பிஎஸ்என்எல் நெட்வர்க் சிக்னல் கோளாறுகளை சரி செய்வது எப்படி?
ஸ்மார்ட்போன் கருவிகள் நம் வாழ்வில் நீக்க முடியாத அங்கமாகி விட்டது. சீரான நெட்வர்க் இல்லாத போன்களை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு கடினமான ஒன்றாக இருக்கின்றது. பிஎஸ்என்எல் சேவையைப் பயன்படுத்தும் பலரும் நெட்வர்க் கோளாறுகளை சந்தித்திருப்பர்.
பிஎஸ்என்எல் சேவைகளைப் பொருத்த வரை இன்று வரை அதிகம் குற்றம் சாட்டப்படும் விடயமாக இருப்பது நெட்வர்க் அல்லது சிக்னல் கோளாறுகளாகவே இருக்கின்றது. பொதுவாக நெட்வர்க் கோளாறுகளுக்கான தற்காலிக தீர்வாக கருவிகளை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்வது இருக்கின்றது. ஆனால் இதுவொன்றும் நிரந்தர தீர்வு கிடையாது.
அவ்வாறாக பிஎஸ்என்எல் நெட்வர்க் கோளாறுகளை நிரந்தரமாக சரி செய்வது எப்படி என்பதைப் பார்ப்போமா?

3ஜியில் இருந்து 2ஜிக்கு மாற வேண்டும்
குறிப்பிட்ட ஏரியாவில் பிஎஸ்என்எல் நெட்வர்க் சிக்னல் குறைவாக இருக்கும் போது உடனடியாக சிக்னல் பெற கருவியினை 3ஜியில் இருந்து 2ஜிக்கு மாற்ற வேண்டும். இது நெட்வர்க் வேகத்தைக் குறுக்கிட்டு சீரான சிக்னல் பெற வழி செய்யும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பூஸ்டர் இன்ஸ்டால் செய்ய வேண்டும்
சீரான சிக்னல் பெற கருவியில் பூஸ்டர் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது போன் சிக்னல் அமைப்புகளை மாற்றியமைத்து சீரான சிக்னல் கிடைக்கும்.

திசையை மாற்றுவது
நெட்வர்க் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு மொபைல் வைத்திருக்கும் திசையை மாற்றுவது தான். இவ்வாறு செய்யும் போது ஆண்டெனா இருக்கும் இடத்தில் சீரான சிக்னல் கிடைக்கும்.
புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மற்ற எண்களுக்குக் கால் ஃபார்வேர்டு செய்யலாம்
குறிப்பிட்ட இடத்தில் சிக்னல் கிடைக்கவில்லை எனில் மற்ற எண்களுக்கு அழைப்புகளை ஃபார்வேர்டு செய்வது நல்ல பலன்களை தரும்.

குற்றச்சாட்டு
பிஎஸ்என்எல் ஆன்லைன் மூலம் உங்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம். அல்லது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்றும் உங்களது பிரச்சனைகளை தெரிவித்து அதற்கான தீர்வுகளை பெற முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications








