இணையதள வேகத்தை அறியும் அம்சம்: ஆண்ட்ராய்டு ஸ்டேட்டஸ் பாரில் கொண்டுவரும் முறைகள்

|

ஆண்ட்ராய்டை பொறுத்த வரை, தனது ஓஎஸ்-சை விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கும் விஷயத்தில் ஏராளமான சுதந்திரத்தை அளித்துள்ளது. இதனால் பெரும்பாலான மொபைல்போன் தயாரிப்பாளர்கள், சொந்த தனிப்பயன் யூஐ-யை ஆண்ட்ராய்டின் மேல் செலுத்தி, தங்களின் பங்களிப்பை காட்ட விரும்புகிறார்கள்.

இணையதள வேகத்தை அறியும் அம்சம்: ஆண்ட்ராய்டு ஸ்டேட்டஸ் பாரில் கொண்டுவரு

ஆனால் மற்றொரு தரப்பினர், ஸ்டாக் யூஐ முறையை விரும்புகிறார்கள். இதனால் சில நிறுவனங்கள் ஸ்டேட்டஸ் பாரில் இணையதள பயன்பாட்டு அளவீடு (இன்டர்நெட் ரீடர்) வைக்கிறார்கள், சிலர் அப்படி செய்வதில்லை.

இந்த இணையதள பயன்பாட்டு அளவீடு ஸ்டேட்டஸ் பாரில் இருந்தால், எந்தொரு அப்ளிகேஷனை பயன்படுத்தும் போதும் அதற்கான டேட்டா செலவீனத்தை அளவை பயனர் அறிந்து கொள்ள முடியும். சில ஃபோன்களில் ஸ்டேட்டஸ் பாரில் இணையதள பயன்பாட்டு அளவீடு காணப்படுவதில்லை.

எனவே எந்தொரு ஆண்ட்ராய்டு ஃபோனிலும் இணையதள பயன்பாட்டு அளவீட்டை அமைக்கும் படிகளைக் குறித்து கீழே பட்டியலிட்டு உள்ளோம். இந்தச் செயல்முறையில், உங்கள் ஃபோனில் ஒற்றை அப்ளிகேஷனை நிறுவுவதும் உட்படுகிறது.

படி 1:

படி 1:

கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று, 'இன்டர்நெட் ஸ்பீடு மீட்டர்' () அப்ளிகேஷனை நிறுவவும். இந்த அப்ளிகேஷனுக்கு எந்தக் கட்டணமும் இல்லை, இலவசமாக கிடைக்கிறது.

படி 2: உங்கள் ஸ்டேட்டஸ் பாரின் நடுவே உள்ள பதிவேற்றம் / பதிவிறக்கம் மீட்டரில், நீங்கள் செய்த சாதாரண டேட்டா பயன்பாடு குறித்து இந்த அப்ளிகேஷன் காட்டுகிறது.

படி 3: இந்த அப்ளிகேஷனை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். உங்கள் ஃபோனில் எங்கு வேண்டுமானாலும் இதை வைத்து கொண்டு, டேட்டா பயன்பாட்டு அளவுகள், வேகம் அல்லது பரிமாற்றம் செய்யப்படும் அளவுகள் உள்ளிட்ட காரியங்களை மாற்றி அமைக்கலாம்.

படி 4: இந்த அப்ளிகேஷனை மாற்றியமைக்க, இதன் அமைப்புகளுக்கு சென்று, அங்குள்ள விட்ஜெட் நிலைகள், தோற்றம் மற்றும் அறிவிப்புகள், பூட்டப்பட்ட திரையை மறைத்தல் மற்றும் பலவற்றை கொண்ட மற்ற அம்சங்கள் ஆகியவற்றை இயக்கலாம்.

ஸ்டோரில் வேறு பல அப்ளிகேஷன்கள் இருந்தாலும், பாதுகாப்பான மற்றும் பயன்பாட்டிற்கு மிக எளிதான யூஐ கொண்ட சில அப்ளிகேஷன்களில் இது ஒன்றாகும்.

என்பேர்ஃப்

என்பேர்ஃப்

என்பேர்ஃப் என்று அழைக்கப்படும் மற்றொரு அப்ளிகேஷன் காணப்படுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இணைய இணைப்பின் வேகத்தை தவிர, மொபைல் இணைப்பின் தரம் எப்படியிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஸ்ட்ரீம்மிங், பிரவுஸிங், பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் ஆகியவற்றின் வேகத்தைக் குறித்த தகவல்களை நீங்கள் பெறலாம்.

விரைவில் வெளிவரும் அசத்தலான என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர்.!விரைவில் வெளிவரும் அசத்தலான என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர்.!

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
படி 1:

படி 1:

இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து, நிறுவ வேண்டும்.

படி 2: நிறுவிய பிறகு, அதை துவக்கவும். வேகத்தை அறியும் சோதனைக்கு தேவைப்படும் சில தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டியுள்ளதால், சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும்.

படி 3: முகப்பு பக்கத்தை நீங்கள் காணும் போது, உங்கள் இணையதள வேகத்தை அறியும் சோதனை துவக்க, "ஸ்டார்ட் டெஸ்ட்" என்பதைத் தட்டவும்.

படி 4: இந்தச் சோதனை முடிந்தவுடன், பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்தின் வேக அளவு உடன் அதற்கு ஆகும் நேரம் ஆகியவற்றை காட்டும்.

படி 5: இந்த அப்ளிகேஷனை அமைப்புகளுக்கு சென்று மாற்றியமைத்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Android gives a lot of independence when it comes to tweaking their OS.Since some phones don't come with internet reader on their Android status bar, we have compiled a list of steps to make it possible on any Android phones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X