வோடபோன் நெட்வர்க் பிரச்சனையைச் சரி செய்வது எப்படி?

By Meganathan
|

நெட்வர்க் பிரச்சனை ஏற்படுவதைப் போல் வேறு எதுவும் நம்மை அதிகம் பாதிக்க முடியாது. அதுவும் மிகவும் முக்கியமான பணிகளின் போது நெட்வர்க் பிரச்சனை நம்மைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.

அதனாலேயே நெட்வர்க் பிரச்சனையை எதிர்கொள்ள உதவும் பயனுள்ள வழிமுறைகளை இங்குத் தொகுத்திருக்கின்றோம். அந்த வகையில் வோடபோன் சேவையைப் பயன்டுத்துவோர் நெட்வர்க் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

ரீஸ்டார்ட்

ரீஸ்டார்ட்

நெட்வர்க் சார்ந்த பிரச்சனைகளைச் சரி செய்யக் கருவியினை ரீஸ்டார்ட் செய்வது நல்ல பலன்களை தரும். மேலும் இதர பிரச்சனைகளுக்கும் ரீஸ்டார்ட் நல்ல தீர்வாக இருக்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர் பிளேன் மோட்

ஏர் பிளேன் மோட்

சில சமயங்களில் ஏர் பிளேன் மோடினை ஆன் செய்து அப்படியே விட்டிருப்போம், இதனால் கருவி ஏர் பிளேன் மோடில் இல்லை என்பதைச் சரி பார்க்க வேண்டும்.

சிம் கார்டு

சிம் கார்டு

இன்னமும் பிரச்சனை நீடிக்கும் பட்சத்தில் கருவியில் இருந்து சிம் கார்டினை கழற்றி மீண்டும் பொருத்தலாம். இவ்வாறு செய்யும் போது சில நிமிடங்களில் நெட்வர்க் சீராகி விடும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நெட்வர்க்

நெட்வர்க்

ஸ்மார்ட்போனின் நெட்வர்க்தனை தானே தேர்வு செய்யக் கோரும் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும், இதற்கு Settings > Wireless and Network Settings > Mobile Networks > Mobile operators ஆப்ஷன் சென்று தானாக நெட்வர்க் தேர்வு செய்யும் ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

ஃபர்ம்வேர் அப்டேட்

ஃபர்ம்வேர் அப்டேட்

இவை அனைத்தும் வேலை செய்யாத பட்சத்தில் கருவியில் ஃபர்ம்வேர் அப்டேட் செய்ய வேண்டும், இதற்கு Settings > About Phone > Software update > Check for updates ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
How to Fix No Signal Problem on Vodafone Network

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X