சிம்பிள் டிப்ஸ்: எந்தவொரு நம்பரின் CALL HISTORY-ஐயும் பார்ப்பது எப்படி.?
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெறுகிறது, அதன்படி நீங்கள் டெலிட் செய்த call history-கூட மிக எளிமையாக பார்க்க முடியும்
இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெறுகிறது, அதன்படி நீங்கள் டெலிட் செய்த call history-கூட மிக எளிமையாக பார்க்க முடியும், அதற்கு தகுந்த செயலியை பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட வழிமுறைகள் மூலம் உங்களது call history-அனைத்தையும் பார்க்க முடியும். ஒருவரின் கால் அழைப்புகள் பற்றிய தகவல்கள், உதரணமாக தேதி, நேரம், அதற்கான கட்டணங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் மிக எளிமையாக குறிப்பிட்ட செயலியைக் கொண்டு பார்க்க முடியும்.
நீங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப், பேஸ்புக், செயலியைப் போன்று கண்டிப்பாக இ-மெயில் சேவையைப் பயன்படுத்த வேண்டும், அவற்றின் மூலம் தான் உங்களின் call history-ஜ பார்க்க முடியும். மேலும் இவற்றின் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக mubble எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் மிக எளிமையாக உங்கள் call history-ஐ தெரிந்து கொள்ள முடியும்.

வழிமுறை-2:
அடுத்து நீங்கள் இந்த mubble செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு உங்கள் மொழியை தேர்வுசெய்ய வேண்டும், அதன்பின்பு get started- கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
மேலும் அந்த செயலியில் உங்கள் மொபைல்எண், இ-மெயில், போன்ற தகவல்கள் கொடுக்கவேண்டும். அதன்பின்பு give permission கிளிக் செய்து, செட்டிங்ஸ் பகுதியில் உள்ள mubble balance checker-ஆன் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:
அதன்பின்பு நீங்கள் இந்த அரடிடிடந செயலியை எளிமையாக திறக்க முடியும், அவற்றில் நீங்கள் பயன்படுத்தும் சிம் தகவல்களை பெறமுடியும். மேலும் நீங்கள் விரும்பும் சிம் கார்டினை தேர்வுசெய்த பின்பு bill-எனும் விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.


வழிமுறை-5:
அடுத்து உங்களுக்கு விருப்பமான தேதியை தேர்வு செய்ய வேண்டும், உதரணமாக கடைசி 30 நாட்கள் call history-தேர்வுசெய்த பின்பு get bill by email-என்பதை கிளிக் செய்யவேண்டும்.

வழிமுறை-6:
அதன்பின்பு உங்கள் இ-மெயில் முகவரிக்கு பிடிஎஃப் அனுப்பிவைக்கப்படும் அவற்றில் உங்களதுcall history-ஐ தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்வது எப்படி?
வாட்ஸ்ஆப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, மேலும் இப்போது வாட்ஸ்ஆப்-ல் வரும் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் லாக் செய்ய முடியும். வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் செயலிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி பொறுத்தவரை அடுத்த மாதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்தியாவின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது. மேலும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்யும் வழிமுறையைப் பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் பகுதிக்கு சென்று வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் செயலியை இன்ஸ்டால் செய்தபின்பு, அவற்றுள் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
அதன்பின்பு உங்களுக்கு தகுந்த கடவுசொல்லை தேர்வுசெய்து அவற்றுள் பதிவிட வேண்டும்.

வழிமுறை-4:
மேலும் அந்த செயலியில் இடம்பெற்றுள்ள லாக் வாட்ஸ்ஆப் சாட் எனும் பகுதியை கிளிக் செய்தால், உங்கள் வாட்ஸ்ஆப்-ஐ திறக்க முடியும்.

வழிமுறை-5:
அடுத்து நீங்கள் விரும்பிய வாட்ஸ்ஆப் contacts மற்றும் group-க்கு மிக எளிமையாக மெசேஜ் லாக் அமைக்க முடியும்.

