பேஸ்புக் மெசேஞ்சரில் மறைக்கப்பட்ட கேம்களைக் கண்டறிவது எப்படி?

  பேஸ்புக் மெசேஞ்சர் மூலம் எங்கேயும் எப்போதும் மற்றவர்களுடன் சாட்டிங் தொடர்பில் இருக்க முடிகிறது. இது தவிர நமக்கு பொழுதுபோக்கை அளிக்கக் கூடிய எண்ணற்ற கேம்களும் இதில் மறைக்கப்பட்ட முறையில் காணப்படுகின்றன. இதில் சில கேம்கள் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளன. இவற்றை வெளிக் கொண்டு வர, நீங்கள் சற்று பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த கேம்களில் சிலவற்றை உங்களால் இயக்க முடியாமல் இருக்கும்பட்சத்தில், உங்கள் பகுதியில் அவை கிடைக்கப் பெறுவது இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

  பேஸ்புக் மெசேஞ்சரில் மறைக்கப்பட்ட கேம்களைக் கண்டறிவது எப்படி?

  இந்த மெசேஞ்சர் அப்ளிகேஷனில் எண்ணற்ற கேம்களை, பேஸ்புக் நிறுவனம் சேர்த்து வருகிறது. இவை வழக்கமான இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இந்த கேம்களின் பொத்தானை, கேமரா பொத்தானுக்கு அருகில் இருப்பதைக் காணலாம்.

  அங்கிருந்த ஏதாவது ஒரு கேமை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். இவை பேஸ்புக் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டவை அல்ல. பல புதிய மேம்பாட்டாளர்களின் கைவண்ணத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கேம்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் வெளியிடுகிறோம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  மறைக்கப்பட்ட பேஸ்புக் கால்பந்து கேம்

  பேஸ்புக் கால்பந்து கேம் என்பது எந்தப் பிரச்சனையும் இல்லாத ஒன்று என்பதோடு, யூரோ 2016 பந்தயத்தை தழுவியதாக அமைந்துள்ளது. மெசேஞ்சரின் நவீன மடக்குசெயலில் கால்பந்து இமோஜியை கண்டுபிடித்து, உங்கள் நண்பர் ஒருவருக்கு அனுப்ப முடியும்.

  நீங்கள் அனுப்பிய சாக்கர் இமோஜியின் மீது கிளிக் செய்யும் போது, மெசேஞ்சரில் ஒரு கேம் திறப்பதைக் காணலாம். மைதானத்தில் இருந்து வெளியேற வேண்டுமானால் பந்தின் மீது தட்டினால் போதுமானது. இந்த ஆட்டத்தில் 10 புள்ளிகளைக் கடந்த பிறகு, இந்த கேம் மிகவும் விறுவிறுப்பாகச் செல்வதாக உணர முடிகிறது.

  மறைக்கப்பட்ட பேஸ்புக் கூடைப்பந்து கேம்

  இந்த மறைக்கப்பட்ட கூடைப்பந்து கேம், அதிக விறுவிறுப்பை அளிக்கக்கூடியது என்பதோடு, நம்மை அடிமைப்படுத்தக் கூடியது. இதை மிக எளிதாக விளையாட முடியும். இந்த அப்ளிகேஷனின் நவீன மடக்குசெயலை நீங்கள் இயக்கும் போது, மெசேஞ்சரில் ஒரு கூடைப்பந்தின் இமோஜியை உங்களின் நண்பர் ஒருவருக்கு அனுப்ப வேண்டும்.

  அதன்பிறகு கூடைப்பந்து இமோஜியின் மீது கிளிக் செய்து, மறைக்கப்பட்ட இந்த கேமை திறந்து விளையாட ஆரம்பிக்கலாம். இந்த கூடைப்பந்து கேமை, உங்கள் நண்பருடன் சேர்ந்து சாட்டிங் விண்டோவில் உங்களால் விளையாட முடியும்.

  நம்ம ஊரு ஆதார் அடையாளம் எவ்வாளவோ பரவாயில்ல; சீனாக்காரன் இன்னும் மோசம்.

  Instagram Simple Tips and Tricks (TAMIL)
  மறைக்கப்பட்ட பேஸ்புக் செஸ் கேம்

  மறைக்கப்பட்ட பேஸ்புக் செஸ் கேம்

  பேஸ்புக்கில் உள்ள இந்த மறைக்கப்பட்ட செஸ் கேமை கண்டறிவது, சற்று தந்திரமான செயலாக உள்ளது. இதற்கு நீங்கள் '@fbchessp play' என்று சாட்டிங் விண்டோவில் தட்டச்சு செய்ய வேண்டும். அதன்பிறகு, ஹாரி பாட்டர் பாணியில் ஒரு டிஜிட்டல் செஸ்போர்டு தோன்றுவதை நீங்கள் காணலாம்.

  ஒரு சில குறுக்குவழிகள் மற்றும் இருப்பிடங்களை நினைவில் கொண்டு இந்த கேமை எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதை குறித்து நீங்கள் தெளிவாக அறிந்த நபராக இருக்க வேண்டும். ஒரு நகர்வை செய்வதற்கு, துண்டு சுருக்கத்துடன் கூட '@fbchess' என்று தட்டச்சு செய்து, நீங்கள் நகர்த்த விரும்பும் சதுரத்தின் குறிப்பிட்ட குறியீட்டை குறிப்பிட வேண்டும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Apart from letting you chat with others for free anywhere and anytime Facebook Messenger also has an increasing number of games that offer some secret entertainment. Some games are hidden and you need to do a little work to unlock them. If you cannot access some of these games, then it means that those are not available in your region.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more