ஓரியோவின் பிஐபி முறை: பிற ஆன்ட்ராய்டு போன்களில் கொண்டு வருவது எப்படி?

இப்போது உள்ள பெரும்பாலான ஆன்ட்ராய்டு சாதனங்கள், நவீன பதிப்பான ஓரியோவில் இயங்குவது இல்லை.

|

நாம் பயன்படுத்தும் சாதனத்தில் உள்ள விண்டோவின் சரியான அளவிற்கு ஏற்ப வீடியோவை கொண்ட வர, பயனருக்கு பிக்சர் இன் பிக்சர் (பிஐபி) முறை உதவுகிறது.

ஓரியோவின் பிஐபி முறை: பிற ஆன்ட்ராய்டு போன்களில்: எப்படி?

இப்போது உள்ள பெரும்பாலான ஆன்ட்ராய்டு சாதனங்கள், நவீன பதிப்பான ஓரியோவில் இயங்குவது இல்லை. ஆனால் இந்த ஆன்ட்ராய்டு புதுப்பிப்பு அளிப்பது போன்ற சிறப்புத் தன்மைக் கொண்ட அம்சங்களை, தங்கள் கையில் இருக்கும் சாதனங்களிலும் வைத்து கொள்ள பெரும்பாலான ஆன்ட்ராய்டு பயனர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் உங்கள் கையில் இருக்கும் சாதனம் ஓரியோவை பயன்படுத்தி இயங்கவில்லை என்றாலும், அதில் இயங்கக் கூடிய பல்வேறு அம்சங்களில் பிக்சர் இன் பிக்சர் முறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் பயன்படுத்தும் சாதனத்தில் உள்ள விண்டோவின் சரியான அளவிற்கு ஏற்ப வீடியோவை கொண்ட வர, பயனருக்கு பிக்சர் இன் பிக்சர் (பிஐபி) முறை உதவுகிறது. பன்முக பணிகளை ஒருமிக்க, எளிதான முறையில் செய்ய, இந்த அம்சம் உதவுகிறது. அதே நேரத்தில், இந்த அம்சத்தை பயன்படுத்த ஓரியோவின் புதுப்பிப்பு உங்களுக்கு தேவைப்படுவது இல்லை. அந்த வகையில், பிக்சர் இன் பிக்சர் முறையை பயன்படுத்த உதவும் ஒரு சில அப்ளிகேஷன்களைக் குறித்து இங்கு காண்போம்.

நியூபைப்

நியூபைப்

ஒரு மிதக்கும் விண்டோ (ஃபிளோட்டிங் விண்டோ) யூடியூப் வீடியோக்களைக் காணும் வகையில், இது ஒரு எடைக் குறைந்த அப்ளிகேஷனாக உள்ளது. ஒரு மிதக்கும் விண்டோவில் அதை இயக்கும் வகையில், வீடியோவை இடைநிறுத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுவதில்லை.

மேலும், அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதால், நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும் போது கூட, யூடியூப் வீடியோக்களை கண்டு மகிழ முடியும்.

தனக்கே உரிய சில கட்டுப்பாடுகளோடு இந்த அப்ளிகேஷன் கிடைக்கப் பெறுகிறது. இதை பயன்படுத்தி யூடியூப் வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியும் என்றாலும், உங்கள் யூடியூப் கணக்கில் உள்நுழைய முடியாது. நீங்கள் ஏற்கனவே சந்தாதாரராக சேர்ந்துள்ள வீடியோக்களைப் பார்க்க வேண்டுமானாலும், நியூபைப்-பில் சென்று தேடி கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

இந்த அப்ளிகேஷன், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கப் பெறுவதில்லை என்பதால், மூன்றாம் தரப்பு ஆன்ட்ராய்டு ஸ்டோருக்கு சென்று, அங்கிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பாப்அப் ப்ரவுஸர் பீட்டா

பாப்அப் ப்ரவுஸர் பீட்டா

இந்த ப்ரவுஸரின் மூலம் ஒரு மிதவை விண்டோவில் இணையதளத்தை உலாவ முடிகிறது. இந்த இணைய ப்ரவுஸர், அதன் பீட்டா நிலையில் செயல்படுகிறது என்பது தான், இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை. இதனால் இந்த ப்ரவுஸரை பயன்படுத்தி, முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளில் நுழைவது அல்லது பணியாற்றுவதை நீங்கள் தவிர்க்க வேண்டியுள்ளது.

