விண்டோஸ், மேக், குரோம் ஓஎஸ்களில் எமோஜி பிக்கர்களை வரவழைப்பது எப்படி?

விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ்களில் குரோம் பயன்படுத்தி எமோஜி பிக்கர்களை பயன்படுத்தும் வகையில் தற்போது புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

|

கடந்த சில வருடங்களாக எமோஜிக்களை டெக்ஸ்ட் மெசேஜ்களுடன் அனுப்பும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு மெசேஜில் ஒரே டெக்ஸ்டாக இருந்தால் அது சலிப்படையும் நிலையில் இந்த எமோஜிக்கள் அனுப்புபவருக்கும், பெறுபவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. மேலும் நம்முடைய நகைச்சுவை உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு காரணியாகவும் இந்த எமோஜிக்கள் இருந்தன. மேலும் டெக்ஸ்ட் டைப் அடிப்பதை விட எமோஜிக்களை அனுப்புவது மிக எளிது என்பதால் பலர் அதிகளவில் எமோஜிக்களை பயன்படுத்தி வந்தனர். ஆனாலும் விண்டோஸ் இயங்கு தளத்தில் எமோஜிக்களை அனுப்புவதில் சில குழப்பம் சிலருக்கு ஏற்படுவதுண்டு.

விண்டோஸ், மேக், குரோம் ஓஎஸ்களில் எமோஜி பிக்கர்களை வரவழைப்பது எப்படி?

ஆனால் இந்த குழப்பத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக நாம் கூகுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எமோஜிக்களை அனுப்புவது தற்போது மிக எளிதான ஒன்றாக கூகுள் மாற்றியுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் குரோமில் எமோஜிக்களை இணைத்துள்ளது. இதனால் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் இருந்தே எமோஜிக்களை அனுப்ப மிக எளிதாக உள்ளது. இந்த எளிதான முறையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

விண்டோஸ், மேக், குரோம் ஓஎஸ்களில் எமோஜி பிக்கர்களை வரவழைப்பது எப்படி?

விண்டோஸ், மேக், குரோம் ஓஎஸ்களில் குரோம் மூலம் எமோஜிக்களை பெறுவது எப்படி?

விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ்களில் குரோம் பயன்படுத்தி எமோஜி பிக்கர்களை பயன்படுத்தும் வகையில் தற்போது புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிக சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த வசதி குரோம் ஒஎஸ்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டது ஆனால் இதற்கு நீங்கள் குரோமின் டெவலப்பர் சேனல் வசதியை பெற்றிருக்க வேண்டும். அதாவது நீங்கள் குரோம் ஓஎஸ் பயன்படுத்துபவராக இருந்தாலும் குரோம் எமோஜி பிக்கரை விண்டோஸ், மேக், குரோம் ஓஎஸ்களில் பயன்படுத்துவது குறித்து தற்போது பார்ப்போம்

ஸ்டெப் 1: முதலில் டெவலப்பர் சேனலை சுவிட்ச் செய்ய வேண்டும். இதன்பின்னர் யூ.ஆர்.எல் டைப் செய்யும் இடத்தில் chrome://flags என்று டைப் செய்ய வேண்டும். அல்லது நீங்கள் நேரடியாக இந்த யூ.ஆர்.எல்.ஐ (chrome://flags/#enable-emoji-context-menu) காப்பி செய்து பேஸ்ட்டும் செய்யலாம். இவ்வாறு செய்தால் நீங்கள் குரோமை எனேபிள் செய்து விடலாம்.

ஸ்டெப் 2: நீங்கள் குரோம் ஃப்ளாகை எனேபிள் செய்த பின்னர் உங்களுக்கு ஒரு காண்டெக்ஷுவல் மெனு தோன்றும். இந்த மெனு புதுமையான வகையில் இமெயில் உள்பட பலவிதங்களில் டைப் செய்வதற்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரான்காயிஸ் பியாஃபோர்ட் என்பவர் கூறியுள்ளார். இந்த மெனுதான் உங்களுக்கு டெஸ்ட் நடுவே எமோஜிக்களை வரவழைக்க உதவும் மெனு ஆகும்.

மேற்கண்ட இரண்டு ஸ்டெப்களை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் டெக்ஸ்ட் டைப் செய்யும்போது எமோஜிக்களையும் டைப் செய்ய முடியும். இந்த குரோம் ஓஎஸ் எமோஜி பிக்கர்ஸ் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் கீபோர்டை தட்டினாலே தோன்றும். ஸ்மார்ட்போனில் ஜிபோர்டு போன்றதே இந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த வசதியை பெற தற்போதைக்கு கீபோர்டு ஷார்ட்கட் கீ இல்லாதது ஒரு குறையாக உள்ளது.

விண்டோஸ், மேக், குரோம் ஓஎஸ்களில் எமோஜி பிக்கர்களை வரவழைப்பது எப்படி?

ஆனாலும் விண்டோஸ், மேக் மற்றும் குரோம் ஒஎஸ்களில் இந்த எமோஜி பிக்கர்களை மிக எளிதில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த காண்டெக்ஷுவல் மெனு உள்ளது. ஆனாலும் ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். இந்த குரோம் எமோஜி பிக்கர் என்பது கூகுள் நிறுவனத்தின் சோதனை வடிவமாகவே உள்ளது. இதில் இன்னும் ஒருசில மாற்றங்கள் வரலாம் அல்லது புதிய அப்டேட் வரலாம். அதனால் இதனுடைய ஸ்டெபில் வெர்ஷன் வரும் வரை இந்த எமோஜி பிக்கரை கவனமாக கையாளவும்.
Best Mobiles in India

English summary
How to get Chrome’s inbuilt emoji picker on Windows, Mac and Chrome OS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X