2018: வியக்கவைக்கும் டாப் 5 டெக்னாலஜி.!
இப்போது வரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கின்றன. மேலும் மக்களின் வேலையை வெகுவாக குறைக்கும் தன்மைக் கொண்ட சாதனங்களின் விலையைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கிறது, ஆனாலும் இந்த வருட துவகத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பியுபி பாக்கெட் ஸ்கேனர், பைலட் பிக்ஷன் எரேசபிள் பென்,பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர், வெர்டிக்கல் மவுஸ் போன்ற சாதனங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைலட் பிக்ஷன் எரேசபிள் பென் பொறுத்தவரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த பைலட் பிக்ஷன் எரேசபிள் பென். மேலும் இந்த வருடம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியுபி பாக்கெட் ஸ்கேனர்:
டாக்குமென்ட், சான்றிதழ் போன்றவற்றை ஸ்கேன் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களின் பெரிய ஸ்கேனர் மாடலை உபயோகம் செய்கிறோம், ஆனால் இந்த பியுபி பாக்கெட் ஸ்கேனர் பொறுத்தவரை வெறும் 5.3-இன்ச் அளவைக் கொண்டுள்ளது, இதனை பாக்கெட்டில் வைத்து எங்கும் கொண்டு செல்ல முடியும். இந்த சாதனத்தைப் பொறுத்தவரை ஒரு கிளிக் செய்தால் டாக்குமென்ட், சான்றிதழ் போன்ற அனைத்தையும் மிக எளிமையாக ஸ்கேன் செய்ய முடியும். மேலும் இவற்றில் வைஃபை ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இவற்றில் ஸ்கேன் செய்த பிறகு மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் பரிமாற்றம் செய்ய முடியும். இவற்றின் விலை மதிப்பு169 டாலர்கள், இந்திய விலை மதிப்பில் ரூ.10,800-ஆக உள்ளது.

பைலட் பிக்ஷன் எரேசபிள் பென்:
பைலட் பிக்ஷன் எரேசபிள் பென் பொறுத்தவரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த பைலட் பிக்ஷன் எரேசபிள் பென். இந்த சாதனம் பொறுத்தவரை புத்தகத்தில் பிழை திருத்தி எழுத உதவுகிறது. இந்த சாதனத்தின் பின்புறம் 'மை" அழிக்ககூடிய டிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேக்கேஜ்-ல் 7 பேனாக்கள் இடம்பெற்றுள்ளது, இவற்றின் விலை மதிப்பு 10டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில் ரூ.640-ஆக உள்ளது.

பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர்:
பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர் பொறுத்தவரை நீங்கள் மொபைல் சாதனங்களில் எடுக்கக் கூடிய புகைப்படங்களை 0.5 வினாடிகளில் பிரிண்ட் எடுக்க முடியும். மற்ற பிரிண்ட்டர் சாதனங்களில் 'மை" தேவைப்படும், ஆனால் இந்த சாதனத்தில் ஜிங்க் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர். இவற்றின் விலை மதிப்பு ரூ.10,000-ஆக உள்ளது.

வெர்டிக்கல் மவுஸ்:
வெர்டிக்கல் மவுஸ் தொழில்நுட்பம் பொறுத்தவரை இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது, இருந்தபோதிலும் அதிகமாய் இந்த சாதனத்தை மக்கள் பயன்படுத்துவது கிடையாது. சாதரன மவுஸ்-ஐ அதிக நேரம் பயன்படுத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலைமை உள்ளது, ஆனால் வெர்டிக்கல் மவுஸ்-ஐ பயன்படுத்தினால் எவ்வித பாதிப்பும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் இந்த வெர்டிக்கல் மவுஸ்-ஐ தயார் செய்து விற்பனை செய்கின்றன.

சாம்சங் பேட்டரி:
சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பேட்டரியை தயாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த கூடிய விரைவில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் பேட்டரியைப் பொறுத்தவரை 5மடங்கு பாஸ்ட் சார்ஜ் தன்மையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் வந்தால் வெறும் 10நிமிடங்களில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








