Home
How to

வாட்ஸ்ஆப் கனெக்ஷனில் கோளாறு சரி செய்வது எப்படி??

By Meganathan

எந்நேரமும் வாட்ஸ்ஆப் யூஸ் பண்ணிட்டு திடீர்னு கொஞ்ச நேரம் அந்த வேலை செய்யாம போனா எப்படியிருக்கும். வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையாக சிலருக்கும் இருக்கலாம், சிலருக்கு நிம்மதியாகவும் இருக்கலாம் கொஞ்சம் பேர் வாட்ஸ்ஆப் போனா வேற ஆப் இருக்குனு சும்மா கூட இருந்திடலாம். ஆனா வாட்ஸ்ஆப் கொடுத்த வசதி எல்லா செயலியும் கொடுக்காதே.?

திடீர்னு உங்க வாட்ஸ்ஆப் கனெக்ட் ஆகாமல் போகும் போது என்ன செய்யனும்னு கீழ் வரும் ஸ்லைடரிலேயே பாருங்க.!

ரீஸ்டார்ட்

ரீஸ்டார்ட்

முதலில் ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும், இவ்வாறு செய்யும் போதே பெரும்பாலான பிரச்சனைகள் சரியாகிடும். ரீஸ்டார்ட் செய்ய முடியாதென்றால் போனினை ஃபிளைட் மோடில் வைத்து சில நிமிடம் கழித்து அதனினை நார்மல் மோடில் வைக்கலாம்.

வை-பை

வை-பை

ஸ்மார்ட்போனில் வை-பை கனெக்ஷன் அல்லது மொபைல் டேட்டா சீராக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். எப்பொழுதும் வை-பை ஆன் செய்யப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சனையை தவிர்க்க முடியும்.

டேட்டா கனெக்ஷன்

டேட்டா கனெக்ஷன்

வை-பை பயன்படுத்திட்டு திடீரென வை-பை இல்லாத வேறு இடத்திற்கு வந்திருக்கும் போது மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். பலரும் மொபைல் டேட்டா மற்றும் வை-பை பயன்பாடுகளை மறந்து செயலியை குறை கூறுவர்.

பேக்கிரவுன்டு டேட்டா

பேக்கிரவுன்டு டேட்டா

வாட்ஸ்ஆப் செயலியில் பேக்கிரவுன்டு டேட்டா முடக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். ஒரு வேலை மொபைல் டேட்டா கனெக்ஷனில் மட்டும் வாட்ஸ்ஆப் வேலை செய்யாமல், வை-பை கனெக்ஷனில் வேலை செய்யும் பட்சத்தில் ஏபிஎன் செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். இதனை மொபைல் சரி செய்பவரிடம் கொண்டு சென்று மாற்றுவது நல்லது.

அப்டேட்

அப்டேட்

இண்டர்நெட் கனெக்ஷன்கள் சரியாக இருப்பின் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு ஆப் ஸ்டோர் சென்று செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

முந்தைய வழிமுறைகள் எதுவும் வேலை செய்யாத பட்சத்தில் வாட்ஸ்ஆப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Fix the 'WhatsApp Not Connecting' Issue Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X