விண்டோஸ் அப்டேட் கோளாறுகளை சரி செய்ய சூப்பர் டிப்ஸ்.!

விண்டோஸ் தானாக அப்டேட் ஆகும் போது ஆன்டிவைரஸ் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் ஒவ்வொரு ஆன்டிவைரஸ் மென்பொருள்களும் வெவ்வேறு விதமாக இயங்கும்.

|

விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு அதிகப்படியான அப்டேட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கொஞ்சமும் இடைவெளியின்றி அப்டேட்கள் வழங்கப்படுவதால், சில சமயங்களில் டவுன்லோடு அல்லது இன்ஸ்டால் ஆவதில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

விண்டோஸ் அப்டேட் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி?

இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, விண்டோஸ் சார்பில் உங்களுக்கு எரர் மெசேஜ் அனுப்பப்படும், எனினும் அதை கொண்டு எதையும் செய்ய முடியாது. இந்த தொகுப்பில் விண்டோஸ் அப்டேட் செய்யும் போது எழும் பொதுவான சில பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். துவங்கும் முன், உங்களது வைபை இணைப்பு சீராக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். சில சமயங்களில் இண்டர்நெட் இணைப்பு காரணமாகவும் பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டு.

விண்டோஸ் அப்டேட் டிரபிள்ஷூட்டர்

விண்டோஸ் அப்டேட் டிரபிள்ஷூட்டர்

அப்டேட் சார்ந்த விவகாரங்களில் முதல் செய்ய வேண்டியது இது தான்ய விண்டோஸ் அப்டேட் டிரபிள்ஷூட்டர் விண்டோஸ் அப்டேட் மூலம் ஏற்பட்ட பிரச்சனையை தானாக ஸ்கேன் செய்து, அதனை புரிந்து கொண்டு பிரச்சனையை சரி செய்யும். பெரும்பாலான சமயங்களில் இந்த வழிமுறை சீராக வேலை செய்யும். இதே வழிமுறையில் கம்ப்யூட்டர் சீராக வேலை செய்யும் பட்சத்தில் ரீபூட் செய்து கம்ப்யூட்டரில் உள்ள பிழையை மீண்டும் சரிபார்க்கலாம்.

 அப்டேட் டவுன்லோடு ஃபோல்டர்

அப்டேட் டவுன்லோடு ஃபோல்டர்

நீங்கள் டவுன்லோடு செய்யும் ஃபைல் ஸ்டிரக் ஆனாலோ அல்லது விண்டோஸ் டவுன்லோடு செய்யப்பட்ட ஃபைல்களை இன்ஸ்டால் செய்ய முடியாமல் போனால் பிரச்சனை ஃபைலில் தான் இருக்கிறது. இதனை சரி செய்ய டவுன்லோடு ஃபோல்டரில் உள்ள அப்டேட் செய்யப்பட்ட ஃபைல்களை அழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கம்ப்யூட்டரில் மீண்டும் முதலில் இருந்து அனைத்து ஃபைல்களையும் டவுன்லோடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.


இந்த ஃபைல்களை டெலீட் செய்ய விண்டோஸ் கீ + Rபட்டனை க்ளிக் செய்து ‘C:WindowsSoftwareDistributionDownload' உடனே என்டர் பட்டனை க்ளிக் செய்யலாம். இனி ஃபோல்டரில் உள்ள ஃபைல்களை மட்டும் அழிக்க வேண்டும். ஃபைல்களை டெலீட் செய்ததும், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து மீண்டும் விண்டோஸ் அப்டேட் செய்ய வேண்டும்.

ஆன்டிவைரஸ் மென்பொருளை டிசேபிள் செய்யவும்

ஆன்டிவைரஸ் மென்பொருளை டிசேபிள் செய்யவும்

விண்டோஸ் தானாக அப்டேட் ஆகும் போது ஆன்டிவைரஸ் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் ஒவ்வொரு ஆன்டிவைரஸ் மென்பொருள்களும் வெவ்வேறு விதமாக இயங்கும். தொடர்ச்சியாக விண்டோஸ் அப்டேட் செய்யும் போது பிரச்சனை எழுந்தால், கம்ப்யூட்டரில் உள்ள ஆன்டிவைரஸ் மென்பொருளை டிசேபிள் செய்ய வேண்டும்.

டிரைவ் மற்றும் விபிஎன்களை டிஸ்கென்க்ட் செய்யவும்

டிரைவ் மற்றும் விபிஎன்களை டிஸ்கென்க்ட் செய்யவும்

டிவிடி டிரைவ், எஸ்டி கார்டு ரீடர் உள்ளிட்டவற்றை கம்ப்யூட்டரில் இருந்து டிஸ்கனெக்ட் செய்ய வேண்டும். இவற்றை சேஃப் ரிமூவ் மூலம் பாதுகாப்பாக டிசேபிள் செய்வது நல்லது. மேலும் 0x80200056 and 0x800F0922- இது போன்ற எரர்கள் வந்தால் விபிஎன் சேவைகளையும் டிசேபிள் செய்ய வேண்டும்.

மீடியா கிரியேஷன் டூல் பயன்படுத்தலாம்

மீடியா கிரியேஷன் டூல் பயன்படுத்தலாம்

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் எந்த வழிமுறையும் வேலை செய்யாத பட்சத்தில் மீடியா கிரியேஷன் டூல் பயன்படுத்தலாம். மீடியா கிரியேஷன் டூல் விண்டோஸ் 10 இயங்குதளத்துக்கான இன்ஸ்டாலேஷன் ஃபைலை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அப்கிரேடு செய்ய முயற்சிக்கும்.

எனினும், இவ்வாறு செய்யும் முன் உங்களது மிகமுக்கிய தகவல்களை பேக்கப் செய்து கொள்வது நல்லது. மீடியா கிரியேஷன் டூல் உருவாக்க கீழே வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை 1: முதலில் மைக்ரோசாஃப்ட் இன் கெட் விண்டோஸ் 10 ‘Get Windows 10' பக்கம் செல்லவும்.

வழிமுறை 2: இனி டவுன்லோடு டூல் நௌ "Download tool now' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: குறிப்பிட்ட ஃபைலை சேவ் செய்து அதன் பின் ஓபன் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். .

வழிமுறை 5: இனி அப்கிரேடு திஸ் பிசி நௌ ‘Upgrade this PC now' ஆப்ஷனை க்ளிக் செய்து நெக்ஸ்ட் ‘Next' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 6: இறுதியில் இன்ஸ்டால் செய்ய கோரும் ஆப்ஷனை Click on ‘Install'.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளில் உங்களது பிரச்சனை சரி செய்யப்பட்டு இருக்கும்.

Best Mobiles in India

English summary
How to fix Windows Update problems : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X