கூகுள் குரோமில் ஏற்படும் Aw Snap பிழையை சரி செய்வது எப்படி?

கூகுள் குரோமில் ஏற்படும் Aw Snap பிழையை சரி செய்வது எப்படி?

By Siva
|

நீங்கள் கூகுள் குரோம் பிரெளசரை பயன்படுத்தி வரும் நபராக இருந்தால் கண்டிப்பாக Aw Snap என்ற பிழையை ஒருமுறையோ அல்லது பல முறையோ சந்தித்து இருப்பீர்கள். பொதுவாக இந்த பிழை நீங்கள் ஏதாவது ஒரு இணையதளத்தின் முகவரி லிங்கை பயன்படுத்தும் போது ஏற்பட்டிருக்கும்

கூகுள் குரோமில் ஏற்படும் Aw Snap பிழையை சரி செய்வது எப்படி?

இவ்வாறான பிழை வரும்போது பெரும்பாலானோர் செய்வது அந்த இணையதள பக்கத்தை ரீலோட் செய்வது அல்லது அதே இணையதள பக்கத்தை வெறொரு டேப்பில் ஓப்பன் செய்வது. இது இந்த பிழையை தற்காலிகமாக சரி செய்துவிடும் என்றாலும், இந்த பிழையை நிரந்தரமாக நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது தெரியுமா?

ஜியோ ப்ரைம் : கோபத்தை கிளப்பும் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.!

இந்த Aw Snap பிழையை நீக்க தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த பிழை எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் பிரெளசர் கேட்சி மெமரி குறைவாக இருந்தாலோ, ஸ்லோ இண்டர்நெட் கனெக்சன் இருந்தாலோ, ஹார்ட்வேர்டில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ அல்லது பிளக்-இன்ஸ்கள் சரியாக இல்லாமல் இருந்தாலோ ஏற்படும். முதலில் இவை அனைத்தையும் சோதனை செய்துவிட்டு பின்னர் கீழ்க்காணும் எளிய வழிகளை பின்பற்றுங்கள்.

ஸ்டெப் 1:

ஸ்டெப் 1:

உங்கள் கம்ப்யூட்டரில் இண்டர்நெட் இணைப்பு உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் பிரெளசிங் டேட்டாவை கிளியர் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Settings > Advanced settings > Privacy > Clear browsing data ஆகிய ஸ்டெப்ஸ்கள்தான்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆன்டிவைரஸ் அல்லது மால்வேர் அந்த குறிப்பிட்ட இணணயதளத்தை முடக்கியுள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். அவ்வாறு இருந்தால் டிஸேபிள் அல்லது டர்ன் ஆப் செய்து கொள்ள வேண்டும். இதில் இந்த பிரச்சனை சரியாகி விட்டால் இந்த குறிப்பிட்ட இணையதளத்தை ஓப்பன் செய்யும்போது மட்டும் ஆன்டிவைரஸ்-ஐ டீஆக்டிவேட் செய்துவிடுங்கள்ள்

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

மால்வேர் மட்டும் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்காது. சில சமயம் வேறு காரணங்கள் அல்லது வைரஸ் காரணமாக கூட இருக்கலாம். எனவே உங்கள் கம்ப்யூட்டரை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும். அல்லது குரோம் க்ளின் அப் டூல் என்பதை பயன்படுத்தி தேவையில்லாத சாப்ட்வேர்களை கண்டுபிடித்து அதை நீக்கிவிடுங்கள்

ஸ்டெப் 4:

ஸ்டெப் 4:

ஒருவேளை இது செயல்படவில்லை என்றால் பிரச்சனை இல்லை. உடனே Ctrl+F5 இரண்டையும் அழுத்தி ரெபிரெஷ் செய்யுங்கள். இதனா இந்த பிரச்சனை சரியாகிவிட வாய்ப்பு உள்ளது.

ஸ்டெப் 5:

ஸ்டெப் 5:

மேற்கண்ட நான்கு ஸ்டெப்களும் உதவவில்லை என்றால் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது கூகுள் குரோமை ரீஇன்ஸ்டால் செய்துவிட வேண்டியதுதான். ஆனால் அதற்கு முன்னர் உங்களுடைய அனைத்து புக்மார்க்குகளையும் பேக்கப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Aw Snap! If you've used Chrome browser in your life, I am sure you must have come across this error. Usually, this happens, when you try to go to a website link and all of a sudden it crashes.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X