பேஸ்புக் உங்களிடம் சேகரித்த தகவல்களை கண்டறிந்து தடுப்பது எப்படி?

  பிரபல சமூகவலைதளமான பேஸ்புக் நிறுவனம் ஆண்ட்ராய்டு போனில் இருந்து அழைப்பு விவரங்கள், தொடர்புகள்(contacts) பற்றிய தகவல்கள், குறுஞ்செய்திகளை சேகரித்ததாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. அந்நிறுவனத்தின் சி.ஈ.ஓ-வான மார்க் சுக்கர்பெர்க்-ம் அதை பொதுவெளியில் உறுதிபடுத்தியுள்ளதன் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

  பேஸ்புக் உங்களிடம் சேகரித்த தகவல்களை கண்டறிந்து தடுப்பது எப்படி?

  இந்த தகவல்கள் இணையத்தில் பரவிய போது, பயனர்களின் முகநூல் அனுபவத்தை மேம்படுத்தவே அவர்களின் தகவல்களை சேகரித்ததாக அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அதுவும் இல்லாமல் இந்த தகவல்களை விற்கவோ அல்லது பிற செயலிகளுக்கு பகிரவோ இல்லையென்றும் கூறியுள்ளது. மேலும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி விவரங்களை ஆண்ட்ராய்டு போனிலிருந்து சேகரிக்கவில்லை என்றும் உறுதிசெய்துள்ளது.

  அப்படியே பேஸ்புக் நிறுவனம் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி விவரங்களை ஆண்ட்ராய்டு போனிலிருந்து சேகரித்திருந்தால், என்ன தகவல்கள் சேகரிக்கப்பட்டன, மீண்டும் அப்படி நிகழாமல் அதை தடுப்பது எப்படி என்பதே அடுத்த கேள்வியாக இருக்கும். அதற்கான விடை இதோ..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  என்னென்ன தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்பதை எப்படி அறிவது?


  படி #1

  உங்கள் கணிணியில் https://register.facebook.com/download/ என்ற இணையமுகவரிக்கு செல்லவும்.

  படி #2

  அதில் உங்கள் பேஸ்புக் கணக்கின் ஜெனரல் செட்டிங்ஸ் மெனுவில் ‘Download a copy' என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

  படி #3

  பின்னர் 'Share my archive' என்பதை கொண்ட ‘Download your Information' பக்கத்திற்கு அழைத்து செல்லும். அதை கிளிக் செய்வதன் மூலம் தரவுகளை பதிவிறக்கம் செய்ய தயாராகும். தயாரானவுடன் 'Download Archive' என்பதை கிளிக் செய்யவும்.

  பதிவிறக்கம்

  படி #4

  தரவுகள் அனைத்தும் ஜிப் (.Zip) பைலாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதன் பின் அதை வெளிக்கொணர முடியும். பின்னர் உங்கள் ப்ரொபைல் பக்கத்தின் இடது கீழ் பகுதியில் HTML and contact_info என்பதை தேர்வு செய்யவும்.

  படி #5
  அதன் பிறகு, அடிப்பக்கம் வரை ஸ்க்ரோல் செய்து உங்களிடம் சேகரித்த அழைப்பு மற்றும் SMS பற்றிய விவரங்களை காணலாம்.

  விளம்பர பகுதியில்(Ads Section) உள்ள ஆவணத்தை கொண்டு உங்களிடம் திரட்டப்பட்ட தகவல்களை எப்படி விளம்பரதாரர்கள் பயன்படுத்துகின்றனர் என அறியலாம்.

  பேஸ்புக் தகவல் திரட்டுவதை தடுப்பது எப்படி?

  Data sync என்பது ஆன் செய்திருப்பதால் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதை ஆப் செய்வதன் மூலம் பேஸ்புக் உங்கள் தொடர்புகள் பற்றிய தகவல்களை சேகரிப்பது தடுக்கப்படும். அதை செய்ய முகப்பு பக்கத்தில் வலது பக்க மூலையில் உள்ள உங்கள் ப்ரொபைல் போட்டோவை கிளிக் செய்யவும். பின்னர் 'People' என்பதில் 'synced contacts' ஐ தேர்வு செய்யவும். பேஸ்புக் லைட் பயனர்கள் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து 'App Setting'ல் Continuous Contacts Upload தேர்வு செய்து ync Your Call and Text History optionஐ ஆப் செய்யவும்.

  மெசன்ஜர்

  ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்ட தொடர்புகள் பற்றிய விவரங்களை மெசன்ஜர்-ல் உள்ள Manage Imported Contacts ஐ பயன்படுத்தி நீக்கலாம். அனைத்து தொடர்புகளையும் 'Delete all' ஐ பயன்படுத்தி ஒரேயடியாக நீக்கலாம். மீண்டும் தகவல்கள் பதிவேற்றம் செய்வதை தடுக்க continuous sync என்பதை மெசன்ஜர் செயலியில் ஆப் செய்து வைக்கவும்.

  How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
  ஐபோன்-இயங்குதளம் பாதுகாப்பானது

  ஐபோன்-இயங்குதளம் பாதுகாப்பானது

  இப்போதைக்கு, அழைப்பு மற்றும் தொடர்புகள் விவரம் ஆண்ட்ராய்டு கருவிகளில் இருந்து மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது. ஐபோன்- இயங்குதளம் இந்த சர்ச்சைகளில் இருந்து விலகி பாதுகாப்பாகவே இருக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  How to find your call and SMS data collected by Facebook and stop it ; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more