பென் டிரைவ்களில் கூடுதல் மெமரி பெறுவது எப்படி?

By Meganathan
|

யுஎஸ்பி காலகட்டம் அழியும் தருவாயில் உள்ளது என்றே கூறலாம் போலிருக்கு. இன்று பெரும்பாலானோரும் எக்ஸ்டர்னல் ஹார்டு டிஸ்க் மற்றும் இண்டர்நெட் கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த துவங்கி விட்டனர். இருந்தாலும் யுஎஸ்பி ஸ்டிக் வகைகள் பயன்படுத்த எளிமையாக இருக்கும்.

எங்குச் சென்றாலும் கைகளிலோ அல்லது பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் படியாக இருக்கும் பென் டிரைவ் அல்லது யுஎஸ்பி ஸ்டிக் பயன்படுத்துவோரும் இருக்கத் தான் செய்கின்றனர்.

மெமரி

மெமரி

பென் டிரைவ் கருவிகளின் மெமரி 4 ஜிபி'களில் துவங்குகின்றது. ஆனால் அனைத்துக் கருவிகளும் ஒரே அளவு பயன்பாடுகளையே வழங்குகின்றன. இங்கு உங்களது பென் டிரைவின் மெமரியை ஓரளவு கூடுதலாக நீட்டிப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஃபார்மேட்

ஃபார்மேட்

முதலில் பென் டிரைவில் இருக்கும் தரவுகளை பேக்கப் எடுத்து பென் டிரைவினை ஃபார்வேட் செய்ய வேண்டும். இதற்கு பென் டிரைவ் ஆப்ஷனை ரைட் கிளிக் செய்து விண்டோஸ் ஃபைல் எக்ஸ்ப்ளோரர் சென்று ஃபாரமேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

கவனம்

கவனம்

இவ்வாறு செய்யும் போது NTFS என்ற ஃபைல் சிஸ்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பின் குவிக் ஃபார்மேட் ஆப்ஷன் சென்று ஸ்டார்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அமைப்பு

அமைப்பு

பென் டிரைவ் ஃபார்மேட் செய்யப்பட்டதும், மீண்டும் பென் டிரைவினை ரைட் கிளிக் செய்து ஃபைல் எக்ஸ்ப்ளோரர் சென்று பிராப்பர்டீஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின் (Compress this drive to save disk space) கம்ப்ரெஸ் டிரைவ் டூ சேவ் டிஸ்க் ஸ்பேஸ் ஆப்ஷனை உறுதி செய்ய வேண்டும்.

கம்ப்ரெஸ்

கம்ப்ரெஸ்

முந்தைய ஆப்ஷனை உறுதி செய்ததும் உங்களது பென் டிரைவ் கம்ப்ரெஸ் செய்யப்பட்டு முன்பை விட அதிக மெமரியை சேமிக்கும் திறன் பெற்றிருக்கும்.

குறைவு

குறைவு

ஏற்கனவே கம்ப்ரெஸ் தொழில்முறை பயன்படுத்தும் zip ஃபைல் மற்றும் JPEG படங்களின் மெமரி குறையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விண்டோஸ்

விண்டோஸ்

இந்த வழிமுறையினை அனைத்து விண்டோஸ் ஃபோல்டர்களிலும் பயன்படுத்தலாம். ஆனால் முழுமையாக ஹார்டு டிரைவிற்கு இதனைப் பயன்படுத்துவது ஹார்டு டிரைவின் ஆயுளைக் குறைக்கும்.

Best Mobiles in India

English summary
How to Get Extra Space On Your USB Drives Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X