Home
How to

ஏர்டெல்-சியோமி ஸ்பெஷல் : 3ஜிபி விலையில் 3 மாத கால 15ஜிபி டேட்டா..!

By Muthuraj

இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழும் பார்தி ஏர்டெல் தனது புதிய போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவை எதிர்த்துபல சலுகைகள் மற்றும் கட்டண திருத்தங்களை நிகழ்த்தி வருகிறது உடன் ஒவ்வொரு பயனரும் சில நாட்களுக்கு இலவசமாக 4ஜி தரவு பெற முடியும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டமொபைல்களுக்கும் சலுகை வாய்ப்பையும் ஏர்டெல் வழங்கி வருகிறது.

மேலும் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்ற கருவிகள் முழு இலவச 4ஜி தரவை பெற தகுதியான சாதனங்களாய் இருப்பது ஒருபக்கம் இருக்க அந்த பட்டியலில் சியோமி ரெட்மீ நோட் 3 கருவியும் உள்ளது. இந்த சாதன பயனர்கள் 3ஜிபி அளவிலான டேட்டா விலையில் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் 15 ஜிபி வரையிலான 4ஜி தரவை பெற முடியும்.

அதை பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

வழிமுறை #01

வழிமுறை #01

ஏர்டெல் வழங்கும் இந்த சலுகையை பெற உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு சியோமி ரெட்மீ நோட் 3 கருவியாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் பின்னர் கீழ்வரும் வழிமுறைகளை செயல்படுத்தவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் நீங்கள் ஒரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். நீங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் என்றால் நீங்கள் இந்த வாய்ப்பை பெற தகுதியுடையவர்கள் அல்ல.

வழிமுறை #03

வழிமுறை #03

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால் இந்த சலுகையை பெற உங்கள் சியோமி ரெட்மீ நோட் 3 கருவியில் இருந்து இந்த லின்க் இணைப்பை அணுகவும் - www.airtellive.com/offers

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வழிமுறை #04

முக்கியமாக நீங்கள் ஒரு ஏர்டெல் இண்டர்நெட் திட்டத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் வைஃபை மூலம் இந்த இணைப்பிற்குள் உங்களால் நுழைய இயலாது.

வழிமுறை #05

வழிமுறை #05

குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்த பின்னர், நீங்கள் சலுகை பெற தகுதி உடையவரா இல்லையா என்பது காட்டப்படும். நீங்கள் தகுதி உடையவராக இருப்பின் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்களை பின்பற்றி 'ஆக்டிவேட் நௌவ்' கிளிக் செய்து அதே இணைப்பில் 1ஜிபி அளவிலான 4ஜி தரவு பெரும் ஒரு ரீசார்ஜ் நிகழ்த்தவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #06

வழிமுறை #06

இப்படியாக நீங்கள் இதே நடைமுறையை பின்பற்றி, 1ஜிபி அளவிலான 3 ரீசார்ஜ்தனை 3 மூன்று மாதங்களுக்கு நிகழ்த்தினால் உங்களுக்கு 3 மாதங்களுக்கான 15ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவு வழங்கப்படும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வெறும் ரூ.93/-க்கு 10 ஜிபி ஜியோ 4ஜி தரவு பெறுவது எப்படி..?

Best Mobiles in India

English summary
How to Get 15 GB 4G data at the Price of 1 GB for 3 months on Airtel with Xiaomi Redmi Note 3. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X