பழைய ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி?

ஏற்கனவே பயன்படுத்திய பழைய ஸ்மர்ட்போன்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது எப்படி என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

By Meganathan
|

ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் அதிகபட்சம் 4 அல்லது 6 மாதம் தான் பெரும்பாலானோரும் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் புதுப்புது மாடல்களில் புதுப்புது அம்சங்களைக் கொண்டு வெளியாவதால் மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அதிலும் இவற்றை வாங்க எக்ஸசேன்ஜ் சலுகை மற்றும் இதர ஆன்லைன் சலுகைகளும் கிடைப்பதால் மொபைல் போன்களின் விற்பனை அதிகமாக இருக்கின்றது.

சில சமயங்களில் ஆன்லைனில் எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது பழைய கருவிகளுக்குக் குறைந்த விலை மட்டுமே வழங்கப்படுகின்றது. வெளியில் விற்பனை செய்தாலும் அதிக விலைக்குப் பழைய கருவிகளை விற்பனை செய்வது கதடினமான ஒன்றாகும்.

இங்கு ஆன்லைனில் உங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வது எப்படி என்பதைத் தான் தொகுத்திருக்கின்றோம்..

ஆன்லைன்

ஆன்லைன்

பயன்படுத்திய பழைய ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் விற்பனை செய்யப் பல்வேறு இணையத்தளங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் http://www.cashify.in/ தளம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மாடல்

மாடல்

முதலில் கேஷிஃபை தளத்திற்குச் சென்று நீங்கள் பயன்படுத்தி விற்பனை செய்ய இருக்கும் மொபைல் போன் மாடலினை பதிவு செய்யுங்கள்.

தரம்

தரம்

அடுத்துக் கருவி எந்த நகரத்தில் இருக்கின்றது மற்றும் அதன் தரம் குறித்த தகவல்களை ஒவ்வொன்றாகப் பதிவு செய்ய வேண்டும். கருவி எப்படி வேலை செய்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள இவற்றைப் பதிவு செய்வது அவசியம் ஆகும்.

அக்சஸரீகள்

அக்சஸரீகள்

அடுத்து கருவியுடன் வழங்கப்பட்ட அக்சஸரீகள், கருவியின் தோற்றம் மற்றும் எந்தளவு பழைய கருவி போன்ற தகவல்களை வழங்கினால் கருவிக்கான விலை திரையில் தோன்றும். உங்களுக்கு அத்தொகை போதுமானது என்றால் விற்கக் கோரும் பட்டனை கிளிக் செய்யலாம்.

உறுதி

உறுதி

கருவியை விற்பனை செய்யும் பட்டனை கிளிக் செய்ததும் உங்களது மொபைல் நம்பர் வழங்கி கருவியை ஒப்படைக்கக் கோரும் ஆப்ஷன்களைப் பின்பற்ற வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
How to get more money for used smartphones online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X