கேஎம்பிளேயர்

கேஎம்பிளேயர்

இந்த வீடியோ பிளேயருக்கு என்று பல தனித்துவம் வாய்ந்த அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த கேஎம்பிளேயரில் உள்ள சிறந்த அம்சம் என்பது, பிக்சர் இன் பிக்சர் முறை ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பன்முக பணிகளை செய்ய முடியும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதோடு, பெரும்பாலான வீடியோ முறைகளை இந்த அப்ளிகேஷனில் இயக்க முடிகிறது. மிகவும் பிரபலமான மல்டிமீடியா பிளேயர்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. 26 மொழிகளை ஆதரிக்கக் கூடிய இந்த அப்ளிகேஷன், லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

பைலட் லைசன்ஸ் தேவையில்லை; யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்: அசத்தும் வோக்ஸ்வாகன்.!பைலட் லைசன்ஸ் தேவையில்லை; யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்: அசத்தும் வோக்ஸ்வாகன்.!

ஃப்ளோட்டிங் ஆஃப்ஸ்

ஃப்ளோட்டிங் ஆஃப்ஸ்

உங்கள் ஆன்ட்ராய்டு சாதனத்தில் உள்ள மற்ற எல்லா அப்ளிகேஷன்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மிதவை அப்ளிகேஷனாக இது செயல்படுகிறது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, பாப்-அப் விண்டோவிற்குள் மற்ற அப்ளிகேஷன்களைப் பெற முடிகிறது. இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, நோட்டிஃபிக்கேஷன் பாரின் இடது பக்கத்தில் ஃபிளோட்டிங் விண்டோஸ் தோன்றுகிறது. அதன்பிறகு உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதை தனிப்பயனாக்கி கொள்ள முடியும். மற்ற அப்ளிகேஷன்களை இயக்குவதற்கு, கீழ்க்காணும் காரியங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டியுள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)
நினைவகத்திற்கு அனுமதி தேவை

நினைவகத்திற்கு அனுமதி தேவை

மற்ற அப்ளிகேஷன்கள் மீதான செயல்பாட்டை இயக்குதல்

இந்த அப்ளிகேஷனுக்கு தேவைப்படும் அனுமதிகளை நீங்கள் அளித்த பிறகு, உங்கள் சாதனத்தில் அது இயங்க ஆரம்பிக்கிறது. உங்கள் சாதனத்தில் உள்ள பெரும்பாலான அப்ளிகேஷன்களை இயக்குவதற்கு, இந்த ஃபிளோட்டிங் அப்ளிகேஷன் உதவுகிறது.

முடிவுரை

மேலே குறிப்பிட்ட முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி, யூடியூப் வீடியோக்களையும் மற்ற வீடியோக்களையும் நீங்கள் பார்க்க முடியும் என்பதோடு, பிக்சர் இன் பிக்சர் முறையில் மற்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தவும் முடியும். எனவே, ஓரியோ புதுப்பிப்பில் கிடைக்கப் பெறும் நவீன அம்சங்களை உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்த, மேற்கூறிய எந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய போகிறீர்கள்? உங்கள் சாதனத்தில் சிறப்பாக செயல்படும் அப்ளிகேஷனை குறித்து, எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
One of the many features that you can enjoy on your Android device even if it doesn’t run on Oreo is the Picture in Picture mode.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X