக்கப்பட்ட ஆவணங்கள் உடன் சென்று சமர்ப்பிக்கவும், உடன் அசல் சான்றுகளுடன் சென்றால் வேகமாக செயல்முறை நிகழும் மற்றும் புதிய ஜியோ சிம் விரைவில் பெறலாம். பிறகு பயனர் வெறுமனே உங்களது ஜியோ எண்ணை செயல்படுத்த 1977 என்ற எண்ணிற்கு டயல் செய்வதன் மூலம் டெலிவெரிஃபிகேஷன் நிகழ்த்த முடியும். அது முடிந்த பின்னர் ஜியோவின் சலுகைகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அம்பானியின் இந்த 4 அறிவிப்பும் டிஜிட்டல் இந்தியாவின் கதவை திறக்கும்.!

Best Mobiles in India

English summary
New Reliance Jio SIM Cards Come With Happy New Year Offer: Here's How to Get it. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X