டிரைவர் உங்களுக்கு அளித்த உபெர் ரேட்டிங்கை பார்ப்பது எப்படி.?
டிரைவர் உங்களுக்கு அளித்த உபெர் ரேட்டிங்கை பார்ப்பது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.
நீங்கள் ஒரு உபெர் சவாரி மேற்கொண்ட பிறகு, நீங்கள் ஐந்து முதல் ஒன்று வரை என்ற அளவில் உங்கள் சவாரி சார்ந்த மதிப்பீட்டை வழங்குமாறு உங்களிடம் உபெர் கேட்டுக்கொள்ளும். ஆனால் இதே முறையில் உபெர் டிரைவரிடம் பயணித்த உங்களின் மதிப்பீடும் கேட்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா..? டிரைவர் வழங்கும் அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் உபெர் சேவை அணுக்கள் பரிசீலிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.?

அப்படியான உங்களின் உபெர் ரேட்டிங் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? அதை கண்டுபிடிப்பது உண்மையில் மிகவும் எளிது. தமிழ் கிஸ்பாட் இங்கு வழங்கும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.!
உபெர் ஆப் வழியாக...
1. உங்கள் ஸ்மார்ட்போனில் உபெர் ஆப்பை திறக்கவும்.
2. மேல் இடது பக்கத்தில் உள்ள ப்ரொபைல் ஐகானை டாப் செய்யவும்.
3. ஹெல்ப் டாப் செய்யவும்.
4. அக்கவுண்ட் டாப் செய்யவும்.
5. ஐ வுட் லைக் டூ னோ மை ரேட்டிங் என்ற ஆப்ஷனை டாப் செய்யவும்.
6. நீல நிற சப்மிட் பொத்தானை டாப் செய்யவும்.
7. உங்களின் உபெர் ரேட்டிங் ஆனது மின்னஞ்சல் வழியாக மிக விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
உபெர் வலைதளம் வழியாக..
1. உபெர் ரேட்டிங் பக்கம் சென்று சைன்இன் டூ கெட் ஹெல்ப் என்ற ஆப்ஷனைக கிளிக் செய்யவும்.
2. உங்களின் உபெர் சான்றுகளை உள்ளிடவும் மற்றும் உள்நுழையவும்.
3. சப்மிட் என்பதை டாப் செய்யவும்.
4. உங்களின் உபெர் ரேட்டிங் ஆனது மின்னஞ்சல் வழியாக மிக விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!


Click it and Unblock the Notifications