வை-பை திருடர்களைக் கண்டறிந்து அவர்களை பிளாக் செய்வது எப்படி??

By Meganathan
|

எல்லோரையும் போல் உங்களது வீட்டிலும் வை-பை கனெக்ஷன் இருக்கின்றதா. மற்றவர்களைப் போல் இல்லாமல் உங்களது வை-பை இண்டர்நெட் உங்கள் நினைவின்றி அக்கம் பக்கத்தில் இருப்போரும் பயன்படுத்துகின்றனரா.??

கவலை வேண்டாம், உங்களது வை-பை கனெக்ஷனை யார் யார் திருட்டு தனமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்த எளிய வழிமுறைகள் இருக்கின்றது. அவற்றில் சில ஸ்லைடர்களில்..

கண்டறிதல்

கண்டறிதல்

முதலில் உங்களது வை-பை கனெக்ஷனினை யார் யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஃபிங் (Fing) எனும் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். உடனே டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

ஃபிங் செயலியை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்ய வேண்டும், இனி திரையில் உங்களது நெட்வர்க் பெயர் - ரீஃபிரெஷ் (Refresh) மற்றும் செட்டிங்ஸ் (Settings) என இரு ஆப்ஷன்கள் காணப்படும்.

கிளிக்

கிளிக்

உங்களது வை-பை கனெக்ஷனினை யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள ரீஃபிரெஷ் (Refresh) என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின் சில நிமிடங்களில் எத்தனைக் கருவிகள் உங்களது வை-பை நெட்வர்க் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

முகவரி

முகவரி

உங்களுக்கு அறிமுகமில்லாத கருவிகளை பிளாக் செய்ய, குறிப்பிட்ட கருவியின் மேக் முகவரியைப் பயன்படுத்த வேண்டும். ஃபிங் செயலி மூலம் மேக் முகவரியை அறிந்து கொள்ள முடியும்.

ரவுட்டர்

ரவுட்டர்

பிளாக் செய்ய முதலில் உங்களது வை-பை ரவுட்டரில் லாக் இன் செய்ய வேண்டும். பின் செக்யூரிட்டி ஆப்ஷன் சென்று MAC Filtering, மற்றும் Add Device ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

பதிவு

பதிவு

இனி நீங்கள் பிளாக் செய்ய வேண்டிய மேக் முகவரியைக் குறிப்பிட்டு Apply, Save அல்லது OK என்ற ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

ரவுட்டரில் லாக் இன் செய்யப்பட்டிருக்கும் போது உங்களது வை-பை பாஸ்வேர்டினை மாற்றுவதும் நல்லது.

Best Mobiles in India

English summary
How to find who's stealing your WiFi and block them Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X